2010/05/27
ஆடுகளங்கள்
உலக்கிண்ணப்போட்டிகள் விளையாடப்படவுள்ள தென் ஆபிரிக்க விளையாட்டரங்குகள் கீழே உள்ளன.
ஜூன் 11 ல் தொடக்கப்போட்டியும் ஜூலை 11ல் இறுதிப்போட்டியும் SOCCER CITY என்கிற இந்த விளையாட்டரங்கிலேயே நடைபெறவுள்ளன.
http://www.sa-venues.com/2010/mpumalanga.htm
உலகக்கிண்ணம்2006ஜேர்மனி - வலைப்பதிவின் சில அம்சங்கள்
FRIDAY, NOVEMBER 20, 2009
உலககிண்ணம் 2010
அடுத்த ஆண்டில் தென் ஆபிரிக்காவில் கால்பந்தாட்ட உலகக்கிண்ணப் போட்டி நடைபெறவுள்ளது. அதில் பங்கு கொள்வதற்காக உலகம் முழுவதிலும் நடைபெற்ற தெரிவுப்போட்டிகளின் வாயிலாக உலககிண்ணப்போட்டிகளில் பங்கு கொள்ளவுள்ள 32 அணிகளும் தெரிவு செய்யப்பட்டுவிட்டன. அவற்றின் விவரங்கள் வருமாறு
ஐரோப்பிய மண்டலம் 13 அணிகள்
ஜேர்மனி - இங்கிலாந்து - நெதர்லாந்து - ஸ்பெயின் - செர்பியா - டென்மார்க் - இத்தாலி சுவிச்சர்லாந்து - சுலோவாக்கியா - கிரேக்கம் - போர்த்துக்கல் - பிரான்சு - சுலோவேனியா
ஆபிரிக்க மண்டலம் 6 அணிகள்
தென்னாபிரிக்கா - ஐவரிகோஸ்ற் - கானா - நைஜீரியா - கமரூன் - அல்ஜீரியா
ஆசிய மண்டலம் 4 அணிகள்
வடகொரியா - தென்கொரியா - ஜப்பான் - அவுஸ்திரேலியா
தென் அமெரிக்க மண்டலம் 5 அணிகள்
பிரேசில் - ஆர்ஜன்ரினா - உருகுவே - பெரகுவே - சிலி
வட அமெரிக்க மண்டலம் 3 அணிகள்
மெக்சிக்கோ - ஐக்கிய அமெரிக்கா - கொண்டூராஸ்
ஓசியானியா மண்டலம் 1 அணி
நியூசிலாந்து
தென் ஆபிரிக்கா உலக கிண்ணப்போட்டி
அனைத்துலக கால்பந்து ஆர்வலர்கள் காண்பதற்கு ஆவலுடன் காத்திருக்கும் தென்னாபிரிக்க உலககிண்ணப் போட்டிகள் ஆரம்பமாவதற்கு இன்னும் சிறிது காலமே உள்ளது. உலநாடுகளில் பெரும்பாலானவை பங்கு கொண்ட தெரிவுப்போட்டிகளில் வென்ற 32 நாடுகள் இறுதிப்போட்டியில் பங்கேற்க உள்ளன. இவ்வுலககிண்ணப் போட்டிகள் தொடர்பான செய்திகள் இவ்வலைப்பதிவில் தமிழில் வெளியிடப்படவுள்ளன.உலககிண்ணம் 2006 ஜேர்மனி- யின் தொடர் வலைப்பதிவாக இந்தஉலககிண்ணம்-தென் ஆபிரிக்காஅமைகிறது. 

ஜேர்மனி உலக கிண்ண இறுதிப் போட்டியில் மோதியஇத்தாலிய பிரான்சிய அணிகள் மீண்டும் வருகின்றன. இதுவரை நடைபெற்ற அனைத்து உலக கிண்ணப் போட்டிகளிலும் பங்கு கொண்ட ஒரேயணியான பிரேசிலும் போட்டிக்கு வருகின்றது. ஐரோப்பாவிலிருந்து 13 நாடுகள் இம்முறையும் பங்கு கொள்ளுகின்றன. ஆபிரிக்காவிலிருந்து 6 நாடுகளும் வட அமெரிக்காவிலிருந்து 3 நாடுகளும் தென் அமெரிக்காவிலிருந்து 5 நாடுகளும் வடகொரியா தென்கொரியா ஜப்பான் ஆகிய 3 ஆசிய நாடுகளும் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளும் பரபரப்பான இப்போட்டியில் விளையாடவுள்ளன.
ஜூன் 11ம் திகதி தென் ஆபிரிக்காவுக்கும் மெக்சிக்கோவுக்குமான முதலாவது போட்டியுடன் சுற்றுப்போட்டி ஆரம்பமாகவுள்ளது
Subscribe to:
Posts (Atom)