2010/06/27

17வது நாள்...அரைக்காலிறுதி 2ம்நாள்

52/64 ஆர்ஜன்ரீனா எதிர் மெக்சிக்கோ 3:1(2:0)
Tevez(26,52).Higuain(32)Hernandez(71)

இன்றைய 2வது ஆட்டத்தில் இதுவரை இச்சுற்றுப்போட்டியில் தோல்வியைக் காணாத
9 புள்ளிகளுடன் தேர்வான மரடோனாவின் பயிற்சியில் உருவான ஆர்ஜன்ரீன அணி ஒரு வெற்றி ஒரு சமமென 4 புள்ளிகளைக் கொண்டுள்ள மெக்சிக்கோவுடன் மோதியது. தொடக்கம்
முதலே இரு அணிகளும் மிகப்பலமாக மோதிக்
கொண்டன. வட அமெரிக்க தென் அமெரிக்க மோதலாக
உள்ள இப்போட்டியில் முதல்25 நிமிடம் வரை கோல் எதுவும்
அடிக்கப்படவில்லை



26ம் நிமிடத்தில் தன் முதல் கோலை அடித்தது. அடித்தவர் Tevez. அக்கோல் காப்பாளர் பிடித்து தவறியதால் அடிக்கப்பட்டது. ஆனால் துணைநடுவர் பக்கம் மேவி நின்ற ஆர்ஜன்ரீனா வீரரைக் கவனிக்கவில்லை. என மெக்சிக்கோவினரஆட்சேபித்து துணைநடுவருடன் வாதிட்டனர்.
32ம் நிமிடத்தில் அடுத்த கோலும் இறங்கியது. அதனை அடித்தவர் Higuain.
இத்துடன் முற்பாதி முடிவுற்றது.
பிற்பாதி தொடங்கி 7 நிமிடத்தில் Tevez
அடுத்த கோலை அடித்தார். 71ம் நிமிடத்தில் மெக்சிக்கோவின் ஹெர்ணாண்டஸ் கோலொன்றை அடித்து மெக்சிக்கோவுக்கு ஆறுதல் கொடுத்தார். பிற்பாதியில் ஆர்ஜன்ரீனாவின் விளையாட்டில் உற்சாகம் காணப்படவில்லை. 3:1 எனும் கணக்கில் ஆட்டம் முடிவற்றது. ஆட்டத்தின் நாயகனாக Tevez
தெரிவானார்.

ஆட்டத்தின் நாயகன்-Carlos Tevez

.
நடுவர்:Roberto Rositti/Italy
மஞ்சள் அட்டை:
ஆர்ஜன்ரீனா 0 மெக்சிக்கோ 1
விளையாட்டரங்கு:Socer city stadium/Johannesberg


51/64 ஜேர்மனி எதிர் இங்கிலாந்து 4:1(2:1)
Klose(20)Podolski(32)Upson(37)Mueller(67,70)



ஐரோப்பாவின் பிரபலமான இரண்டு அணிகள் மோதும் ஆட்டம் இன்று முதலாவதக இடம்பெற்றது. சிகப்பு அட்டையில் வெளியேற்றப்பட்ட ஜேர்மனியின் குளோச
இன்று மீண்டும் களம் இறங்கியுள்ளார்.
அதனால் ஜேர்மனி ரசிகர்கள் மிக ஆர்வத்துடன் உள்ளனர்.
உலகதரத்தில் 6வது 8வது இடங்களில் உள்ள இவை
இச்சுற்றுப்போட்டியின்
தரவுகளில் சமனாகவே உள்ளனர்.(தலா 4ஆட்டம்+ 1வெற்றி+ 2 சமநிலை)
ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றாலும் 18 நிமிடம் வரை கோல் எதுவுமில்லை. ஆனால் ஜேர்மனி கூடுதலாக பந்தைக் கையாள்வதாக இருந்தது.
20 ம் நிமிடத்தில் குளோச அருமையான ஒருகோலை இறக்கினார். ஜேர்மனிய காப்பாளர் தூர இருந்து அடித்த பந்தையே குளோச கோலடித்தார்.
அதே நேரம் 30 நிமிடத்தில் ஒரு கோலைத் தவறவிட்டார்.
2நிமிடத்தில்
பொடொல்ஸ்கி அடுத்த கோலை இறக்கினார்.
அதிரடியாக இங்கிலாந்தின் அப்சன்
ஒருகோலை 37ம் நிமிடத்தில் இறக்கினார். போட்டி மிக
மிக விறுவிறுப்பான நிலையடைந்தது.
முற்பாதி 2:1 எனும் நிலையில் நிறைவுற்றது.

2ம் பாதி தொடங்கி 2 நிமிடத்தில் ஜேர்மனியின் ப்றீட்ரிச்க்கு மஞ்சள் அட்டை கொடுபட்டது. இதுவே இவ்வாட்டத்தில் முதல் அட்டையாகும். ஜேர்மனியின் முல்லர் அடுத்தடுத்து 67,70ம் நிமிடங்களில் கோலடித்து
ஜேர்மனியை மிக வலுவான நிலைக்குக் கொண்டுவந்தார். இவரே இன்றைய ஆட்டத்தின் நாயகனும் இவரே.

மிக சிறப்பாக தனது முதல் ஆட்டம் போலவே 4 கோலடித்து வலுவான ஒரு வெற்றியை பதிவு செய்துள்ள ஜேர்மனி அடுத்ச் சந்திக்கப்போவது
ஆர்ஜன்ரினாவாக இருக்கும்.


நடுவர்:Jorge LARRRIONDA/Uruguay
மஞ்சள் அட்டை:
ஜேர்மனி 1 இங்கிலாந்து 1

விளையாட்டரங்கு:Mangaung/Bloemfontein