2010/07/02

20வது நாள்..காலிறுதி இரண்டாவது போட்டி

58/64 உருகுவே எதிர் கானா 1:1(0:1)
(4:2 Penalty)
Muntari (45+)Forlan(54)

இன்றைய காலிறுதி ஆட்டத்தின் 2வது போட்டியில் தென் அமெரிக்க உருகுவே ஆபிரிக்காவின் ஒரேயொரு காலிறுதித் தெரிவான கானாவுடன் மோதுகின்றது.ஏற்கனவே 2 தடவை உலக நாயகனாக தெரிவான உருகுவே இறுதியாக நாயகனானது 60 ஆண்டுகளுக்கு முன்பதாக. ஓர் ஆபிரிக்க நாடாவது அடுத்த சுற்றுக்கு தேர்வாகாதா என்கிற ஆவலுடன் ஏராளமான ஆபிரிக்க ரசிகர்கள் விளையாட்டரங்கில் கூடி கானாவுக்கு உற்சாகம் ஊட்டிக்கொண்டிருக்க,

போட்டி ஆரம்பமானது முதல் இருதரப்பும் சமனான அளவில் விளையாடிக் கொண்டிருந்தனர். முற்பாதி நேரம் முடிவடைந்து மேலதிகமாக 2 நிமிடம் கொடுத்த வேளையில் கானாவின் வீரர் முன்ராரி மிகத்தூரத்திலிருந்து ஓர் அற்புதமான கோலை அடித்தார். முற்பாதியில் கானா 8முறையும் உருகுவே 4 முறையும் கோலடிக்க எத்தனித்திருந்தன. உருகுவே வீரர் ஒருவர் மஞ்சள் அட்டை பெற்றிருந்தார்.

54ம் நிமிடத்தில் உருகுவே தனது முதல் கோலை அடித்தது. அடித்தவர் போர்லன்.சமநிலை கண்ட அணிகள் மேலும் விறுவிறுப்பாக போட்டியிலீடுபட்டன. ஆயினும் ஆட்டம் முடியும் நேரம்வரை வேறுகோல்கள் அடிக்கப்படாமையினால் மேலதிக 30 நிமிட விளையாட்டுக்கு நடுவர்முடிவெடுத்தார். மேலதிக நேரத்திலும் கடைசி நிமிடம் வரை கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. ஆனால் கடைசிநிமிடத்தில் கானாவுக்கு ஒரு தண்டனை உதை வாய்ப்பு கிடைத்தது. அதனைக் கோலாக்கி கானா வெல்லும் என்கிற நிலையில் அதனை அடித்த வீரர் Asamao Gyan கோலடிக்கத் தவறினார். அருமையான ஒரு வெற்றி வாய்ப்பினை கானா இழந்தது. அதனால் தண்டனை உதைமூலம் வெற்றி தீர்மானிக்கப்பட வேண்டியதாயிற்று.

தண்டனை உதையில் 4:2 கணக்கில் உருகுவேவெற்றி பெற்றது. அது 40 ஆண்டுகளின் பின்னர் அரையிறுதிப்போட்டிக்கு நெதர்லாந்தை எதிர்த்து விளையாட உள்ளது


நடுவர்:Olegario Benguerenca போர்த்துக்கல்
அட்டைகள்
மஞ்சள்: உருகுவே 3/ கானா 3
சிவப்பு: உருகுவே 1
விளையாட்டரங்கு :Soccer City Stadium, Jehannerberg


.Virakesari.lk

No comments: