2010/06/29

19வது நாள்...அரைக்காலிறுதி 4ம்நாள்

56/64 போர்த்துக்கல் எதிர் ஸ்பானியா 0:1(0:0)
Villa(63)
அரைக்காலிறுதியின் இறுதி ஆட்டம். எட்டு அணிகள் இந்த 1/8 இறுதிச்சுற்றில் வெளியேற வேண்டும். 8வதாக வெளியேற வேண்டிய அணியை இந்தப் போட்டி தீர்மானித்தது. போட்டியில் ஆடியவர்கள் அயலவர்கள். ஐரோப்பாவின் இருபிரபல அணிகளான போர்த்துக்கலும் ஸ்பானியாவும். குழுவில் 6புள்ளி முதல்நிலை என ஸ்பானியாவும் 5புள்ளி 2ம்நிலை என போர்த்துக்கலும் ஆரம்பச்சுற்றில் தேர்வாகி இன்று மோதின.

போட்டி விறுவிறுப்பாக தொடக்கம் முதலே காணப்பட்டது. முதல் 30 நிமிடத்தில் பந்தை அதிகமாக (59%) விளையாடியவர்களாக, கோலுக்கு எத்தனித்தவர்களாக ஸ்பானியர்களே காணப்பட்டனர். ஆனால் முற்பாதி கோலெதுவுமின்றி சமநிலையில் முடிவடைந்தது.

பிற்பாதியில் மோதல் மேலும் உச்சமாக இருந்தது.63ம் நிமிடத்தில் சிறப்பாக ஒரு கோலை வில்லா அடித்தார். ஸ்பானியா முன்னிலைக்கு வந்தது. முதன் முதலாக 74 ம் நிமிடத்தில் மஞ்சள் அட்டை காட்டப்பட்டது. காட்டப்பட்டவர் ஸ்பானியாவின் அலன்ஸோ. 79 நிமிடத்தில் அடுத்தது போர்த்துக்கல்லின் ரியாகோவுக்கு. 89ம் நிமிடத்தில் போர்த்துக்கலின் கோஸ்ரா சிவப்பு அட்டை காட்டி வெளியேற்றப்பட்டார்.. கடுமையான போட்டியின் பின் போர்த்துக்கல் வெளியேற ஸ்பானியா கால் இறுதி ஆட்டத்தில் பரகுவேயை சந்திக்க வருகிறது.
நடுவர்:Hector Baldassi/Argentina
மஞ்சள் அட்டை = போர்த்துக்கல்:1 ஸ்பானியா :1
சிவப்பு அட்டை = போர்த்துக்கல்:1
விளையாட்டரங்கு:Cape town Green Point Stadium

ரொனால்டோவும் சேர்ஜியோவும் வில்லா அடித்த கோல்சோகம்-ரோனால்டோ



55/64 பரகுவே எதிர் ஜப்பான் 0:0(0:0)

தண்டனை உதைமூலம் வெற்றி 5:3
அரைக்கால் இறுதி ஆட்டத்தின் இறுதிநாள் இன்று. முதல் ஆட்டத்தில் தென் அமெரிக்க பரகுவேயை எதிர்த்து ஆசியாவின் எஞ்சியுள்ள அணியான ஜப்பான் மோதவுள்ளது. முதல் சுற்றில் 2 வெற்றிகளுடன் 6புள்ளி பெற்று 2ம் நிலையில் ஜப்பான் உள்ளது. பதிலாக 5புள்ளி, 1வெற்றி, 2 சமம் என்ப்பெற்று குழுவில் முதல் நிலையில் பரகுவே உள்ளது.

போட்டி தொடங்கி முதல் 15 நிமிடங்கள் முடிந்த நிலையில் எவ்வித கோலோ அட்டைகளோ இன்றி விளையாடிக்கொண்டிருந்தார்கள். பந்தினைக் கையாள்வதில் உருகுவே 60%உம் ஜப்பான் 40%உம் எனக்காணப்பட்டது.முற்பாதியில் கோல் எதுவும் இல்லை. அட்டைகள் எதுவும் வழங்கப்படவில்லை. கோலாகியிருக்கக்கூடிய அடிகள் ஜப்பானியரால் 3ம் பரகுவேயினரால் ஒன்றும் அடிக்கப்பட்டன.பரகுவேயே பந்தை அதிகமாக 63% விளையாடியது.

பிற்பாதியில் ஆட்டம் தீவிரமடைந்திருந்தது . 58ம் நிமிடத்தில் ஜப்பானின் MATSUIக்கு முதல் மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது. பிற்பாதியாட்டத்திலும் எவ்வித கோலும் அடிக்கப்படவில்லை. எனவே மேலதிக விளையாட்டுக்கு முடிவு செய்யப்பட்டது. அதுவரை ஜப்பான் 3 மஞ்சள் அட்டைகளை வாங்கியிருந்தது.

இச்சுற்றுபோட்டியில் மேலதிக விளையாட்டுக்கு நேரம் வழங்கப்பட்ட 2வது ஆட்டமாக இது அமைந்தது. முதல் 15 நிமிடத்திலும் கோல் எதுவுமில்லை. ஆட்டநாயகனாக ஹொண்டா அறிவிக்கப்பட்டார். இம்மேலதிக நேரத்தில் தலா 1 மஞ்சள் அட்டை.
தொடர்ந்து சமநிலை
மாறாமையினால் முதன் முதலாக தண்டனை உதைமூலம் வெற்றி தோல்வி தீர்மானிக்க வேண்டிய விளையாட்டாக இந்தப்போட்டி அமைந்தது. காப்பாளர்களின் கைகளில் திறமையில் முடிவு விடப்பட்டது.ஜப்பானிய காப்பாளர் KAWASHIMA பரகுவே காப்பாளர்VILLAR.
தண்டனை உதையில் பரகுவே அணி 5:3 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
ஆட்டத்தின் நாயகன்
நடுவர்:Frank De Bleeckere/Belgium
மஞ்சள் அட்டை = பரகுவே:1 ஜப்பான் :4
சிவப்பு அட்டை = போர்த்துக்கல்:1
விளையாட்டரங்கு:Tshwane/Pritoria
0:0சமநிலையில் முற்பாதிதண்டனை உதை இவ்வாறு



வெற்றியை தீர்மானித்த உதை