32/64 ஸ்பானியா
எதிர் ஹொண்டூராஸ்
2
:0(1:0)
முதல் சுற்றில் 2வது பகுதியின் இறுதிப்போட்டி இது. இத்துடன் அனைத்து அணிகளும் 2வது விளையாட்டை முடித்துள்ளன. உலகதரத்தில் 2வதான ஸ்பானியா 38வதான ஹொண்டூராஸை சந்திக்கிறது. இதற்கு முன்னர் ஒருதடவை போட்டியிட்ட இவை சமநிலையில் போட்டியை முடித்தன.
முதல் போட்டியில் தோற்று புள்ளிகள் எதுவுமற்று இன்று 2வது மோதலை தொடக்கின. 17வது நிமிடத்தில் David VILLA ஒருகோலை அடித்து கோல் கணக்கைத் தொடக்கினார். போட்டியில் ஸ்பானியா ஆதிக்கம் கொண்டிருந்து பலதடவை கோலடிக்க முயன்றாலும் பயனிருக்கவில்லை.
பின் பாதி ஆட்டம் தொடங்கி 6ம் நிமிடத்தில் மேலும் ஒருகோலை அடித்தார். 63ம் நிமிடத்தில் ஸ்பானியாவுக்கு ஒரு தண்டனை உதைக்கு வாய்ப்புகிட்டியது. வே அதனை அடித்தார். அடிக்கப்பட்ட் பந்து வெளியே சென்றமையால் ஒரு இலகுவான வாய்ப்பை அவர்கள் தவற விட்டார்கள். அதன் பின் இருதரப்பும் கோல் எதையும் அடிக்கவில்ல. ஸ்பானியா 3 புள்ளிகளை பெற்று குழுவில் 2ம் இடத்துக்கு வந்துள்ளது.
David VILLA
David VILLA
நடுவர்:Yuichi NISHIMURA/Japan
விளையாட்டரங்கு:Johanesburg
பார்வையாளர்:45,000
31/64
சிலி
எதிர்
சுவிஸ் 1
:0(0:0)
இன்றைய இரண்டாவ்து போட்டியில் சுவிஸ் சிலிக்கு எதிராக விளையாடியது.
இரண்டு அணிகளும் தங்கள் முன்னைய போட்டிகளில் வெற்றிபெற்று தலைக்கு 3 புள்ளிகளுடன் இருந்தன.போட்டி தொடங்கி 2வது நிமிடத்தில் சிலியின் வீரர் ZUAZO க்கு எச்சரிக்கை அட்டைகொடுபட்டது. 25ம் நிமிடங்களுக்குள்ளாக 3 சிலிவீரர் ஒருசுவிஸ் வீரர் என எச்சரிக்கை 4அட்டைகள் பெற்றார்கள். தொடர்ந்து 31ம் நிமிடத்தில் சுவிஸ்வீரர் BEHRAMI சிவப்பு அட்டை கொடுத்து வெளியேற்றப்பட்டார்.
இருஅணிகளும் சமநிலையில் விளையாடிக்கொண்டு இருந்தன. கோலடிக்கும் சந்தர்ப்பங்கள் குறைவாகவே கிடைத்தன. எதிரணிவீர
ரை வீழ்த்துவதிலேயே இருதரப்பினரும் ஈடுபட்டனர். விதியை மீறிய (FOUL)விளையாட்டை விளையாடியே 5 அட்டைகளை பெற்று முதல் பாதிநேரத்தை நிறைவு செய்தனர்.
பின் பாதியிலும் ஆட்டத்தின் போக்கு மாற்வில்லை. 48,60,60,61 என 4 மஞ்சள் அட்டைகள். இருதரப்புக்கும் சமமாக. 75ம் நிமிடத்தில் நிலைமை மாறியது. சிலியின் வீரர் GONZALEZ ஒருகோலை அடித்து சிலியை முன்னிலைக்கு இட்டுச் சென்றார். மேலும் கோலடிக்கும் சில ச்ந்தர்பங்களை சிலி தவற்விட்டது. 90ம் நிமிடத்தில் சுவிஸ் சில் செ,மீற்றர் அளவில் ஒரு கோலை தவறவிட்டு தோல்வியடைய சிலி இறுதிச்சுற்றுக்கான தனது இருப்பை உறுதி செய்தது.ஆட்டத்தில் மொத்தம் 10 அட்டைகள். 6 சிலி 4(1சிவப்பு) சுவிஸ்
நடுவர்: Al Ghamdi/SaudiArabia
விளையாட்டரங்கு:Nelson Mandela bay, Port Elizabeth
பார்வையாளர்: 35,000
முதல் போட்டியில் சமநிலைகண்டு 1 புள்ளியுடன் உள்ள போர்த்துக்கல் வடகொரியாவுடன் மோதும் ஆட்டம் இன்றைய முதல் ஆட்டம். 3வது தரப்பாக மழையும் பெய்து கொண்டிருக்கிறது. போர்த்துக்கலின் அணித்தலைவர் ரொனால்டோ கடந்த போட்டியில் ஒரு மஞ்சள் அட்டையைப் பெற்றிருந்தார்
போட்டியின் ஆரம்பத்தில் கொரியவீரர்கள் துடிப்பாக ஆடினர். கோலடிப்பதற்கு சில முயற்சிகளை மேற்கொண்டனர். அனால் 27ம் நிமிடத்தில் போர்த்துக்கல் வீரர் R. MEIRELES அதிரடியாக முதல் கோலை இறக்கினார். முதல் பாதி முவுவரை கோல் எதுவும் இல்லை பதிலாக இருதரப்பும் ஒவ்வொரு மஞ்சள் அட்டையைப்
பெற்றிருந்தன.

பிற்பாதி தொடங்கியபோது மழை சற்று ஓய்ந்து இருந்த்து.53ம் நிமிடத்தில் 2வது கோலை போர்த்துக்கல் இறக்கியது. இறக்கியவீரர் SIM AO. தொடர்ந்து 3 நிமிடங்களில் 3வது கோலும் அடிக்கப்பட்டது. ALMEIDAதலையால் இடித்து அழகாக அக்கோலை இறக்கினார் தொடர்ந்து 4 நிமிடங்களில் 4வது கோல் அடிக்கப்பட்டது. அடித்தவர் TIAGO. 81ம் நிமிடத்தில் LIEDSON போர்த்துக்கலின் 5வது கோலைப்போட்டார். 87ம் நிமிடம் RONALDO 6வது கோலையும் 89வது நிமிடத்தில் TIAGO 7வது கோலையும் அடித்தனர்.
மிக வலுவான நிலையில் போர்த்துக்கல் சுற்றுப்போட்டியிலிருந்து வடகொரியாவின் வெளியேற்றத்தை உறுதிப்படுத்தியது. 30வது போட்டியான இதுவே ஓர் ஆட்டத்தில் 7:0 என்கிற உச்சமான வெற்றி நிலையாகும். மழை, கோல்மழை இரண்டையும் ரசிகர்கள் அனுபவித்தனர். அணித்தலைவர் ரொனால்டோவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
நடுவர்: Pablo POZO/Chile
விளையாட்டரங்கு: CAPE TOWN Green Point Stadium
பார்வையாளர்:60,000
பார்வையாளர்:60,000