


60/64 பரகுவே எதிர் ஸ்பானியா 0:1(0:0)
Villa 83
தென்னமெரிக்க பரகுவே ஐரோப்பாவின் ஸ்பானியாவோடு மோதும் விளையாட்டு காலிறுதியின் கடைசிப்போட்டியாகும். பரகுவே ஜப்பானை தண்டனை உதை மூலம் வென்றே இப்போட்டிக்கு வந்தது. ஸ்பானியா பலமான போர்த்துக்கலை வென்று வந்தது.
முதலில் நடைபெற்ற ஜேர்மனி/ஆர்ஜன்ரீனா போட்டி போன்று கோல்களோ விறுவிறுப்போ இன்றி இப்போட்டி நடைபெற்றது.
முதல் பாதியில் கோல்கள் எதுவும் அடிக்கப்படவில்லை. எச்சரிக்கை அட்டைகள் எதுவுமில்லை. ஆனால் ஸ்பானியா பந்தை விளையாடுவதில் கூடிய பங்கை (59%)வகித்தது. இரண்டுதரப்பும் நான்குதடவை கோலுக்கு எத்தனித்திருந்தன.
இரண்டாவது பாதியில் 55ம் நிமிடத்தில் ஸ்பானியா ரொறெஸ்ஸை வெளியெடுத்து பாப்றெகாஸை மாற்றியது. அதனைத் தொடர்ந்து iஇருதரப்புக்கும் அடுத்தடுத்து 2நிமிட இடைவெளியில் தண்டனை உதைகள் கிடைத்தன. இரண்டும் கோல் காப்பாளர்களால் பிடிக்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து ஆட்டம் மிகுந்த விறுவிறுப்பாக காணப்பட்டது. 83ம் நிமிடத்தில் டேவிட் வில்லா ஒருகோலை அடித்தார். பீட்றொ அடித்த பந்து கோல் கம்பத்தில் பட்டு திரும்பியபோது அதனை திருப்பியடித்துக் கோலாக்கினார். அரையிறுதி ஆட்டத்துக்கு ஸ்பானியாதெரிவானதாக ஆட்டம் முடிவுக்கு வந்தது.
நடுவர்:Carlos Batres கௌதமாலா
அட்டைகள்
மஞ்சள்: பரகுவே 4 ஸ்பானியா 2
Ellis Park stadium/Johannesberg