2010/07/07

23ம் நாள்- கடைசி அரை இறுதி மோதல்

62/64 ஜேர்மனி எதிர் ஸ்பானியா 0:1(0:0)
Puyol 73







இரண்டாவது அரையிறுதி. மோதுபவர்கள் மும்முறை கிண்ணம் கண்ட ஜேர்மனி. எதிராக இதுவரை கிண்ணத்தை தரிசித்திராத ஸ்பானியா. இந்த உலககிண்ணத்தில் 13கோல் அடித்து முன்னணியில் உள்ள ஜேர்மனி 6கோல்களை மட்டுமே அடித்திருக்கும் ஸ்பானியாவுடன் இந்த அரையிறுதியில் மோதியது. ஆயினும் உலகத்தர இறுதிக்கணிப்பில் ஸ்பானியா 2ம் இடத்திலும் ஜேர்மனி 6ம் இடத்திலும் இருந்தன.


போட்டி விறுவிறுப்பாக அரம்பித்தது என்றாலும் ஆதிக்கம் செலுத்தி ஆடியது ஸ்பானியாவே. 20அது நிமிடம் வரை அது 65% பந்தை விளையாடியது. முதல் பாதிவரை யாரும் கோலடிக்கவில்லை. அதுபோலவே எவரும் எச்சரிக்கை அட்டை வாங்கவில்லை. ஸ்பானியர்கள் அதிகம் கோலுக்கு முயற்சிக்க அதனை பாதுகாப்பவரளாகவே ஜேர்மனியர் காணப்பட்டனர். பந்து இருப்புநிலை 43%:57% ஆக முற்பாதி முடிவுற்றது.




2வது பாதி தொடங்கி 10 நிமிடத்தில் ஜேர்மனி தனது வீரர் பேரங்கை மாற்றி ஜன்சனை களமிறக்கியது. 58வது நிமிடத்தில் ஸ்பானியா அருமயான ஒரு கோல்வாய்ப்பை தவறவிட்டது. ஆயினும் 11 தடவைகள் கோலுக்கு அது முயற்சிக்க ஜேர்மனி முயற்சித்தது 2 தடவைகள் மட்டுமே.
73ம் நிமிடத்தில் கோணர் அடியொன்றைப் பயன்படுத்தி கோல் ஒன்றை ஸ்பானியா அதிரடியாக இறக்கியது. தலையால் அடித்தவர் புயோல். இப்போட்டியின் இன்னொரு முக்கிய அம்சம் எவிவிதமான அட்டைகளும் வழங்கப்படாமையாகும்.

அரையிறுதியில் ஜெர்மனியை வீழ்த்தி ஸ்பானியா இறுதிப்போட்டியில் நெதர்லாந்தை 11ம் திகதி சந்திக்கிறது. அனைத்து முன்னாள் சம்பியன்களும் வெளியேற்றப்பட்ட நிலையில் இதுவரை உலககிண்ணத்தினைத் தரிசிக்காத நெதர்லாந்தும் ஸ்பானியாவும் இறுதிப்போட்டியில் மோதுகின்றன. நெதர்லாந்து 2 தடவைகள் இறுதிப்போட்டியில் விளையாடித் தோற்றுள்ளது. ஸ்பானியா இம்முறைதான் அரையிறுதிக்கே தேர்வானது. அதன் முதல் இறுதிப்போட்டியில் அது நெதர்லாந்தை வென்று சரித்திரம் படைக்குமா என்பது இன்னும் நான்கு
நா ட்களில் முடிவாகிவிடும்.

நடுவர்:Viktor KASSAI/கங்கேரி
அட்டைகள்:
மஞ்சள்:
ஜேர்மனி:0 ஸ்பானியா :0
விளயாட்டரங்கு:Durban Stadium. DURBAN