2010/06/15

5வது நாள்...15.6.2010


(14/64)பிரேசில் எதிர் வடகொரியா 2:1(0:0)
18 உலககிண்னப்போட்டிகளிலும் பங்குபற்றி இப்போது நடைபெறு 19வது உ.கி.போட்டியிலும்
பங்கு கொள்ளும் பிரேசிலின் ஆரம்ப விளையாட்டு இன்று. வடகொரியாவை அது சந்தித்தது. அதிக கோல்களை ரசிகர்கள் எதிர்பார்த்திருப்பர். ஆனால் வடகொரியா சிறப்பாக விளையாடி பிரேசில் கோல் எதனையும் அடிக்கவிடாது தடுத்து முற்பாதிவரை சமாளித்தது.

பிரேசில் அணியினர் பிற்பாதியில் சுறுசுறுப்பாக விளையாடத் தொடங்கினர். 55வது நிமிடத்தில் மைகொன் சிறப்பான ஒரு அடி மூலம் முதலாவது கோலைப்போட்டார். பின் 72வது நிமிடத்தில் எலானோ 2வது கோலை இறக்கினார். 89வது நிமிடத்தில் கொரியா சிறப்பான ஒரு கோலை அடித்தது. அடித்தவர் ஜி யும் நாம்.

ஆட்டத்தில் அதிக தவறுகள் நடைபெறவில்லை என்பதனைவிட மஞ்சள் அட்டையை காட்டுவதனை நடுவர் தவிர்த்து வந்தார் எனலாம். எனினும் பிரேசிலின் வீரரொரொவருக்கு ஒரு மஞ்சள் அட்டை கொடுக்கப்பட்டது.
நடுவர்: KASSAL /Hungary
விளையாட்டரங்கு:
பார்வையாளர்: 55.686

(13/64)போர்த்துக்கல் எதிர் ஐவரிகோஸ்ற் 0:0(0:0)


இரண்டு கால்பந்தாட்ட நட்சத்திர வீரர்கள் (ஒருவர் போர்த்துக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்ரவர் ஐவரிக்கோஸ்றின் ட்றோக்பா.) உள்ளடங்கிய அணிகள் பங்கு கொள்ளும் போட்டியாகவும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த போட்டியாகவும் 2வது போட்டி கருதப்பட்டது.
ட்றோக்பா தொடக்கத்தி விளையாட்டில் பங்கேற்கவில்லை. அவர் 66ம் நிமிடத்தில் தான் விளையாட வந்தார். ரொனால்டோ போட்டி தொடங்கிய சில நிமிடங்களில் மஞ்சள் அட்டையைத் தரிசிக்க நேர்ந்தது.
இருதரப்பும் மற்றவர்களை வீழ்த்துவதில் அக்கறை காட்டினார்கள். எவருக்கும் கோல் அடிக்க வாய்ப்புக் கிட்டவில்லை. இதற்கிடயே மழைவேறு பெய்துகொண்டிருந்தது.
LARRIONDE/Uruguay
விளையாட்டரங்கு:PORT EIZABETH
பார்வையாளர்:31.034



(12/64) நியூசிலாந்து
எதிர்
ஸ்லவாக்கியா 1:1 (0:0)

இன்றைய முதல் போட்டியில் நியூசிலாந்து ஸ்லவாக்கியாவுக்கு எதிராக விளையாடியது. 49வது நிமிடத்தில் ரொபேட் விற்றெக் அடித்த கோல் மூலம் ஸ்லவாக்கியா முன்னிலை வகித்து இருந் து. 90 நிமிடங்களில் ஆட்டம் முடிவடையும் தருணம் வரை இந்நிலை தொடர்ந்தது.
இறுதி நேரத்தில் வழங்கப்பட்ட 3 நிமிடத்திற்குள் நியுசிலாந்து வீரர் விசன் ரைற் 92வ்து நிமிடத்தில் தலையால் அடித்து ஒரு கோலை இறக்கி போட்டியைச் சமநிலைப்படுத்தினார்.

நடுவர்:DAMON/SaudiArabia
விளையாட்டரங்கு:RUSTENBURG
பார்வையாளர்:23,871