2010/06/23

13வது நாள்...23.6.2010

40/64 அவுஸ்திரேலியா எதிர் சேர்பியா



3 புள்ளிகளுடன் உள சேர்பியா 1புள்ளியைக் கொண்டுள்ள அவுஸ்திரேலியாவுடன் மோதுகிறது. வென்றால் அடுத்த சுற்று உறுதியாகிவிடும். முதல் பாதி வரை கோல்கள் எதுவும் இல்லை. இருதரப்புக்கும் ஒவ்வொரு மஞ்சள் அட்டை. 69 நிமிடத்திலும் 73ம் நிமிடத்திலும் அடுத்தடுத்து 2 கோல்களை அவுஸ்திரேலியா அதிரடியாக அடித்து சேர்பியாவின் அடுத்த சுற்றுக் கனவை உடைத்தது. ஜேர்மனி சமநிலை கொண்டால் கூட அடுத்த சுற்றுக்கு செல்ல அவுஸ்திரேலியாவின் ஆட்டம் துணைசெய்யும். தொடர்ந்து சேர்பியாவும் ஒரு கோலை 84 வது நிமிடத்தில் அடித்தது. வெல்வதற்கு இன்னும் 2 கோல் தேவை. ஆனால் வாய்ப்பு இல்லை. ஆட்டத்தின் நாயகனாக அவுஸ்திரேலியாவின் CAHILL தேர்வு செய்யப்பட்டார்.



நடுவர்:Jorge Larrionda/Uruguay
விளையாட்டரங்கு:Mbombela Stadium/ Nelspruit








39/64 ஜேர்மனி எதிர் கானா



4 புள்ளிகளுடன் 3 புள்ளிகளுடன் ஜேர்மனியும் இறுதிச்சுற்றுக்கு செல்வதற்காக மோதும் முக்கிய போட்டி இது. ஏற்கனவே முக்கிய வீரர்களுக்கு மஞ்சள் அட்டையுடனும் முன்னணி வீரர் குளோச இல்லாமலும் ஜேர்மனி விளையாடுகிறது. ஆட்டம் விறுவிப்பாகத் தொடங்கியது. ஆட்டம் தொடங்கியதிலிருந்து பந்தை அதிகம் விளையாடியவர்கள் ஜேர்மனியாக இருப்பினும் கோல்டிக்கும் வாய்ப்புகள் கானாவுக்கே கூடுதலாக இருந்தது. முதல் பாதி வரை கோல்கள் எதுவும் இல்லை.இருதரப்புக்கும் ஒவ்வொரு மஞ்சள் அட்டை.
2வது பாதியில் கோலடிக்கக் கிடைத்த ஒரு வாய்ப்பை கானாவின் அசமாஓ தவறவிட்டார். 59ம் நிமிடத்தில் ஓசில் ஒரு அற்புதமான கோலை அடித்து ஜேர்மனியை முன்னிலைக்கு கொண்டுவந்தார். அதன் பின் விளையாட்டில் விறுவிறுப்பு கூடியது. கடுமையாக முயற்சித்தாலும் கானாவால் கோலடிக்க முடியாமையால் ஜேர்மனி முதல் நிலைக்கு வந்து அடுத்த போட்டியில் இங்கிலாந்துடன் மோதும்.ஆட்டத்தின் நாயகனாக ஜேர்மனியின் OEZIL தேர்வு செய்யப்பட்டார்.



நடுவர்:Carlos Simon/Brasil

விளையாட்டரங்கு:Soccer City/Johannesburg





38/64 அமெரிக்கா எதிர் அல்ஜீரியா 1:0


இன்றைய முதற்போட்டிகளில் சமநேரத்தில் 4 கழகங்கள் மோதின. இங்கிலாந்துக்கு எதிராக ஸ்லவேனியா மோதுகிறது. 2புள்ளிகளுடன் நிற்கின்ற இங்கிலாந்து வென்றாக வேண்டும் 2வது சுற்றுக்குச் செல்ல. மற்றைய போட்டியில் அமெரிக்காவுக்கு எதிராக அல்ஜீரியா மோதுகிறது. அமெரிக்க வென்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்குச் செல்லலாம். அமெரிக்கா 2 புள்ளி அல்ஜீரியா 1 புள்ளி. முற்பாதி வரை எதுவித கோலும் இல்லை. ஆனால் எச்சரிக்கை அட்டைகளுக்கு குறைவில்லை.
90நிமிடம் முடிந்த நிலையிலும் ஆட்டம் சமனாக முடியும் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அமெரிக்காவின் டனோவன் மேலதிக நேரத்தில் ஒரு கோலை அடித்தார். 91ம் நிமி. அடிக்கப்பட்ட இந்த கோலின் மூலமாக குழுவில் முதலிடத்தை பெற்று இறுத்ச்சுற்றுக்குத் தெரிவானது.


நடுவர்:Frank De Bleeckere/Belgium
விளையாட்டரங்கு:Tshwane / Pretoria
பார்வையாளர்: 35,000


37/64 இங்கிலாந்து எதிர் ஸ்லவேனியா 1:O


இன்றைய முதற்போட்டிகளில் சமநேரத்தில் 4 கழகங்கள் மோடுகின்றன. இங்கிலாந்துக்கு எதிராக ஸ்லவேனியா மோதுகிறது. 2புள்ளிகளுடன் நிற்கின்ற இங்கிலாந்து வென்றாக வேண்டும் 2வது சுற்றுக்குச் செல்ல. மற்றைய போட்டியில் அமெரிக்காவுக்கு எதிராக அல்ஜீரியா மோதுகிறது. அமெரிக்கா 2 புள்ளி அல்ஜீரியா 1 புள்ளி. போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. முதல் 22 நிமிடம் வரை கோல் எதுவுமில்லை. 22ம் நிமிடத்தில் DEFOE அற்புதமான கோல் ஒன்றை அடித்தார். இங்கிலாந்து 1:0 என முன்னிலை பெற்றது. ஆட்டம் மேலும் விறுவிறுப்பாக அமைந்தது. இங்கிலாந்தின் விளையாட்டு இன்று சிறப்பாக அமைந்திருந்தது.

2வது பாதியில் இங்கிலாந்து மேலும் உக்கிரமாக விளையாடியது. கோலாகக் கூடிய இரு சந்தர்ப்பங்களை ரூனி தவறவிட்டார். கடுமையான போட்டியின் பின் இங்கிலாந்து 1:0 என வென்று இற்திச்சுற்றுக்கான தனது இடத்தைப் பதிவு செய்தது.

நடுவர்:Wolfgang Stark/Germany
விளையாட்டரங்கு:Nelson Mandela Bay. Port Elizebeth
பார்வையாளர்: 38,000