2010/07/09

இறுதிப்போட்டியில் இரு ஐரோப்பிய அணிகள்!

இன்னும் இரு தினங்களில் உலக கிண்ணப்போட்டிகள் நிறைவுற்றுவிடும்.
ஒரு புதிய நாடு உலககிண்ணத்தினை வென்று செல்ல இருக்கின்றது.
அது நெதர்லாந்தாகவோ அன்றேல் ஸ்பானியாவாகவோ இருக்கப்போகின்றது.
இதுவரை 7நாடுகள் உலககிண்ணத்தைச் வென்றிருக்கின்றன. எட்டாவதாக
மேற்குறித்த நாடுகளில் ஒன்று அணிசேர இருக்கின்றது.

உலககிண்ணம் 2010க்கு தென் அமெரிக்காவிலிருந்து பங்கு கொண்ட 5 அணிகளும் அரைக்காலிறுதிக்குத் தேர்வாகிச் சாதனை படைத்தன.அவற்றில் சிலி தவிர்ந்த நான்கு அணிகள் கால் இறுதிக்குள் நுழைந்தன.மிகவும் பிரபல்மான சாதனை நாடாக இருக்கின்ற பிரேசில் இம்முறை கால் இறுதியுடன் வெளியேறியது. அது போலவே ஆர்ஜன்ரீனாவும் கால் இறுதியுடன் வெளியேறியது. 13 நாடுகளாக போட்டிக்கு வந்த 13 ஐரோப்பிய நாடுகளில் மூன்று மட்டுமே காலிறுதிக்குள் வர முடிந்தது. ஆபிரிக்காவிலிருந்து கானா எனக் காலிறுதிக்கு எட்டு நாடுகள் தெரிவாகின.

அரையிறுதிப் போட்டிகளில் ஐரோப்பிய நாடுகளில் மூன்றும் தெரிவாகி அவற்றில் இரண்டு அணிகளான நெதர்லாந்தும் ஸ்பானியாவும் இறுதிப்போட்டியில் மோத உள்ளன. 5-4-1 என ஒவ்வொரு சுற்றிலும் தென்னமெரிக்க நாடுகள் சுருங்கி 3வது அல்லது 4வது இடத்துக்கு மட்டுமே அவற்றில் ஒன்றான உருகுவேக்கு வர வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. நாளை அது எந்நிலை பெறும் என்பது தெரிந்துவிடும்.

இப்போட்டியின் சில முக்கிய அம்சங்கள்:

  1. ஜேர்மனி உலககிண்ணப்போட்டிகளில் ஆகக்கூடிய ஆட்டங்களில் பங்கேற்ற அணியாக சாதனை புரிகிறது. அது நாளை ஆடும் ஆட்டம் 99வது ஆட்டமாகும்.(பிரேசில் 97 தடவைகள்)
  2. 48 ஆண்டுகளில் அரையிறுதியில் பங்கேற்ற அணிகளில் இளவயது அணி ஜேர்மனிய அணியாகும். அதன் வயதுச் சராசரி 25வருடம் 299 நாட்கள். இதற்குமுன் செக். அணி 25 வரு.145 நாட்களாக் 1962ல் விளையாடியது.
  3. உலககிண்ணப்போட்டிகளில் இறுதிச் சுற்று வரை ஆடிய நாடுகள் இதுவரை 11 மட்டுமே. 12வது நாடாக ஸ்பானியா இணைகின்றது.
  4. உலககிண்ணப்போட்டிகளில் நெதர்லாந்தின் சினைடர் 4 போட்டிகளில் (9+24+57+61ம் ஆட்டங்கள்) ஆட்டத்தின் நாயகனாகத் தெரிவாகியுள்ளார். இதுவரை தனது 6 ஆட்டங்களிலும் தோல்வியடையாத அவ்வணி ஒவ்வொரு போட்டிக்கும் ஆட்டநாயகன் விருதைப் பெற்றுள்ளது.(பெர்சி 44, றொப்பன் 54)
  5. இதுவரை நடந்த 6 போட்டிகளிலும் வென்ற ஒரேயொருநாடு நெதர்லாந்து. இதுவரை நடந்த போட்டிகளில் அதிக மஞ்சள் அட்டை(15) வாங்கிய நாடும் நெதர்லாந்து. அதிக தடவை விதிகளை (FOULS 98) மீறி விளையாடி யவர்களும் அவர்களே. கையால் பந்தை அடித்த வகையிலும் நெதர்லாந்து முன்னணியில் உள்ளது. 10 தடவை அது தொட்டுள்ளது.
  6. சரியான முறையில் சகவீரருக்கு பந்தை கொடுத்தவகையில் (PASSES COMPLETED) ஸ்பானியா 3387 தடவை என முன்னணியில் உள்ளது. 2வது ஜேர்மனி...2472 3வது நெதர்லாந்து..2434.
  7. அதிக கோல்கள் அடித்தவர் வரிசை =ஜேர்மனி 13, நெதர்லாந்து 12, ஆர்ஜன்ரீனா 10
  8. அதிக கோல்கள் பெற்றவர்கள் வரிசை= வடகொரியா 12, தென்கொரியா 8, ஸ்லவாக்கியா 7