2010/07/11

25ம் நா ள் - - - - இ று தி மோ த ல்



64/64 நெதர்லாந்து எதிர் ஸ்பானியா 0:1 (0:0)
(நேரநீடிப்பு)

கோல் விபரம்:INIESTA (117)

மஞ்சள் அட்டை: நெதர்லாந்து 8: ஸ்பானியா 3
சிவப்பு அட்டை நெதர்லாந்து :1


ஒருமாத காலமாக இடம்பெற்ற கால்பந்தாட்ட கோலாகலத்தின் உச்சக்கட்டம் இன்று. உலகின் அனைத்துக் கண்டங்களிலுமிருந்து 32 நாடுகள் போட்டிக்கு வந்தன. ஒவ்வொன்றாக தோற்று வெளியேற இறுதியில் இறுதி மோதலில் மோத இரு ஐரோப்பிய அணிகள் . இதுவரை தோற்காமல் இறுதிப்போட்டிக்கு வ்ந்திருக்கும் நெதர்லாந்து , முதல் போட்டியில் தோற்று பின் வெற்றிகளைக் குவித்த ஸ்பானியாவுடன் மோத உள்ளது. இரண்டுமே இதுவரை உலககிண்ணத்தினை வெற்றி கொள்ளாதவை. எனவே உலககிண்ண வெற்றி அணியில் இன்று ஒரு நாடு இணையப்போகின்றது.

தென் ஆப்ரிக்காவின் முன்னாள் அதிபர் இவ்விறுதிப்போட்டியில் பங்கு கொண்டமை முக்கியமான அம்சமாக இருந்தது. பல வெளிநாட்டுத் தலைவர்கள், பிரமுகர்கள், நெதர்லாந்து, ஸ்பானிய அரச குடும்பத்தவர்கள் என

ஏராளமானோர் இறுதியாட்டம் காண சமூகமளித்திருந்தனர்.
FIFAதலைவருடன் விளையாட்டரங்குக்கு வந்த தென்னாபிரிக்க அதிபர் வீரர்களுக்கு கைலாகுகொடுத்து போட்டியை ஆரம்பித்து வைத்தார். போட்டிக்கு நடுவராக இங்கிலாந்து நாட்டின் HOWARD WEBB. விளையாட்டரங்கு தென் ஆபிரிக்காவின் மிகப்பெரிய 90 ஆயிரம்பேரை உள்ளடக்கக்கூடிய SOCCER CITY STADIUM-JOHANNESBERG ஆகும்.

நெதர்லாந்து சம்பியன் ஆனால் அனைத்துப்போட்டிகளிலும் வென்ற 2வது அணியெனும் பெருமை பெறும். பிரேசில் 1970ல் அவ்வாறு அனைத்திலும் வென்று சாதனை படைத்துள்ளது. ஸ்பானியா சம்பியனானால் ஐரோப்பிய சம்பியன், உலககிண்ணச் சம்பியன் என இரு தகமைகளைச் சமகாலத்திக் கோட 3வது அணியாக மாறும். ஏற்கனவே இப்பெருமையை ஜேர்மனியும் பிரான்சும் கொண்டிருக்கின்றன. இத்தகைய நிலவரத்தில் போட்டி ஆரம்பமானது.

போட்டி தொடங்கியதிலிருந்து ஸ்பானியாவீரர்கள் ஆட்டத்தில் ஆதிக்கம் கொண்டிருந்தார்கள். 10 நிமிடத்தில் 40% : 60% என களநிலை நிலவியது. கோல்கள் இன்றி விதிமீறிய விளையாட்டும் 5 மஞ்சள் அட்டைகளுமாக முன்பாதி ஆட்டம் முடிவடைந்தது. முன்பாதியில் 56% பந்து இருப்பு ஸ்பானியா வசமே இருந்தது. பின் பாதி தொடங்கி யபின்னும் மஞ்சள் அட்டை கொடுத்தல் தொடர்ந்தது. அடுத்தடுத்து நெதர்லாந்தின் 2 வீரர்கள் அட்டை வாங்கினர். 61ம் நிமிடத்தில் நெதர்லாந்தின் ரொபன் கோலடிக்கும் ஓர் அரிய வாய்ப்பை தவறவிட்டார்.

90நிமிடங்கள் முடிந்தும் கோல் எதுவும் இல்லாமையால் மேலதிகமாக 30 நிமிடநேர விளையாட்டுக்கு போட்டி நீடிக்கப்பட்டது. தொடர்ந்தும் ஸ்பானியாவே போட்டியில் பந்தினை விளையாடியதாகக் கணிக்கப்பட்டது. நெதர்லாந்து 6 அட்டைகளை வாங்கிய நிலையில் மேலதிக நேரத்தை எதிர்கொண்டது. நெதர்லாந்து 109 ம் நிமிடத்தில் ஒரு சிவப்பு அட்டையை வாங்கியது. 2 நிமிடம் கழித்து 1 மஞ்சள் அட்டை என மிக நெருக்கடிக்குள் நெதர்லாந்து வீரர்கள் அழுத்தங்களுக்கு ஆளாயினர். 1974,1978 போலவே 2010ம் அமையும் நிலைஉருவானது. ,ஸ்பானியாவிடம் இறுதிப் போட்டியில் தோற்று வெளியேறியது.

117ம் நிமிடத்தில் ஸ்பானியா கோலடித்தது.அடித்தவர் இனிஎஸ்ரா.
அவரே ஆட்டத்தின் நாயகனாக தெரிவாகினார். ஸ்பானியா தோல்வியில் தொடங்கி இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளது. அவர்களது விளையாட்டுத் தந்திரோபாயம் மிக வித்தியாசமானது. அதிக கோல்களை அவர்கள் அடிப்பதில்லை. தங்களுக்குள் அதிகநேரம் பந்தை விளையாடி காலத்தை இழுத்தடித்து, எதிரணியினர் கோலடிப்பதனை தடுத்துக்கொண்டிருந்து விட்டு , இறுதி நேரத்தில் ஒருகோலை அடித்து வெற்றியை வசப்படுத்திவிடுவார்கள். இவ் உலககிண்ண சுற்றுப்போட்டியில் அவர்கள் ஆடிய 7 ஆட்டங்களில் 8 கோல்களை மட்டுமே (ஜேர்மனி 16 கோல்கள் அடித்தது)அடித்துள்ளனர். எதிராக 2 கோல்களை பெற்றுள்ளனர். (சுவிஸ்1+சிலி1)

இந்த தடவையே அவர்கள் அரையிறுதி, இறுதி என முன்னேறிச் சாதனை புரிந்துள்ளனர்.

இறுதிப்போட்டி பற்றி தமிழ் இதழ்களில்..................!








தென்னாபிரிக்காவில் கோலாகலம் - உலக கால்பந்துக் கிண்ணம் யாருக்கு? நெதர்லாந்து, ஸ்பெயின் இன்று மோதல்

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-07-11 08:50:33| யாழ்ப்பாணம்]
உலகக்கிண்ண கால்பந்தாட்டத் தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்துக்கு வந்து விட்டது. ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்க இறுதிப் போட்டி இன்று ஜோகனஸ் பேர்க் சாக்கர்சிட்டி மைதானத்தில் நடைபெறு கிறது. உலகக்கிண்ணத்தை கைப்பற்றுவதற்கான இந்த ஆட்டத்தில் ஐரோப்பாக் கண்டத்தைச் சேர்ந்த ஸ்பெயின், நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.

இரு அணிகளுமே சம பலம் பொருந்தி யது என்பதால் இறுதிப் போட்டி மிகவும் விறு விறுப்பாக இருக்கும் என எதிர் பார்க்கப்படு கின்றது. இரு அணிகளும் முன்னணி நாடுகளை வீழ்த்தி கிண்ணத்தைக் கைப்பற்றும் இறுதி ஆட்டத்துக்கு நுழைந்துள்ளன. ஐரோப்பிய சம்பியனான ஸ்பெயின் அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. நெதர்லாந்து அணி மூன்றாவது முறையாக தகுதி பெற்றுள்ளது. 1974ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் ஜேர்மனி அணியிடமும் 1978ஆம் ஆண்டு ஆர்ஜென்டீனா அணியிடமும் தோல்வி யடைந்து கிண்ணத்தை இழந்தது.

இரு அணிகளுமே முதல் முறையாக உலகக்கிண்ணத்தை வெல்லும் ஆர்வத்தில் உள்ளன. ஸ்பெயின் நெதர்லாந்து அணி களில் உலகின் தலை சிறந்த வீரர்கள் உள்ள னர். தங்கப் பாதணியை பெறுவதில் ஸ்பெ யின் அணியின் டேவிட் வில்லாவும் நெதர் லாந்து அணியின் வெஸ்லி ஸ்டைனரும் முனைப்புடன் உள்ளனர். இருவரும் தலா 5 கோல்கள் அடித்து முன்னிலையில் உள்ளனர். ஐரோப்பா கிண்ணத்தை இரண்டு முறை கைப்பற்றிய (1964, 2001) ஸ்பெயின் அணி யின் வி றொனான்டஸ் டொரஸ், பெட்ரோ, இனேஸ்டா, பி அலோன்சா, செர்ஜியோ ரமோஸ் போன்ற உலகின் சிறந்த வீரர்கள் உள்ளனர்.

அணித்தலைவரும் கோல்காப்பாளரு மான இகேர் கேசிலாஸ் ஸ்பெயின் அணி யின் முதுகெலும்பாக உள்ளார். அவர் உல கின் தலைசிறந்த கோல் காப்பாளருமாவார். ஜேர்மனி அணிக்கெதிராக அரையிறுதியில் கோல் வாய்ப்பை இரண்டு முறை தடுத்தார். 1988ஆம் ஆண்டு ஐரோப்பிய கோப்பை யை வென்ற நெதர்லாந்து அணி இத் தொட ரில் தோல்வி எதனையும் சந்திக்காமல் இறு திப் போட்டிக்கு நுழைந்துள்ளது.அந்த அணியில் ரோபன், டிர்க்கியூட், ரொபின் வான்பெர்சி, அணித்தலைவர் ஜிலோனி வானபிரோன் ஹோஸ்ட், மார்க் பொம்மல் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

32 ஆண்டுகளுக்குப் பின்னர் இறுதிப் போட்டியில் நுழைந்துள்ள நெதர்லாந்து அணி இம் முறை கிண்ணத்தை நழுவ விட்டு விடக் கூடாது என்ற நோக்கில் உள்ளது. ஸ்பெயின் அணி நடுக்களத்திலும் பின் களத்திலும் வலுவாகவுள்ளது. நெதர்லாந்து அணி முன்களத்திலும், நடுக்களத்திலும் பல மாகவுள்ளது. இரு அணிகளும் தாக்குதல் ஆட் டத்தில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கை நேரப்படி இன்று நள்ளிரவு 12 மணிக்கு இறுதிப் போட்டி ஆரம்பமாகிறது.

உலககிண்ணத்தை வெல்வது யார்? ஸ்பெயின், நெதர்லாந்து மோதல்
7/11/2010 11:31:03 AM -உலக உதைப்பந்தாட்ட இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது.நீயா? நானா? என்ற விறுவிறுப்புடன் ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.எந்த அணி வெற்றி பெறும் என்ற கணிப்புகள் பரவலாக பல்வேறு விலங்குகளிடம் இடம்பெற்றன.

உலக்ககிண்ண உதைப்பந்தாட்ட போட்டி முடிவுகளை சரியாக எதிர்வு கூறிய போல் கடல் வாழ் உயிரினம் உலகம் முழுவதும் பிரசித்திபெற்றுள்ளது. இதே போன்று சிங்கப்பூரிலுள்ள கிளியொன்றும் உலகக்கிண்ணத் தொடரின் பல பெறுபேறுகளை சரியாக எதிர்வுகூறி வந்துள்ளது.மணி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கிளி பிரபல்யம் ஆகவில்லை..

இருப்பினும் அக்டோபஸின் கணிப்பு சரியாகும் என்ற என்ற எதிர்பார்ப்புடன் ஸ்பெயின் உதைப்பநாதாட்ட ரசிகர்களும் ,அக்டோபஸ்ஸின் கணிப்பிற்கு ஜேர்மன் அணி சவாலாக விளையாடும் என்ற எண்ணத்துடன் நெதர்லாந்து ரசிகர்களும் இன்றை போட்டிகளை காண ஆவலாக உள்ளனர்.


இன்று உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி-குவியும் தலைவர்கள், பிரபலங்கள்

ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 11, 2010, 13:37

Leaders and Stars jet to South Africa for WC Final


ஜோஹன்னஸ்பர்க்: ஜோஹன்னஸ்பர்க்கில் இன்று நடைபெறவுள்ள உலகக் கோப்பைக் கால்பந்து இறுதிப் போட்டியைக் காண உலகத் தலைவர்கள், பல்துறை பிரபலங்கள் அங்கு குவிந்து வருகின்றனர்.

இன்று நள்ளிரவு நெதர்லாந்துக்கும், ஸ்பெயினுக்கும் இடையே இறுதிப் போட்டி நடைபெறுகிறது. ஜோஹன்னஸ்பர்க்கின் புறநகரான சோவிடோவில் உள்ள சாக்கர் சிட்டி ஸ்டேடியத்தில் இந்த விறுவிறுப்பான போட்டி நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டியைக் காண பல்வேறு உலகத் தலைவர்கள், பல்துறைப் பிரபலங்கள் ஜோஹன்னஸ்பர்க் வந்து குவிந்துள்ளனர்.

நேரடியாகவும், டிவிகள் மூலமும் இறுதிப் போட்டியை 500 மில்லியன் பேர் கண்டு ரசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து தென்ஆப்பிரிக்க அதிபர் [^] ஜேக்கப் ஜூமா கூறுகையில், ஒரு வரலாற்றுப் படைப்பின் இறுதிக்கட்டத்திற்கு நாம் வந்துள்ளோம். ஆப்பிரிக்க கண்டத்தின் முதல் உலகக் கோப்பைக் கால்பந்து பெரும் வரலாறு படைத்துள்ளது. ஒட்டுமொதத் ஆப்பிரிக்கர்களுக்கும் பெருமை தேடித் தந்துள்ளது என்றார் பெருமையுடன்.

தொடர்ந்து அவர் கூறுகையில், நெதர்லாந்துக்கும், ஸ்பெயினுக்கும் இடையிலான போட்டியைக் காண அனைவரும் ஆர்வத்துடன் உள்ளோம். மிகவும் வெற்றிகரமான முறையில் இந்த போட்டித் தொடர் முடிய வேண்டும் என்ற எதிர்பார்ப்புடனும் உள்ளோம் என்றார்.

ஆப்பிரிக்கக் கண்டத்தின் முதல் உலகக்கோப்பைப் போட்டித் தொடர் முடியும் வரை ஆப்பிரிக்க மக்கள் [^] கொண்டாட்டத்தில் ஈடுபட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.



சாம்பியன் பட்டம் வெல்லப்போவது யார்? நீயா, நானா? மோதலில் நெதர்லாந்து-ஸ்பெயின்

First Published : 11 Jul 2010 12:00:00 AM IST

ஜோகன்னஸ்பர்க், ஜூலை 10: உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெறும் இறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து-ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன.உலகின் 6 கண்டங்களில் இருந்து 32 அணிகள் பங்கேற்ற இந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.கால்பந்து விளையாட ஆரம்பித்து 76 ஆண்டுகளுக்குப்பின் முதன்முறையாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளது ஸ்பெயின்.1974-ம் ஆண்டு மேற்கு ஜெர்மனியிடமும், 1978-ம் ஆண்டு ஆர்ஜென்டீனாவிடமும் இறுதி ஆட்டத்தில் தோல்வியடைந்து கோப்பையை தவறவிட்ட நெதர்லாந்து அணி தற்போது மூன்றாவது முறையாக இறுதி ஆட்டத்துக்கு தகுதிபெற்றுள்ளது.இதனால் இரு அணிகளும் உலகக் கோப்பையை வெல்லும் துடிப்போடு இறுதி ஆட்டத்தில் களமிறங்குகின்றன.எச் பிரிவில் இடம்பெற்றிருந்த ஸ்பெயின் முதல் சுற்றான லீக் ஆட்டங்களில் தட்டுத்தடுமாறி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது. ஆனால் இரண்டாவது சுற்றில், வடகொரியாவுக்கு எதிராக கோல் மழை (7 கோல்கள்) பொழிந்த பலம் வாய்ந்த போர்ச்சுகல்லை 1-0 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு தகுதிபெற்றது. காலிறுதியில் பராகுவேயை எதிர்கொண்ட ஸ்பெயின் 1-0 என்ற கணக்கில் வென்று அரை இறுதிக்கு முன்னேறியது. ஒன்றிரண்டு கோல்கள் அடித்தே காலிறுதி வரை முன்னேறிய ஸ்பெயின், அரை இறுதியில் பலம் வாய்ந்த ஜெர்மனியுடன் மோதியது.இந்த ஆட்டத்தில் ஜெர்மனி வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தபோது வழக்கம்போல் ஒரு கோல் அடித்து ஜெர்மனிக்கு அதிர்ச்சித் தோல்வியை அளித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது ஸ்பெயின்.இறுதிஆட்டம் வரை முன்னேறியுள்ள ஸ்பெயின் லீக் சுற்று நீங்கலாக மற்ற சுற்றுகளில் தலா ஒரு கோல் மட்டுமே அடித்துள்ளது. ஜெர்மனிக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர்கள் வியூகம் வகுத்து ஆடிய விதம் கால்பந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.அதேபோன்று இறுதி ஆட்டத்திலும் அவர்கள் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆட்டங்களில் இக்கட்டான நேரங்களில் கோல் அடித்து அணியை வெற்றிப்பாதையில் அழைத்து வந்த டேவிட் வில்லா, இந்த ஆட்டத்திலும் சிறப்பாக விளையாடி வெற்றித்தேடித்தருவார் என்று எதிர்பார்ப்பு ஸ்பெயின் கால்பந்து ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.டேவிட் வில்லாவுடன் ஷேவி அலோன்ஸô, ஆண்ட்ரே இனியெஸ்டா, கார்லஸ் புயோல், ஜெல்சன் பெர்னாண்டஸ் போன்ற முன்னணி வீரர்களும் கை கோர்த்துள்ளதால் நெதர்லாந்து கடும் சவாலை சந்திக்க வேண்டியிருக்கும். லீக் சுற்றில் ஆரம்பித்து ஓர் ஆட்டத்தில் கூட தோற்காமல் பலம் வாய்ந்த அணிகளை வெற்றி கண்டு இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளது நெதர்லாந்து.லீக் சுற்றில் இ பிரிவில் இடம்பெற்றிருந்த நெதர்லாந்து 3 ஆட்டங்களிலும் வெற்றிபெற்று எளிதாக இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது. இரண்டாவது சுற்றில் 2-1 என்ற கணக்கில் ஸ்லோவேகியாவை வென்ற நெதர்லாந்து, காலிறுதியில் உலகக் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாகக் கருதப்பட்ட பிரேசிலை எதிர்கொண்டது.இந்த ஆட்டத்தில் 2-1 என்ற கணக்கில் பிரேசிலுக்கு அதிர்ச்சித் தோல்வியை அளித்தது நெதர்லாந்து. இதைத்தொடர்ந்து அரை இறுதியில் 3-2 என்ற கணக்கில் உருகுவே அணியை வீழ்த்தி இறுதிச்சுற்றில் நுழைந்துள்ளது நெதர்லாந்து. தான் ஆடிய எல்லா ஆட்டங்களிலும் இரண்டு, மூன்று கோல்களை அடித்து அற்புதமாக ஆடி வந்துள்ள இந்த அணி. முன்னணி வீரர்கள் வெஸ்லி ஸ்நீஜ்டெர், ராபன் அர்ஜென், ராபினவான் பெர்ஸி ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.கடந்த ஆட்டங்களில் எதிரணிகளுக்கு கடும் சவாலை அளித்து வந்த இந்த முன்னணி வீரர்கள், ஸ்பெயின் அணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்குவார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.இரு அணிகளும் இதுவரை உலகக் கோப்பையை வெல்லாத நிலையில் இந்த முறை எப்படியாவது சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற கனவில் உள்ளன. இரு நாட்டு ரசிகர்களும் மிகவும் ஆர்வத்தோடு இறுதி ஆட்டத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.டென்னிஸ் ஜாம்பவான் ஸ்பெயினின் ரஃபேல் நடால், தமது நாட்டு அணி வெல்லும் என்ற நம்பிக்கையில் இறுதி ஆட்டத்தைக் காண்பதற்காக ஜோகன்னஸ்பர்க் வந்துள்ளார்.மேற்கு ஜெர்மனியில் உள்ள ஆக்டோபஸ் பால், உலகக் கோப்பையை ஸ்பெயின் வெல்லும் என்றும், சிங்கப்பூர் கிளி மணி நெதர்லாந்து வெல்லும் என்றும் ஆருடம் கூறியுள்ளன. இதுவும் கால்பந்து ரசிகர்களிடையே பரபரப்பையும், விறுவிறுப்பையும் ஏற்படுத்தியுள்ளன.ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து நாடுகளில் தங்கள் நாட்டு வீரர்களுடைய ஜெர்சியின் வண்ணங்களில் ஆங்காங்கே கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. இதனால் இருநாடுகளும் விழாக்கோலம் பூண்டுள்ளது.நீயா, நானா? மோதலில் சாம்பியன் பட்டம் வெல்லப்போவது இறுதிஆட்டத்தில் பங்கேற்கும் நெதர்லாந்து-ஸ்பெயின் அணிகள் மட்டுமல்ல; ஆருடம் கூறியுள்ள ஜெர்மனியின் ஆக்டோபஸ் பாலும், சிங்கப்பூர் கிளி மணியும் தான்.இறுதி ஆட்டத்திற்கு பிறகு புகழின் உச்சத்தை அடையப்போவது சாம்பியன் பட்டம் வெல்லும் அணி மட்டுமல்ல; ஆருடம் கணித்துள்ள இருவரில் ஒருவரும்தான்.