

63/64
ஜேர்மனி
எதிர்
உருகுவே
3:2(1:1)
Thomas MUELLER (19')
Edinson CAVANI (28')
Diego FORLAN (51')
Marcell JANSEN (56')
Sami KHEDIRA (82')
நடுவர்: Benito ARCHUNDIA (மெக்சிக்கோ)
Thomas MUELLER (19')
Edinson CAVANI (28')
Diego FORLAN (51')
Marcell JANSEN (56')
Sami KHEDIRA (82')
இன்றைய மூன்றாம் இடத்துக்கான போட்டியில் 3:2 என்கிற கணக்கில் ஜெர்மனி வெற்றிபெற்றது. ஜேர்மனியின் முல்லர் முதல் கோலை 19ம் நிமிடத்தில் அடித்தார். தொடர்ந்த 9நிமிட நேரத்தில்( 28ம் நிமிடத்தில்) உருகுவேயின் கவானி ஒருகோலை அடித்து சமநிலைப்படுத்தினார். உருகுவேயின் நட்சத்திரவீரர்
போர்லான் 51ம் நிமிடத்தில் அடுத்த கோலை அடித்து உருகுவேயை முன்நிலைக்கு இட்டார். ஆட்டம் மேலும் பரபரப்படைந்தது. அடுத்த 5 நிமிடத்தில் ஜேர்மனியின் ஜான்சன் ஒருகோலை அடிக்க மீண்டும் சமநிலை உருவானது. மேலதிக நேர விளையாட்டு, தண்டனை உதை என ஆட்டம் மேலும் நீளுமா என ரசிகர்களின் எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் தொடர்ந்து 25 நிமிடங்கள் இருதரப்பும் வெற்றியைப் பெறக் கடுமையாக மோதின. 82ம் நிமிடத்தில் ஜேர்மனியின் கெடீரா ஒருகோலை அடித்து ஜேர்மனியை வெற்றிநிலைக்கு கொண்டு சென்றார். மேற்கொண்டு கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. இறுதி வினாடியில் கூட உருகுவேக்கு அரிய சந்தர்ப்பம் ஒன்று வாய்த்தது. ஆனால் ஜேர்மனிய வீரர்கள் அதனைத் தடுத்து வெற்றியைத் தமதாக்கினர். 18வது உலககிண்ணப்போட்டியைப் போலவே ஆறுதல் பரிசாக ஜேர்மனி 3ம் இடத்தினைப் பெற்றுக் கொண்டது. ஐந்து நாடாக போட்டியில் நுழைந்த கால்பந்தாட்டப் போட்டியின் ஆதிக்க தென்னமெரிக்க நாட்டினர் நாலாவ்து இடத்தினை மட்டுமே பெற்று வெளியேறினர்.

ஜேர்மனியின் முல்லர், உருகுவேயின் போர்லான் ஆகியோர் இன்றடித்த கோலுடன் 5 கோல் என தங்கள் நிலையைப் பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே
நெதர்லந்தின் சினைடர், ஸ்பானியாவின் விலா அகியோரும் 5கோல் என்கிற கணக்கில் உள்ளனர். இவர்களில் ஒருவர் 6 வது கோலை அடிக்கும் பட்சத்தில் அவர் தங்கக்காலணியை வெற்றிகொள்ள முடியும்.
ஜேர்மனியின் அணியில் முக்கியமான வீரர்கள் பங்குகொள்ளவில்லை. அணித்தலைவர் லாம், பொடொல்ஸ்கி, குளோச, காப்பாளர் நொயர் என்பவர்கள் ஆடாமல் ஏனைய வீரர்கள் விளையாடச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. ஜேர்மனியின் பயிற்றுவிப்பாளர் ஜோகிம் லோ இளவயது வீரர்களை களமிறக்கி உலககிண்ணம்2010ஐ எதிர்கொண்டார். அவர்களும் சிறப்பாகவே விளையாடினர். சுற்றுபோட்டியில் மிக அதிகமாக 16 கோல்களை அடித்து அவர்கள் முன்னிலையில் நிற்கின்றனர். அவர்களின் கோல்களை விஞ்சுவது சாத்தியமில்லை. ஏனெனில் அடுத்து நிற்பவர் நெதர்லாந்து அணியினர். அவர்களில் கோல் கணக்கு 12. ஒருபோட்டி மட்டும் அதுவும் இறுதிப்போட்டி மட்டுமே கைவசம் உள்ளது. அவர்கள் 5கோலடிக்க ஸ்பானியர்கள் நிச்சயம் அனுமதிக்கப்போவது இல்லை.
அட்டைகள்: மஞ்சள்
ஜேர்மனி 3/உருகுவே 1
விளையாட்டரங்கு: Nelson Mandela Bay/Port Elizabeth - Port Elizabeth Stadium