2010/06/05

உலகக்கிண்ணத்தில் உலகசாதனைகள்

5 தினங்களில் உலககிண்ணப்போட்டிகள் ஆரம்பமாகவுள்ளன. உலகெங்கும் கால்பந்தாட்ட ரசிகர்கள் மிகப்பரபரப்பாக இப்போட்டிகளைப் பற்றி அளவளாவிக் கொண்டுள்ளார்கள். போட்டிகளில் பங்கு கொள்ளும் 32 நாடுகளிலும் போட்டியைக் காண்பதற்கான உற்சாகம் உச்சநிலையில் காணப்படுகிறது. போட்டி நடைபெறும் தென் ஆபிரிக்காவில் மக்கள் மிக மிகப்பெருமித்தத்துடன் போட்டியை விளையாட்டரங்குகளிலும் நாடு பூராவிலும் நிறுவப்படும் பாரிய தொலைக்காட்சி அரங்குகளிலும் காண ஆயத்தமாகிக் கொண்டுள்ளனர். உலகம் முழுவதிலுமிருந்து தென் ஆபிரிக்காவை நோக்கி கால்பந்தாட்ட ரசிகர்கள் வந்து கொண்டிருக் கிறார்கள். அனைத்து நாட்டு அணிகளின் வீரர்களும் தென் ஆபிரிக்காவின் பெருநகரான ஜொகனஸ்பேர்க்கினை அடைந்து தம் பயிற்சிகளை ஆரம்பித்துக்கொண்டுள்ளனர்.

நடைபெறவுள்ள 19வது உலகக் கிண்ணப்போட்டியிலும் பல உலக சாதனைகள் நிறுவப்படும் என்பது நிச்சயம் . இதற்கு முன்னர் நடைபெற்ற 18 போட்டிகளிலும் பல சாதனைகள் நிலைநாட்டப்பட்டுள்ளன. அவற்றில் சில குறிப்பிடத்தக்க 25 சாதனைகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.


01) அனைத்து உ.கி. போட்டிகளிலும் பங்கு கொண்ட ஒரே
நாடு -பிரேசில்

02)அதிகதடவை வெற்றிபெற்ற நாடு-
பிரேசில் 5 தடவை

03)அதிகதடவை இறுதிப்போட்டியில் பங்கு கொண்ட நாடு-
ஜேர்மனி, பிரேசில் தலா 7 தடவைகள்

04)அதிகதடவை அரையிறுதிப்போட்டியில் பங்கு கொண்ட
நாடு- ஜேர்மனி 11 தடவை

05)அதிகதடவை ஆட்டங்களில் பங்கு கொண்டவை-
ஜேர்மனி, பிரேசில் தலா 92 தடவைகள்

06)அதிகதடவை ஆட்டங்களின் வென்றது-
பிரேசில் 64 தடவை

07)அதிகதடவை ஆட்டங்களின் தோற்றது-
மெக்சிகோ 22 தடவை

08)அதிகதடவை கோல் அடித்தது-
பிரேசில் 201 தடவை

09) 3 தடவைகள் பிரேசில் உ.கி.வென்றபோது பங்குபற்றிய ஒரே
வீரர்- 3பீலே( 1958,1962,1970)

10)அதிக தடவைகள் 25 ஆட்டங்களில் விளையாடிய வீரர்-
லோதர் மத்தியாஸ்-ஜேர்மனி

11)அதிக போட்டிகளில் அணித்தலைவராகப் பங்கு
கொண்டவர்- மரடோனா-ஆர்ஜன்ரீனா

12)உ.கி.போட்டிகளில் இளவயது வீரர்-
நோர்மன் வைற்சைட் அயர்லாந்து-17வருடம் 41 நாட்கள்

13)உ.கி.போட்டிகளில் வயதுகூடிய கோல் அடித்த வீரர்-
றோஜர் மில்லா-கமரூன் -42வருடம் 39 நாட்கள் இவர்
ரஷ்யாவுக்கு எதிராக கோல் ஒன்றை அடித்தார்.

14)உ.கி.தெரிவுப் போட்டிகளில் இளவயது வீரர்-
சோலெமன் மாமம் -ரோகோ- 13வருடம் 310 நாட்கள்

15)உ.கி.போட்டிகளில் அதிக கோல் அடித்தவர்-
ரொனால்டோ- பிரேசில்-15

16)அதிக கோல்கள் (171) அடிக்கப்பட்ட உ.கி.போட்டி -1998ல்
அமெரிக்காவில் நடைபெற்ற போட்டிகளின்போதாகும்.

17)குறைந்த அளவு கோல்கள் (70) அடிக்கப்பட்ட உ.கி.போட்டி -
1930,1934

18)அதிக கோல்களை விட்டுக்கொடுத்த நாடாக ஜேர்மனியுள்ளது.
அது உ.கி.போட்டிகளில் 112 கோல்களை எதிரணிகளுக்கு
விட்டுக்கொடுத்தது.

19)ஒரு போட்டியில் அதிக கோல் அடிக்கப்பட்டது 1982ல்.
கங்கேரி எல்சல்வடோருக்கு எதிரான போட்டியில் 10
கோல்களை அடித்தது

20)தண்டனை உதை மூலமாக அதிக போட்டிகளில் வென்ற நாடு
ஜேர்மனியாகும். அது இவ்வாறு 4 தடவைகள் வெற்றிபெற்றுள்ளது.

21)ஒரு உலககிண்ண இறுதிப்போட்டியில் அதிகபட்ச பார்வையாளர்
களைக் கொண்ட போட்டியாக 1950ல் உருகுவேக்கு எதிராக பிரேசில்
அணி மோதிய போட்டி அமைந்தது. இப்போட்டியைக் காண
199,854 பேர் திரண்டனர்.

22)ஒரு உலககிண்ண போட்டியில் அதிகுறைந்த பார்வையாளர்
களைக் கொண்ட போட்டியாக 1930ல் உருகுவேயில் நடைபெற்ற
உ.கி. போட்டியில் பெருவுக்கு எதிராக ருமேனிய அணி மோதிய
போட்டி அமைந்தது. இப்போட்டியைக் காண 300 பேர் மட்டுமே
வந்திருந்தனர்.

23)ஒரே போட்டியில் அதிக கோல் அடித்தவர் ஸ்லென்கோ
எனும் ரஷ்ய வீரர் ஆவார். இவர் 1994ல் கமரூனுக்கு எதிராக
5 கோல்கள் அடித்தார்.

24)அதிக எச்சரிக்கை அட்டைகளை பெற்றவர்களாக பிரான்சின்
சிடான், பிரேசிலின் கபு ஆகியோர் திகழ்கின்றனர். இருவரும்
தலா 6 அட்டைகளைப் பெற்றனர்.

25)ஒரு உ.கி.போட்டியில் அதி விரைவாக வெளியேற்றப்பட்டவர்
உருகுவேயில் பெடிஸ்டா ஆவார். இவர் 1986 உ.கி.போட்டியில்
56வது வினாடியில் வெளியேற்றப்பட்டார்.