2010/06/16

6வது நாள்...16.6.2010



(17/64)தென் ஆபிரிக்கா எதிர் உருகுவே 0:3(0:1)

முதல் சுற்றில் 2வது போட்டியை தென் ஆபிரிக்காவும் உருகுவேயும் தொடங்கின. தனது சொந்த மண்ணில் மோசமான தோல்வியையும் சிவப்பு அட்டை வெளியேற்றத்தையும் தென் ஆபிரிக்க அணி சந்தித்த சோகமயமான போட்டியாக இப்போட்டி அமைந்து போனது.

24வது நிமிடத்தில் உருகுவே தன் முதற்கோலை அடித்தது. அடித்தவர் FORLAN. அதன் பின் இருதரப்பினரும் கடுமையாக போராடினர்.
முதன்முறையாக சிவப்பு அட்டை கொடுத்து கோல் காப்பாளரை வெளியேற்றிய சம்பவம் 77ம் நிமிடத்தில் இடம்பெற்றது. கோலடிப்பதற்கு பந்தைக் கொண்டு வந்த வீரரை காப்பாளர்(KHUNE) வீழ்த்தியமையால் நடுவர் அவரை வெளியேற்ற புதிய
காப்பாளர் (JOSEPHS) அழைக்கப்பட்டார். அதனால் விளையாடிய வீரரான ஒருவரும் கூட ஆட்டத்திலிருந்து வெளியேற நேர்ந்தது. இதன் பின் வழங்கப்பட்ட தண்டனை உதையை பயன்படுத்தி இலகுவாக மற்றொரு கோலை
FORLAN அடித்தார். மேலதிக நேரத்தில் இன்னொருகோலை PEREIRAஅடிக்க ஆட்டம் 0:3 என்கிற வகையில் முடிவடைந்தது.


நடுவர்: BUSACCA/Switzerland


விளையாட்டரங்கு:PRETORIA
பார்வையாளர்: 50,000


Virakesari



(16/64)சுவிஸ் எதிர் ஸ்பானியா 1:0(0:0)

மிகப்பரபரப்பான போட்டி
முதல் சுற்றில் முதல் பகுதியின் இறுதிப்போட்டி இது. இத்துடன் சகல அணிகளும் ஒரு ஆட்டத்தினை சந்தித்து முடித்துள்ளன. பலமான அணியாகவும் கிண்ணத்தைக் கைபற்றும் என எதிர்வுகூறப்பட்ட ஸ்பானியாவுக்கு எதிராக சுவிச்சர்லாந்து மோதிய ஆட்டம் இது. தொடக்கம் முதலே ஸ்பானியாவே விளையாட்டில் ஆதிக்கம் கொண்டிருந்தது. ஆயினும் கோலடிக்க அது மேற்கொண்ட பலமுயற்சிகள் முற்பாதிவரை கைகூடவில்லை.
சுவிஸின் கோல் காப்பாளர் மிக அற்புதமாக ஆட்டம் முழுவதும் தடுத்தாடிக்கொண்டிருந்தார்.
பிற்பாதி தொடங்கி 7 நிமிடத்தில் சுவிஸ்வீரர் FERNANDES நெருக்கடி மிகுந்த சூழலுக்குள் ஆட்டத்தின் முதலாவது கோலை இறக்கினார். அதன் பின் ஸ்பானியாவின் வீரர்கள் ஆவேசமாக ஆடினர். ஆயினும் பயன் இல்லை. ஆட்டத்தைச் சமன் செய்வதற்குக்கூட இயலவில்லை. மேலதிக நேரம் 5 நிமிடங்கள் வழங்கப்பட்டும் கூட.
சுவிஸ் அணிக்கு மட்டுமே 4 மஞ்சள் அட்டைகள். அற்புதமாக விளையாடிய சுவிசின் கோல் காப்பாளர் BENAGLIOக்கும் மஞ்சள் அட்டை கிடைத்தது.


சுவிஸ் பயிற்றுநர் Ottmar Hitzfeld

நடுவர்: WEBB/England
விளையாட்டரங்கு:DURBAN
பார்வையாளர்: 60,000
Virakesai



(15/64)சிலி எதிர் ஹொண்டூராஸ் 1:0(1:0)


இன்றைய முதலாட்டத்தில் மத்திய அமெரிக்க நாடான ஹொண்டூராசை எதிர்த்து தென்னமெரிக்கக் நாடான சிலி மோதியது. 34வது நிமிடத்தில் சிலியின் BEAUSEJOUR கோல் ஒன்றை அடித்தார். அதன்பின் பலதாடவைகள் சிலி கோலடிக்க முயன்றது. ஹொண்டூராஸ் கோல்காப்பாளரின் முயற்சியால் அவை தடுக்கப்பட்டன. ஆட்டத்தினை ஒரொ கோலடித்துச் சமன் செய்ய ஹொண்டூராசால் இயலவில்லை.
ஆட்டத்தின் சிறந்த வீரராக சிலியின் BEAUSEJOUR தெரிவானார்.


Virakesariநடுவர்: MAILLET/SEYCHELLES


விளையாட்டரங்கு:NELSPRUIT
பார்வையாளர்: 20,000