
44/64 கமரூன் எதிர் நெதர்லாந்து 1:2 (0:1)
நெதர்லாந்து 6 புள்ளிகளுடன் முதல் நிலையிலும் கமரூன் புள்ளியின்றிக் கடை நிலையிலும் இப்போட்டிக்கு வந்துள்ளன.
36ம் நிமிடத்தில் (PERSIE) முதல் கோலடித்தது.
முற்பாதியில் 0:1 என முன்னிலையில் நெதர்லாந்து.
65ம் நிமிடத்தில் தண்டனை உதைமூலம் கமரூன் முதல் கோலடித்தது. அடித்தவர் ETO
O
83ம் நிமிடத்தில் கோலடித்தார் நெதர்லாந்தின் HUNTELAAR
.
ஆட்டத்தின் நாயகன்: PERSIE/நெதர்லாந்து
நடுவர்:Pablo Pazo
விளையாட்டரங்கு:Cape Town
43/64 டென்மார்க் எதிர் ஜப்பான் 1:3 (0:2)
இருநாடுகளும் தலா 3 புள்ளிகளுடன் இங்கு சந்திக்கின்றன.
17ம் நிமிடத்தில் ஜப்பான் (HONDA) முதல் கோலடித்தது.
29ம் நிமிடத்தில் ஜப்பான் 2வது கோல்.
முற்பாதியில் 0:2 என முன்னிலையில் ஜப்பான்.
தண்டனை உதை டென்மார்க்குக்கு. அடித்தவர் தொமாசன். காப்பாளர் தடுத்தார். எனினும் கைழுவிய பந்தை தொமாசனே கோலாக்கினார்.
87ம் நிமிடத்தில் ஜப்பான் 3வது கோல்
ஆட்டத்தின் நாயகன்:HONDA/ஜப்பான்
நடுவர்:Jerome Damon/South Africa
விளையாட்டரங்கு:Rustenburg
42/64 பரகுவே எதிர் நியூசிலாந்து 0:0 (0:0)
நடுவர்: Yuishi Nashimura/Japan
41/64 இத்தாலி எதிர் ஸ்லவாகியா 2:3 (0:1)
நடுவர்: Horward WEBB / England
இன்றைய பகல் போட்டிகளில் F குழுவின் 4 அணிகளும் விளையாடின.
முதல் போட்டியில் இத்தாலிக்கு எதிராக ஸ்லவாக்கியா மோதியது. நடப்பு உலக நாயகனான இத்தாலி வெறும் இரண்டு புள்ளிகளுடனும்

ஸ்லவாக்கியா 1 புள்ளியுடனும் இருந்தன.
மற்றறைய போட்டியில் பரகுவே 4 புள்ளிகளுடன் வலுவாக நிற்கிறது. அது 2புள்ளிகள் கொண்ட நியூசிலாந்துடன் மோதுகின்றது. அரை நேரம் வரை இருதரப்பும் கோல் எதுவும் அடிக்காமையால் ஆட்டம் சமநிலையில் இருந்தது. பிற்பாதியிலும் அதே நிலைமை. ஆட்டம் சாதாரணமாக நடந்து முடிந்தது.
ஸ்லவாக்கியா 25ம் நிமிடத்தில் ஒரு கோலடித்தது. அடித்தவர்
VITTEK.
இத்தாலி பெரும் பிரச்சனைக்குள்ளாகியது. 2ம் பாதியில் அடுத்த கோல் 73ம் நிமிடத்தில் அதே VITTEK ஆல் அடிக்கப்பட்டது. தொடர்ந்து 83ம் நிமிடத்தில் இத்தாலி ஒரு கோல் ((DI NATALE)அடித்தது. கோல் போன பந்தை எடுப்பதில் பிரச்சனைப்பட்ட இத்தாலி வீரருக்கும் ஸ்லவாக்கிய காப்பாளருக்கும் மஞ்சள் அட்டை கொடுக்கப்பட்டது .தொடர்ந்து மிகபரபரப்புடன் இருதர்ப்பு வீரர்களும் விளையாடினர். அடுத்த கோல்கள் ஸ்லவாக்கியா 89 நிமி (KUPUNEK). இத்தாலி 92 நிமி (QUAGLIARELLA).
2:3 என்கிற கணக்கில் நடப்பு சம்பியன் வெளியேறியது. சில இத்தாலிவீரர்கள் விளையாட்டரங்கில் அழுதனர்.ஸ்லவக்கியா பெரும் கொண்டாட்டத்துடன் ஆட்டத்தை நிறைவு செய்தது.
அடுத்த சுற்றுக்கு பரகுவேயும் ஸ்லவாக்கியாவும் தேர்வாகின.