2010/06/28

18வது நாள்...அரைக்காலிறுதி 3ம்நாள்


54/64 பிரேசில் எதிர் சிலி 3:0(2:0)
Juan(34) Fabiano(38)Robinho(59)

அரைக்காலிறுதி ஆட்டத்தின் 3ம் நாளில் 2ம் ஆட்டம் உலககிண்ணப் போட்டிகளில் பல சாதனைகளின் சொந்தக்காரர்களான பிரேசில் தன்னயலவரா ன சிலியுடன் ஆடும் ஆட்டமாக உள்ளது. முதல் சுற்றில் பிரேசில் 7புள்ளிகளையும் சிலி 6 புள்ளிகளையும் பெற்றிருந்தன.
ஆட்டம் தொடங்கி அரைமணிநேரம்வரை எவரும் கோலடிக்கவில்லை. பிரேசில் கூடுதலான முயற்சிகளை செய்திருந்தது. 30ம் நிமிடத்தில் எதிர்வீரரை வீழ்த்தியதற்காக KAKAவுக்கு மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது. சிவப்பு அட்டை பெற்றதனால் கடந்த போட்டியில் விளையாடாது தடுக்கப்பட்டு இன்று மீண்டும் விளையாட வந்துள்ளார். 34நிமிடத்தில் ஒரு கோணரைப் பயன்படுத்தி முதல் கோலை பிரேசில் அடித்தது. தலையால் இடித்து கோலாக்கியவர் JUAN. உடனடியாகவே அடுத்தகோல் பிரேசிலுக்கு. 38 நிமிடத்தில் அடித்தவர் FABIANO. முற்பாதி 2:1 என நிறைவுபெற்றது.
பிற்பாதியாட்டத்தில் 59ம் நிமிடம் ROBINHO பிரேசிலின் 3வது கோலை அடித்தார். தொடர்ந்து பந்தை விளையாடுவதில் இருதரப்பும் சமநிலையில் இருப்பினும் கோல் எத்த்னங்கள் பிரேசில் வீரர்களிடமே அதிகமாக இருந்தது. பல கோலடிக்கும் வாய்ப்புக்களை சிலி வீரர்கள் தவறவிட்டனர். காலிறுதி வாய்ப்பை பிரேசிலுக்கு வழங்கி சிலி சுற்றுப்போட்டியிலிருந்து வெளியேறியது.

ஆட்டத்தின் நாயகன் Robinho
நடுவர்: Howrad WEBB/England
மஞ்சள் அட்டை பிரேசில்:2 சிலி:3
விளையாட்டரங்கு:Ellis Park Stadium. Johannesberg

2வதுகோல்-FABIANO

1வதுகோல்- JUAN-
தலை இடி
3வது கோலடித்தROBINHO
நண்பர்களுடன்

53/64 நெதர்லாந்து எதிர் ஸ்லவாக்கியா 2:1(1:0)

Robben(18)Sneijder (84)Vittel(93penalty)

அரைக்காலிறுதி ஆட்டத்தின் 3ம் நாளில் முதல் சுற்றின் 3 போட்டிகளில் வெற்றியைக் குவித்த நெதர்லாந்து குழுநிலையில் ஒருவெற்றியை, ஒரு சமனைப் பெற்று 2ம் இடமாக வந்த ஸ்லவாக்கியாவுடன் இன்று மோதுகிறது.

18ம் நிமிடத்தில் நெதர்லாந்து முதலாவது கோலை அடித்தது. ROBBEN அதனை அடித்தார். 31ம் நிமிடத்தில் கையால் பந்தினைதட்டியதற்காக மஞ்சள் அட்டையையும் அவர் பெற்றார்.40ம் நிமிடத்தில் ஸ்லவாக்கியாவின் KUCKAக்கு மஞ்சள் அட்டை.
முன் பாதியாட்டம் 1:0 என்கிற நிலையில் முடிவடைந்தது. இருதரப்பும் தலா 7முறை விதியைமீறி விளை யாடியுள்ளன.நெதர்லாந்து 7 தடவையும் ஸ்லவாக்கியா 5 தடவையும் கோலடிக்க எத்தனித்துள்ளன. ஏறக்குறைய சம அளவில் பந்தை(51%:49%) விளையாடியுள்ளன.

பின்பாதியாட்டத்தில் 30 நிமிடங்கள் முடிந்தும் விளையாட்டின் போக்கில் அதிக மாற்றங்கள் இல்லை. 84ம் நிமிடத்தில் நெதர்லாந்தின் SNEIJDER 2 வது கோலை அடித்தார்.
மேலதிக நேரத்தில் தண்டனை உதைமூலம் ஸ்லவக்கியா ஒரு கோலை அடித்தது. கோல் பிரதேசத்துக்குள் நெதர்லாந்தின்STEKELENBURG விதிகளை மீறி ஸ்லவாக்கிய வீரரை வீழ்த்தியமைக்காக தண்டனை உதை வழங்கப்பட்டது. அதனைப் பயன்படுத்தி VITTEKகோலை இறக்கினார்.அத்துடன் 2:1 என்கிற நிலையில் ஆட்டம் நிறைவடைந்தது. ஆட்டத்தின் நாயகனாக ROBBEN தெரிவானார்.



நடுவர்:Alerto UNDIANO/SPAIN
மஞ்சள் அட்டை நெதர்லாந்து:2 ஸ்லவாக்கியா:3
விளையாட்டரங்கு:DURBAN Stadium

ROBBEN ன் கோல்
ஆட்டத்தின்
நாயகன்
Robben

2வது கோலடித்த சினைடரை
தூக்கி கொண்டாட்டம்