2010/06/22

12வது நாள்...22.6.2010

முதல் சுற்றின் கடைசிப்பகுதிப் போட்டிகள் இன்று ஆரம்பமாகின்றன. இப்போட்டிகள் நான்கு தினங்களுக்கு நாளொன்றுக்கு 4 போட்டிகள் வீதம் நடைபெறும். இறுதிச்சுற்றுக்குச் செல்லும் அணிகள் 4 நாளிலும் முடிவாகிவிடும்.




36/64 ஆர்ஜன்ரினா எதிர் கிரேக்கம்.2

முற்போட்டிகள் ஒன்றிலும் தோல்வியுறாத ஆர்ஜன்ரீனா கிரேக்கத்துடன் மோதிய விளையாட்டு இது. கிரேக்கம் ஒரு வெற்றியுடன் இருந்தது. முற்பாதியில் எவரும் கோல் எதனையும் அடிக்கவில்லை. பிற்பாதியில் ஆர்ஜன்ரீனாவினர் 2 கோல்களை அடித்தனர். 77ம் நிமிடத்தில் Martin DEMICHELIS ம் 89ம் நிமிடத்தில் Martin PALARMO ம் கோல்களை அடித்தனர். இதன் மூலம் எல்லாப்போட்டிகளிலும் வென்று 9 புள்ளிகளுடன் இறுதிச்சுற்றுக்கு செல்லும் முதல் அணி என்னும் சிறப்பு ஆர்ஜன்ரீனாவைச் சேர்கிறது.


நடுவர்:Ravshan IRMATOV / Uzbeskistan
விளையாட்டரங்கு:POLOKWANE



35/64 நைஜீரியா எதிர் தென்கொரியா.
2:2 (1:1)

3புள்ளிகளுடன் உள்ள தென்கொரிய அணி புள்ளிகள் எதுவுமற்று இருக்கின்ற
நைஜீரியாவுடன் ஆடும் ஆட்டம் இது.நைஜீரியாவின்
Kalu Ucheமுதல் கோலை 12வது நிமிடத்தில் இறக்கினார். 38ம் நிமிடத்தில் அடுத்த கோலை கொரியாவின்Lee Sung Soo இறக்கினார். முதல்பாதி சமநிலையில் முடிந்தது. பிற்பாதியில் கொரியவீர்ர் Park chu Jungஅடுத்த கோலை இறக்கினார். 69ம் நிமிடத்தில்
நைஜீரியாவின் AYEGBENI கடைசிக்கோலை இறக்க ஆட்டம் சமமாக நிறைவு பெற்றது. மொத்தமாக 4புள்ளிகளைப் பெற்ற கொரியா குழுவில் 2ம் இடத்தைப் பெற்று இறுதிச்சுற்றுக்குத் தெரிவான முதல் ஆசியப் பிராந்தியநாடானது. நைஜீரியா போட்டியிலிருந்து வெளியேறியது.


நடுவர்: Olegario BENQUERENCA (PORTUGAL)
விளையாட்டரங்கு: DURBAN

34/64 பிரான்சு எதிர் தென் ஆபிரிக்கா
1:2 (0:2)

இப்போட்டியிலும் இரண்டு அணிகளும் முன்னர் தலா ஒரு புள்ளியுடன் இருந்தன. கடந்த உலககிண்ணப்போட்டியில் இறுதிப்போட்டியில் விளையாடிய முன்னாள் சம்பியன் பிரான்சும் உலககிண்ணப்போட்டி 2010ஐ நடாத்தும் தென் ஆபிரிக்காவும்
இங்கு மோதுவது குறிப்பிடத்தகுந்தது. பிரான்சின் விளையாட்டு குறித்த சர்ச்சைகள் வேறு. முதல் பாதியில் தென் ஆபிரிக்காவின் வீரர்கள் Bongani KHUMALO 20 நிமிடத்திலும் Katlego MPHELA 37 நிமிடத்திலும் 2கோல்களை இறக்கினார்கள். பிரான்சு வீரர் Florent MALOUDA ஒருகோலை இறக்கினார். பிரான்சு இவ்வுலககிண்ணப்போட்டியில் அடித்த ஒரேயொரு கோல் இதுவாக அமைந்தது. பிரான்சு வீரர் GOURCUFF க்கு சிவப்பு அட்டை வழங்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதுவே பிரான்சினது தென் ஆபிரிக்காவினதும் இறுதி
ஆட்டமாக அமைந்தது. இரண்டும் குழுவில் 4ம் 3ம் இடங்களுக்கு வந்துள்ளன.
Katlego MPHELA ஆட்ட நாயகனானார்.

நடுவர்: Oscar Ruiz/ Columbia
விளையாட்டரங்கு:MANGUANG BLOEMFONTAEIN Free Stadium


33/64 மெக்சிக்கோ எதிர் உருகுவே 0:1 (0:1)

தலா 4 புள்ளிகளுடன் இருந்த இரண்டு அணிகளும் மோதின. Luis SUAREZ 43ம் நிமிடத்தில் அடித்த ஒருகோல் மட்டுமே இப்போட்டியில் அடிக்கப்பட்டது. அதன்மூலம் உருகுவே வெற்றியையும் குழுவில் முதல் இடத்தினையும் பெற்றுக் கொண்டது. ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார். 3 மஞ்சள் அட்டைகள் மட்டுமே வழங்கப்பட்டன. இரண்டு அணிகளும் இறுதிச் சுற்றுக்கு தெரிவாகிவிட்டன.

நடுவர்:Vikter Kassai/ Hungary
விளையாட்டரங்கு:Rustenburg
பார்வையாளர்: