2010/07/02

20வது நாள்..காலிறுதி இரண்டாவது போட்டி

58/64 உருகுவே எதிர் கானா 1:1(0:1)
(4:2 Penalty)
Muntari (45+)Forlan(54)

இன்றைய காலிறுதி ஆட்டத்தின் 2வது போட்டியில் தென் அமெரிக்க உருகுவே ஆபிரிக்காவின் ஒரேயொரு காலிறுதித் தெரிவான கானாவுடன் மோதுகின்றது.ஏற்கனவே 2 தடவை உலக நாயகனாக தெரிவான உருகுவே இறுதியாக நாயகனானது 60 ஆண்டுகளுக்கு முன்பதாக. ஓர் ஆபிரிக்க நாடாவது அடுத்த சுற்றுக்கு தேர்வாகாதா என்கிற ஆவலுடன் ஏராளமான ஆபிரிக்க ரசிகர்கள் விளையாட்டரங்கில் கூடி கானாவுக்கு உற்சாகம் ஊட்டிக்கொண்டிருக்க,

போட்டி ஆரம்பமானது முதல் இருதரப்பும் சமனான அளவில் விளையாடிக் கொண்டிருந்தனர். முற்பாதி நேரம் முடிவடைந்து மேலதிகமாக 2 நிமிடம் கொடுத்த வேளையில் கானாவின் வீரர் முன்ராரி மிகத்தூரத்திலிருந்து ஓர் அற்புதமான கோலை அடித்தார். முற்பாதியில் கானா 8முறையும் உருகுவே 4 முறையும் கோலடிக்க எத்தனித்திருந்தன. உருகுவே வீரர் ஒருவர் மஞ்சள் அட்டை பெற்றிருந்தார்.

54ம் நிமிடத்தில் உருகுவே தனது முதல் கோலை அடித்தது. அடித்தவர் போர்லன்.சமநிலை கண்ட அணிகள் மேலும் விறுவிறுப்பாக போட்டியிலீடுபட்டன. ஆயினும் ஆட்டம் முடியும் நேரம்வரை வேறுகோல்கள் அடிக்கப்படாமையினால் மேலதிக 30 நிமிட விளையாட்டுக்கு நடுவர்முடிவெடுத்தார். மேலதிக நேரத்திலும் கடைசி நிமிடம் வரை கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. ஆனால் கடைசிநிமிடத்தில் கானாவுக்கு ஒரு தண்டனை உதை வாய்ப்பு கிடைத்தது. அதனைக் கோலாக்கி கானா வெல்லும் என்கிற நிலையில் அதனை அடித்த வீரர் Asamao Gyan கோலடிக்கத் தவறினார். அருமையான ஒரு வெற்றி வாய்ப்பினை கானா இழந்தது. அதனால் தண்டனை உதைமூலம் வெற்றி தீர்மானிக்கப்பட வேண்டியதாயிற்று.

தண்டனை உதையில் 4:2 கணக்கில் உருகுவேவெற்றி பெற்றது. அது 40 ஆண்டுகளின் பின்னர் அரையிறுதிப்போட்டிக்கு நெதர்லாந்தை எதிர்த்து விளையாட உள்ளது


நடுவர்:Olegario Benguerenca போர்த்துக்கல்
அட்டைகள்
மஞ்சள்: உருகுவே 3/ கானா 3
சிவப்பு: உருகுவே 1
விளையாட்டரங்கு :Soccer City Stadium, Jehannerberg


.Virakesari.lk

20வது நாள்..காலிறுதி முதல் போட்டி

57/64 நெதர்லாந்து எதிர் பிரேசில் 2:1(0:1)
R0binho(9)Felipe Molo(53)Sneijder (68)




காலிறுதியின் முதல் போட்டி இன்று. உலககிண்ண கால்பந்தாட்டத்தில் 5 தடவைகள் நாயகன்களாக சாதனை புரிந்து நிற்கும் பிரேசிலை எதிர்த்து இந்தப்போட்டியில் ஆடும் அணி நெதர்லாந்து. இதுவரை அது கிண்ணத்தை
பெற்றது இல்லை. ஆனால் இதுவரை நடந்த போட்டிகள் எதிலும் தோற்காத அணியாக களம் இறங்கியது அது.
மிகுந்த விறுவிறுப்பாக போட்டி தொடங்கி 3ம் நிமிடத்திலேயே இருதரப்பு வீரர்களிடையே முறுகல். வாக்குவாதம். பந்தொன்ன்றை கையாள்வதில் வந்த தள்ளுப்பாட்டல் அந்நிலை வந்தது. 7ம் நிமிடத்தில் பிரேசில் கோலடித்தது. ஆனால் அத்து பக்கம்மேவியது என்பதனால் நிராகரிக்கப்பட்டது. ஆனாலும் அடுத்த 2 நிமிடத்தில் அடுத்த கோலை இறக்கினார்கள் பிரேசிலார். இறக்கியவர் ரொபின்ஹோ. முதல் அரைமணிநேர விளயாட்டில் பந்து இருப்பு சமநிலையாக இருந்தது. முற்பாதியாட்டம் முடிவுற்றபோது இருதரப்பும் ஒவ்வொரு மஞ்சள் அட்டையுடன் பிரேசில் ஒரு கோல் என்கிற நிலையிலும் காணப்பட்டார்கள்.
பிற்பாதி தொடங்கியதும் 53வது நிமிடத்தில் கோல் ஒன்றை தடுக்கும் முயற்சியில் பிரேசிலின் பிலிபே மேலோ தட்டிய பந்து கோலுக்குள் சென்றதனால் எதிர்பாராதவிதமாக கோல்நிலை சமநிலைப்படுத்தப்பட்டது. நெதர்லாந்துக்கு நல்வாய்ப்பாக அக்கோல் அமைந்தது. 68வது நிமிடத்தில் 3வது கோலை சினைடர் அற்புதமாக தலையாலிடித்து அடித்து நெதர்லாந்தை முன்னிலைக்குக் கொண்டு வந்தார். மோதல் உக்கிரமடைந்து நிலைமையில் பிரேசிலுக்கு ஒரு சிவபு அட்டை கொடுபட்டது. வெளியேற்றப்பட்டவர் சொந்தக்கோலடித்த மேலோ. சில நிமிடங்களில் நெதர்லாந்துக்கு மஞ்சள் அட்டைஎன விளையாட்டு தொடர்ந்து பிரச்சனைக்குரியதாக காணப்படது. நெதர்லாந்து 79ம் நிமிடத்தில் 4 மஞ்சள் அட்டைகளை வாங்கியிருந்தது. ஆனால் விளையாட்டில் அதுவே ஆதிக்கம் கொண்டிருந்தது.

பிரேசில் என்ன முயன்றும் இன்னொரு கோலடிக்க இயலவில்லை. சாதனை நாயகனான பிரேசில் காலிறுதியுடன் வெளியேற அரை இறுதிக்குள் நுழையும் முதல் நாடாக நெதர்லாந்து பெருமைபெற்றது. நெதர்லாந்தின் பிற்பாதி ஆக்ரோச விளையாட்டு, சொந்தக்கோல், 10பேருடன் ஆடியது என பல விடயங்கள் பிரேசிலின் வெளியேற்றத்துக்குக் காரணமாகின.

நடுவர்: Yuishi Nishimura ஜப்பான்
அட்டைகள்
மஞ்சள் நெதர்லாந்து 4 பிரேசில் 1
சிவப்பு : பிரேசில் 1
விளையாட்டரங்கு:Nelson Mandela Bay/Port Elizebeth


1வதுகோல்/ரொபின்ஹோ
மோதல்...உச்சம் Kaka + Nigel de Jong 2வ்து கோல். தனது பக்கத்துக்கு


காலிறுதியில் வென்றால் 14மில்லியன் டாலர்!

இன்று உலககிண்ணத்தின் கால் இறுதி ஆட்டங்கள் ஆரம்பமாக உள்ளன. மில்லியன் கணக்கிலான பார்வையாளர்கள், தொலைக்காட்சி நேரலை உரிமங்களுக்கான கட்டணங்கள், மற்றும் விளம்பரங்கள் என பலவழிகளில் கால்பந்தாட்ட சங்கங்களின் அனைத்துலக சம்மேளனம் (FIFA) பெருமளவு பணத்தொகையை வருமானமாக ஈட்டுகிறது. இதில் கணிசமான பங்கு போட்டிகளில் பங்கு கொள்ளும் அணிகளுக்கு வழங்கப்படுகின்றன. சகல அணிகளும் தாங்கள் வெற்றிகொள்ளும் போட்டிகளின் அடிப்படையில் பரிசுத்தொகையைப் பெற்றுக்கொள்கின்றன. அவ்வகையில் இம்முறை அணிகள் பெரும் தொகைகளின் விபரங்கள் வருமாறு:
  • போட்டியில் பங்கு கொள்ளும் ஒவ்வொரு அணிக்கும் தலா 1 மில்லியன் டாலர்.
    (32 x $1,000,000)
  • முதல் சுற்றில் வெற்றி பெறும் 16 அணிகளுக்கு ஒவ்வொன்றிற்கும் 8 மில்லியன் டாலர். (16 x $8,000,000)
  • அரைக்கால் இறுதியில் வெற்றி பெறும் 8 அணிகளுக்கு ஒவ்வொன்றிற்கும் 9 மில்லியன் டாலர். (8 x $9,000,000)
  • கால் இறுதியில் வெற்றி பெறும் 4அணிகளுக்கு ஒவ்வொன்றிற்கும் 4 மில்லியன் டாலர். (4 x $14,000,000)
  • நான்காவது இடம் பெறும் அணிக்கு 18மில்லியன் டாலர் .
  • மூன்றாவது இடம் பெறும் அணிக்கு 20மில்லியன் டாலர்.
  • இரண்டாவது இடம் பெறும் அணிக்கு 24மில்லியன் டாலர்.
  • முதலாவது இடம் பெறும் அணிக்கு 30மில்லியன் டாலர்.
ஆக மொத்தம் 420 மில்லியன் டாலர்கள் பரிசுத்தொகையாக இப்போட்டியில் பங்குபெறும் அணிகள் பெற்றுக்கொள்கின்றன.

உலககிண்ணப்போட்டிகளில் பங்கு கொள்ளும் அணிகள் ஒவ்வொன்றுக்கும் வழங்கப்படும் பரிசுத் தொகைகள் மிகப்பெரியவை. பங்கு கொள்ளும் அணிகளுக்கு அந்தந்த நாட்டு அரசுகள் ஊக்குவிப்பாக வழங்கும் தொகைகள் இக்கணக்குகளில் அடங்கவில்லை.