2010/06/20

10வது நாள்...20.6.2010


29/64 பிரேசில் எதிர் ஐவரிகோஸ்ற் 3:0(1:0)

இன்றைய 3 ஆட்டத்தில் உலககிண்ண சாதனைநாடான பிரேசில் ஐவரிகோஸ்ற்றை எதிர்த்து ஆடுகிறது. 84 ஆயிரத்துக்கு மேற்பட பார்வையாளர்கள். பிரேசில் 3 ஐவரிகோஸ்ற் 1 என முன்னையபோட்டி புள்ளி நிலைவரம்.
போட்டி தொடக்கம் முதலே விறுவிறுப்பாக இருந்தது. 25வது நிமிடத்தில் பிரேசில் ஒரு கோல் அடித்தது. அடித்தவர் FABIANO. இருதரப்பும் தொடர்ந்து கடுமையாக விளையாடின. 31ம் நிமிடத்தில் ஐவரிகோஸ்ற் வீரர் TIENEக்கு நடுவர் எச்சரிக்கை அட்டை கொடுத்தார். முற்பாதி 1:0 என்கிற நிலையில் முடிவுற்றது.
2வது பாதிதொடங்கி 5 நிமிடத்தில் அடுத்த கோலை FABIANOவே அடித்தார்.
தொடர்ந்தும் கோல். 62நிமிடத்தில். அடித்தவர் பிரேசிலின் ELANO. அடுத்து 5நிமிடங்களில் காயம்காரணமாக அவர் வெளியேறினார். பதிலீடாக ALVESஉள்ளே வந்தார். தொடர்ந்தும் காலடிப்பதற்கான எத்தனங்கள் பிரேசில் தரப்பிலிருந்து தொடர்ந்தது. ஆனால் 79ம் நிமிடத்தில் தலையால் இடித்து அழகாக ஒரு கோலை ஐவரிகோஸ்ற் அணித்தலைவர்DROGBA இறக்கினார்.
இருதரப்பு வீரர்களிடையே குழப்பங்கள் நிகழ்ந்தன. 85ம் நிமிடத்தில் மஞ்சள் அட்டை பெற்ற பிரேசிலின் நட்சத்திரவீரர் KAKA 88ம் நிமிடத்தில் இன்னொரு எதிர்தரப்பு வீரரை இடித்தமைக்காக மஞ்சள் +சிகப்பு அட்டை கொடுத்து வெளியேற்றப்பட்டார்.
இறுதியில் 3:1 என்கிற கணக்குடன் ஆட்டம் முடிவடைந்தது. பிரேசில் அரைக்காலிறுதி சுற்றுக்காக தனது பெயரைப் பதிவு செய்தது.

நடுவர்:Lannoy/France
விளயாட்டரங்கு:Capstadt
பார்வையாளர்:84,490


28/64 இத்தாலி எதிர் நியூசிலாந்து 1:1(1:1)

தற்போதய உலக நாயகனான இத்தாலி இன்றய 2வது போட்டியில் நியூசிலாந்துடன் மோதியது. முதல் போட்டியாளர்கள் போலவே இரண்டு அணிகளுமே முன்னைய போட்டிகளில் சமநிலை கண்டதால் தலா 1 புள்ளியுடன் நின்றன.
நியூசிலாந்து 7வது நிமிடத்தில் ஒரு கோலை அடித்தது. அடித்தவர் Shane Smeltz. 28 நிமிடங்களாக நியூசிலாந்தின் இந்த முன்நிலை தொடர்ந்தது. இத்தாலி கடும்முயற்சிகள் மேற்கொண்டும் எதுவித பலனும் இருக்கவில்லை. ஆனால் 28ம் நிமிடத்தில் இத்தாலி வீரர் Daniele De Rossi யை நியூசிலாந்தின் Tommy Smith தண்டனை எல்லைக்கோட்டுக்குள்ளாக தள்ளிவிழுத்தியமை காரணமாக மஞ்சள் அட்டையும் தண்டனை உதையும் நடுவரால் வழங்கப்பட்டது. அதுவே இத்தாலிக்கு போட்டியைச் சம்ன் செய்யக்கிடைத்த வாய்ப்பாக அமைந்தது. தண்டனை உதையை பயன்படுத்தி Vincenzo Iaquinta இலகுவாக ஒரு கோலைப் பெற்றார். அதன் பின்னர் இரண்டு அணிகளும் ஒருகோலையும்
அடிக்காமையால் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. இத்தாலி வெறும் 2 புள்ளிகளுடன் 3வது போட்டியை எதிர் நோக்கி நிற்கின்றது. 24ந்திகதி ஸ்லவாக்கியாவை வென்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு நடப்புச் சம்பியன் செல்லக்கூடும்.




டுவர்: CARLOS BATRES (GUA)
விளையாட்டரங்கு:Mbombela Stadium Nelspruit
பார்வையாளர்:




27/64 பரகுவே எதிர் ஸ்லவாக்கியா 2:0(1:0)

இன்றைய முதல் போட்டியில் பரகுவே ஸ்லவாக்கியாவை எதிர்த்துப் போட்டியிட்டது. இரண்டு அணிகளுமே முன்னைய போட்டிகளில் சமநிலை கண்டதால் தலா 1 புள்ளியுடன் நின்றன. போட்டியின் தொடக்கம் முதலே பரகுவே போட்டியில் ஆதிக்கம் மிக்கதாக விளங்கியது.

இன்றைய போட்டியில் 2 கோல்களை அடித்து வென்றதன் மூலம் தனது முதல் வெற்றியைப் பரகுவே உலகக்கிண்ணம்2010ல் பதிவு செய்துள்ளது. E.VERA 27 நிமிடத்திலும் C.REVEROS 86நிமிடத்திலும் கோல்களை அடித்து பரகுவேயின் வெற்றியை உறுதிப்படுத்தினர். பரகுவேக்கு 1ம் ஸ்லவாக்கியாவுக்கு 3ம் என 4 மஞ்சள் எச்சரிக்கை அட்டைகள் வழங்கப்பட்டன. முதல் கோலடித்த வேராவே ஆட்டத்தின் நாயகனாக தெரிவானார்.

நடுவர்: Eddy Maillet/SEY
விளையாட்டரங்கு:Free State Stadium,Manquang Bloemfontein
பார்வையாளர்: