2010/06/13

3வது நாள்...13.6.2010


(08/64)ஜேர்மனி எதிர் அவுஸ்திரேலியா 4:0(2:0)

ஜேர்மனிய கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும்கொண்டாட்டமாக அமைந்துவிட்டது ஜேர்மனியின் இன்றைய ஆரம்ப அசத்தலான ஆட்டம்.
4:0 என்கிற கணக்கில் அவுஸ்திரேலியாவைத் தோற்கடித்து நம்பிக்கையுடன் 19வது உ.கி.இல் கால்பதித்துள்ளது. 3நாட்களாக நடைபெற்ற போட்டிகளில் கோல்கள் பெருமளவு அடிக்கப்படவில்லை. எனவே இன்றைய ஜேர்மனியின் ஆட்டம் கால்பந்து ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. இன்று மொத்தம் 6 கோல்கள் அடிக்கப்பட்டன.
கோல்களை அடித்தவர்களும் நேரமும் வருமாறு PODOLSKI 8 KLOSE 27 MUELLER 68 CACAU 70
மஞ்சள் அட்டை ஜேர்மனி 2 அவுஸ்திரேலியா 3

அவுஸ்திரேலியா சிவப்பு அட்டை 1

இன்றைய தினம் கோல்கள் கூடுதலாக அடிக்கப்பட்டது போல சிகப்பு அட்டைகளும் ஒவ்வொரு போட்டிக்கும் ஒவ்வொன்றாக 3 வழங்கப்பட்டு வீரர்கள் வெளியேற்றப்பட்டனர் என்பதும் முக்கியமான அம்சமாகும்.

இன்று அடித்த கோல், உ.கி.இல் குளோசவின் 11வது கோலாகும். அதிககோல் வரிசையில் அவர் 5வது இடத்துக்கு முன்னேறியள்ளார். முதலிடத்தில் ரொனால்டோ! 15 கோல்கள்!!


நடுவர்:MARCO RODRIGUEZ----Mexico

விளையாட்டரங்கு:DURBAN STADIUM

பார்வையாளர்:

(07/64)சேர்பியா எதிர் கானா. 0:1(0:0)

மிகப்பரபரப்பாக நடைபெற்ற இன்றைய 2வது போட்டியில் கானா வெற்றி பெற்றது. அவ்வெற்றி முதலாவது தண்டனை உதை மூலம் அதற்குக் கிடைத்தது. இருதரப்பும் கோல் எதுவுமின்றி போராடிக்கொண்டிருந்த வேளையில் சேர்பியவீரற் KUZMANOVIC தண்டனை பகுதிக்குள் கையால் பந்தினை மறித்ததால் தண்டனை உதை வழங்க நடுவர் முடிவெடுத்தார். அதனை நன்கு பயன்படுத்திய ASAMAOH GYAN ஒருகோலை பிரச்சனையின்றி அடித்தார்.

நடுவர்:BALDASSI/Argentina

விளையாட்டரங்கு:PRETORIA

பார்வையாளர்:



(06/64)அல்ஜீரியா எதிர் ஸ்லவேனியா 1:0(0:0)
இன்றைய முதலாவது ஆட்டம் அல்ஜீரியாவுக்கு எதிராக ஸ்லவேனியாவின் போட்டியாக அமைந்தது. இப்போட்டியில் முதல் பாதியில் எவருக்கும் கோலடிக்கும் சந்தர்ப்பம் கிட்டவில்லை. பிற்பாதியில் ஸ்லவேனியா மட்டும் ஒருகோலை அடித்தது. உ.கி. வரலாற்றில் ஸ்லவேனியாவின் முதல் வெற்றியாக இது பதிவு செய்யப்பட்டுள்ளது.

அல்ஜீரியாவின் ABDELKADER GHEZZAL நடுவர் சிவப்பு அட்டை கொடுத்து வெளியேற்றினார். இன்றைய உலக கிண்ணப்போட்டியில் முதலாவது சிவப்பு அட்டை வழங்கல் இதுவாகும்.
நடுவர்:BATRES/Guatemala

விளையாட்டரங்கு:PETER MOKABA STADIUM: Polokwane

பார்வையாளர் 35,000