2010/06/29

19வது நாள்...அரைக்காலிறுதி 4ம்நாள்

56/64 போர்த்துக்கல் எதிர் ஸ்பானியா 0:1(0:0)
Villa(63)
அரைக்காலிறுதியின் இறுதி ஆட்டம். எட்டு அணிகள் இந்த 1/8 இறுதிச்சுற்றில் வெளியேற வேண்டும். 8வதாக வெளியேற வேண்டிய அணியை இந்தப் போட்டி தீர்மானித்தது. போட்டியில் ஆடியவர்கள் அயலவர்கள். ஐரோப்பாவின் இருபிரபல அணிகளான போர்த்துக்கலும் ஸ்பானியாவும். குழுவில் 6புள்ளி முதல்நிலை என ஸ்பானியாவும் 5புள்ளி 2ம்நிலை என போர்த்துக்கலும் ஆரம்பச்சுற்றில் தேர்வாகி இன்று மோதின.

போட்டி விறுவிறுப்பாக தொடக்கம் முதலே காணப்பட்டது. முதல் 30 நிமிடத்தில் பந்தை அதிகமாக (59%) விளையாடியவர்களாக, கோலுக்கு எத்தனித்தவர்களாக ஸ்பானியர்களே காணப்பட்டனர். ஆனால் முற்பாதி கோலெதுவுமின்றி சமநிலையில் முடிவடைந்தது.

பிற்பாதியில் மோதல் மேலும் உச்சமாக இருந்தது.63ம் நிமிடத்தில் சிறப்பாக ஒரு கோலை வில்லா அடித்தார். ஸ்பானியா முன்னிலைக்கு வந்தது. முதன் முதலாக 74 ம் நிமிடத்தில் மஞ்சள் அட்டை காட்டப்பட்டது. காட்டப்பட்டவர் ஸ்பானியாவின் அலன்ஸோ. 79 நிமிடத்தில் அடுத்தது போர்த்துக்கல்லின் ரியாகோவுக்கு. 89ம் நிமிடத்தில் போர்த்துக்கலின் கோஸ்ரா சிவப்பு அட்டை காட்டி வெளியேற்றப்பட்டார்.. கடுமையான போட்டியின் பின் போர்த்துக்கல் வெளியேற ஸ்பானியா கால் இறுதி ஆட்டத்தில் பரகுவேயை சந்திக்க வருகிறது.
நடுவர்:Hector Baldassi/Argentina
மஞ்சள் அட்டை = போர்த்துக்கல்:1 ஸ்பானியா :1
சிவப்பு அட்டை = போர்த்துக்கல்:1
விளையாட்டரங்கு:Cape town Green Point Stadium

ரொனால்டோவும் சேர்ஜியோவும் வில்லா அடித்த கோல்சோகம்-ரோனால்டோ



55/64 பரகுவே எதிர் ஜப்பான் 0:0(0:0)

தண்டனை உதைமூலம் வெற்றி 5:3
அரைக்கால் இறுதி ஆட்டத்தின் இறுதிநாள் இன்று. முதல் ஆட்டத்தில் தென் அமெரிக்க பரகுவேயை எதிர்த்து ஆசியாவின் எஞ்சியுள்ள அணியான ஜப்பான் மோதவுள்ளது. முதல் சுற்றில் 2 வெற்றிகளுடன் 6புள்ளி பெற்று 2ம் நிலையில் ஜப்பான் உள்ளது. பதிலாக 5புள்ளி, 1வெற்றி, 2 சமம் என்ப்பெற்று குழுவில் முதல் நிலையில் பரகுவே உள்ளது.

போட்டி தொடங்கி முதல் 15 நிமிடங்கள் முடிந்த நிலையில் எவ்வித கோலோ அட்டைகளோ இன்றி விளையாடிக்கொண்டிருந்தார்கள். பந்தினைக் கையாள்வதில் உருகுவே 60%உம் ஜப்பான் 40%உம் எனக்காணப்பட்டது.முற்பாதியில் கோல் எதுவும் இல்லை. அட்டைகள் எதுவும் வழங்கப்படவில்லை. கோலாகியிருக்கக்கூடிய அடிகள் ஜப்பானியரால் 3ம் பரகுவேயினரால் ஒன்றும் அடிக்கப்பட்டன.பரகுவேயே பந்தை அதிகமாக 63% விளையாடியது.

பிற்பாதியில் ஆட்டம் தீவிரமடைந்திருந்தது . 58ம் நிமிடத்தில் ஜப்பானின் MATSUIக்கு முதல் மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது. பிற்பாதியாட்டத்திலும் எவ்வித கோலும் அடிக்கப்படவில்லை. எனவே மேலதிக விளையாட்டுக்கு முடிவு செய்யப்பட்டது. அதுவரை ஜப்பான் 3 மஞ்சள் அட்டைகளை வாங்கியிருந்தது.

இச்சுற்றுபோட்டியில் மேலதிக விளையாட்டுக்கு நேரம் வழங்கப்பட்ட 2வது ஆட்டமாக இது அமைந்தது. முதல் 15 நிமிடத்திலும் கோல் எதுவுமில்லை. ஆட்டநாயகனாக ஹொண்டா அறிவிக்கப்பட்டார். இம்மேலதிக நேரத்தில் தலா 1 மஞ்சள் அட்டை.
தொடர்ந்து சமநிலை
மாறாமையினால் முதன் முதலாக தண்டனை உதைமூலம் வெற்றி தோல்வி தீர்மானிக்க வேண்டிய விளையாட்டாக இந்தப்போட்டி அமைந்தது. காப்பாளர்களின் கைகளில் திறமையில் முடிவு விடப்பட்டது.ஜப்பானிய காப்பாளர் KAWASHIMA பரகுவே காப்பாளர்VILLAR.
தண்டனை உதையில் பரகுவே அணி 5:3 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
ஆட்டத்தின் நாயகன்
நடுவர்:Frank De Bleeckere/Belgium
மஞ்சள் அட்டை = பரகுவே:1 ஜப்பான் :4
சிவப்பு அட்டை = போர்த்துக்கல்:1
விளையாட்டரங்கு:Tshwane/Pritoria
0:0சமநிலையில் முற்பாதிதண்டனை உதை இவ்வாறு



வெற்றியை தீர்மானித்த உதை

2010/06/28

18வது நாள்...அரைக்காலிறுதி 3ம்நாள்


54/64 பிரேசில் எதிர் சிலி 3:0(2:0)
Juan(34) Fabiano(38)Robinho(59)

அரைக்காலிறுதி ஆட்டத்தின் 3ம் நாளில் 2ம் ஆட்டம் உலககிண்ணப் போட்டிகளில் பல சாதனைகளின் சொந்தக்காரர்களான பிரேசில் தன்னயலவரா ன சிலியுடன் ஆடும் ஆட்டமாக உள்ளது. முதல் சுற்றில் பிரேசில் 7புள்ளிகளையும் சிலி 6 புள்ளிகளையும் பெற்றிருந்தன.
ஆட்டம் தொடங்கி அரைமணிநேரம்வரை எவரும் கோலடிக்கவில்லை. பிரேசில் கூடுதலான முயற்சிகளை செய்திருந்தது. 30ம் நிமிடத்தில் எதிர்வீரரை வீழ்த்தியதற்காக KAKAவுக்கு மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது. சிவப்பு அட்டை பெற்றதனால் கடந்த போட்டியில் விளையாடாது தடுக்கப்பட்டு இன்று மீண்டும் விளையாட வந்துள்ளார். 34நிமிடத்தில் ஒரு கோணரைப் பயன்படுத்தி முதல் கோலை பிரேசில் அடித்தது. தலையால் இடித்து கோலாக்கியவர் JUAN. உடனடியாகவே அடுத்தகோல் பிரேசிலுக்கு. 38 நிமிடத்தில் அடித்தவர் FABIANO. முற்பாதி 2:1 என நிறைவுபெற்றது.
பிற்பாதியாட்டத்தில் 59ம் நிமிடம் ROBINHO பிரேசிலின் 3வது கோலை அடித்தார். தொடர்ந்து பந்தை விளையாடுவதில் இருதரப்பும் சமநிலையில் இருப்பினும் கோல் எத்த்னங்கள் பிரேசில் வீரர்களிடமே அதிகமாக இருந்தது. பல கோலடிக்கும் வாய்ப்புக்களை சிலி வீரர்கள் தவறவிட்டனர். காலிறுதி வாய்ப்பை பிரேசிலுக்கு வழங்கி சிலி சுற்றுப்போட்டியிலிருந்து வெளியேறியது.

ஆட்டத்தின் நாயகன் Robinho
நடுவர்: Howrad WEBB/England
மஞ்சள் அட்டை பிரேசில்:2 சிலி:3
விளையாட்டரங்கு:Ellis Park Stadium. Johannesberg

2வதுகோல்-FABIANO

1வதுகோல்- JUAN-
தலை இடி
3வது கோலடித்தROBINHO
நண்பர்களுடன்

53/64 நெதர்லாந்து எதிர் ஸ்லவாக்கியா 2:1(1:0)

Robben(18)Sneijder (84)Vittel(93penalty)

அரைக்காலிறுதி ஆட்டத்தின் 3ம் நாளில் முதல் சுற்றின் 3 போட்டிகளில் வெற்றியைக் குவித்த நெதர்லாந்து குழுநிலையில் ஒருவெற்றியை, ஒரு சமனைப் பெற்று 2ம் இடமாக வந்த ஸ்லவாக்கியாவுடன் இன்று மோதுகிறது.

18ம் நிமிடத்தில் நெதர்லாந்து முதலாவது கோலை அடித்தது. ROBBEN அதனை அடித்தார். 31ம் நிமிடத்தில் கையால் பந்தினைதட்டியதற்காக மஞ்சள் அட்டையையும் அவர் பெற்றார்.40ம் நிமிடத்தில் ஸ்லவாக்கியாவின் KUCKAக்கு மஞ்சள் அட்டை.
முன் பாதியாட்டம் 1:0 என்கிற நிலையில் முடிவடைந்தது. இருதரப்பும் தலா 7முறை விதியைமீறி விளை யாடியுள்ளன.நெதர்லாந்து 7 தடவையும் ஸ்லவாக்கியா 5 தடவையும் கோலடிக்க எத்தனித்துள்ளன. ஏறக்குறைய சம அளவில் பந்தை(51%:49%) விளையாடியுள்ளன.

பின்பாதியாட்டத்தில் 30 நிமிடங்கள் முடிந்தும் விளையாட்டின் போக்கில் அதிக மாற்றங்கள் இல்லை. 84ம் நிமிடத்தில் நெதர்லாந்தின் SNEIJDER 2 வது கோலை அடித்தார்.
மேலதிக நேரத்தில் தண்டனை உதைமூலம் ஸ்லவக்கியா ஒரு கோலை அடித்தது. கோல் பிரதேசத்துக்குள் நெதர்லாந்தின்STEKELENBURG விதிகளை மீறி ஸ்லவாக்கிய வீரரை வீழ்த்தியமைக்காக தண்டனை உதை வழங்கப்பட்டது. அதனைப் பயன்படுத்தி VITTEKகோலை இறக்கினார்.அத்துடன் 2:1 என்கிற நிலையில் ஆட்டம் நிறைவடைந்தது. ஆட்டத்தின் நாயகனாக ROBBEN தெரிவானார்.



நடுவர்:Alerto UNDIANO/SPAIN
மஞ்சள் அட்டை நெதர்லாந்து:2 ஸ்லவாக்கியா:3
விளையாட்டரங்கு:DURBAN Stadium

ROBBEN ன் கோல்
ஆட்டத்தின்
நாயகன்
Robben

2வது கோலடித்த சினைடரை
தூக்கி கொண்டாட்டம்

2010/06/27

17வது நாள்...அரைக்காலிறுதி 2ம்நாள்

52/64 ஆர்ஜன்ரீனா எதிர் மெக்சிக்கோ 3:1(2:0)
Tevez(26,52).Higuain(32)Hernandez(71)

இன்றைய 2வது ஆட்டத்தில் இதுவரை இச்சுற்றுப்போட்டியில் தோல்வியைக் காணாத
9 புள்ளிகளுடன் தேர்வான மரடோனாவின் பயிற்சியில் உருவான ஆர்ஜன்ரீன அணி ஒரு வெற்றி ஒரு சமமென 4 புள்ளிகளைக் கொண்டுள்ள மெக்சிக்கோவுடன் மோதியது. தொடக்கம்
முதலே இரு அணிகளும் மிகப்பலமாக மோதிக்
கொண்டன. வட அமெரிக்க தென் அமெரிக்க மோதலாக
உள்ள இப்போட்டியில் முதல்25 நிமிடம் வரை கோல் எதுவும்
அடிக்கப்படவில்லை



26ம் நிமிடத்தில் தன் முதல் கோலை அடித்தது. அடித்தவர் Tevez. அக்கோல் காப்பாளர் பிடித்து தவறியதால் அடிக்கப்பட்டது. ஆனால் துணைநடுவர் பக்கம் மேவி நின்ற ஆர்ஜன்ரீனா வீரரைக் கவனிக்கவில்லை. என மெக்சிக்கோவினரஆட்சேபித்து துணைநடுவருடன் வாதிட்டனர்.
32ம் நிமிடத்தில் அடுத்த கோலும் இறங்கியது. அதனை அடித்தவர் Higuain.
இத்துடன் முற்பாதி முடிவுற்றது.
பிற்பாதி தொடங்கி 7 நிமிடத்தில் Tevez
அடுத்த கோலை அடித்தார். 71ம் நிமிடத்தில் மெக்சிக்கோவின் ஹெர்ணாண்டஸ் கோலொன்றை அடித்து மெக்சிக்கோவுக்கு ஆறுதல் கொடுத்தார். பிற்பாதியில் ஆர்ஜன்ரீனாவின் விளையாட்டில் உற்சாகம் காணப்படவில்லை. 3:1 எனும் கணக்கில் ஆட்டம் முடிவற்றது. ஆட்டத்தின் நாயகனாக Tevez
தெரிவானார்.

ஆட்டத்தின் நாயகன்-Carlos Tevez

.
நடுவர்:Roberto Rositti/Italy
மஞ்சள் அட்டை:
ஆர்ஜன்ரீனா 0 மெக்சிக்கோ 1
விளையாட்டரங்கு:Socer city stadium/Johannesberg


51/64 ஜேர்மனி எதிர் இங்கிலாந்து 4:1(2:1)
Klose(20)Podolski(32)Upson(37)Mueller(67,70)



ஐரோப்பாவின் பிரபலமான இரண்டு அணிகள் மோதும் ஆட்டம் இன்று முதலாவதக இடம்பெற்றது. சிகப்பு அட்டையில் வெளியேற்றப்பட்ட ஜேர்மனியின் குளோச
இன்று மீண்டும் களம் இறங்கியுள்ளார்.
அதனால் ஜேர்மனி ரசிகர்கள் மிக ஆர்வத்துடன் உள்ளனர்.
உலகதரத்தில் 6வது 8வது இடங்களில் உள்ள இவை
இச்சுற்றுப்போட்டியின்
தரவுகளில் சமனாகவே உள்ளனர்.(தலா 4ஆட்டம்+ 1வெற்றி+ 2 சமநிலை)
ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றாலும் 18 நிமிடம் வரை கோல் எதுவுமில்லை. ஆனால் ஜேர்மனி கூடுதலாக பந்தைக் கையாள்வதாக இருந்தது.
20 ம் நிமிடத்தில் குளோச அருமையான ஒருகோலை இறக்கினார். ஜேர்மனிய காப்பாளர் தூர இருந்து அடித்த பந்தையே குளோச கோலடித்தார்.
அதே நேரம் 30 நிமிடத்தில் ஒரு கோலைத் தவறவிட்டார்.
2நிமிடத்தில்
பொடொல்ஸ்கி அடுத்த கோலை இறக்கினார்.
அதிரடியாக இங்கிலாந்தின் அப்சன்
ஒருகோலை 37ம் நிமிடத்தில் இறக்கினார். போட்டி மிக
மிக விறுவிறுப்பான நிலையடைந்தது.
முற்பாதி 2:1 எனும் நிலையில் நிறைவுற்றது.

2ம் பாதி தொடங்கி 2 நிமிடத்தில் ஜேர்மனியின் ப்றீட்ரிச்க்கு மஞ்சள் அட்டை கொடுபட்டது. இதுவே இவ்வாட்டத்தில் முதல் அட்டையாகும். ஜேர்மனியின் முல்லர் அடுத்தடுத்து 67,70ம் நிமிடங்களில் கோலடித்து
ஜேர்மனியை மிக வலுவான நிலைக்குக் கொண்டுவந்தார். இவரே இன்றைய ஆட்டத்தின் நாயகனும் இவரே.

மிக சிறப்பாக தனது முதல் ஆட்டம் போலவே 4 கோலடித்து வலுவான ஒரு வெற்றியை பதிவு செய்துள்ள ஜேர்மனி அடுத்ச் சந்திக்கப்போவது
ஆர்ஜன்ரினாவாக இருக்கும்.


நடுவர்:Jorge LARRRIONDA/Uruguay
மஞ்சள் அட்டை:
ஜேர்மனி 1 இங்கிலாந்து 1

விளையாட்டரங்கு:Mangaung/Bloemfontein

2010/06/26

16வது நாள்...அரைக்காலிறுதி ஆரம்பம்

50/64 அமெரிக்கா எதிர் கானா 1:2(0:1)
Prince (5)Danovan(62தண்டனைஉதை )Asamao Gyan (93)

இன்றைய 2வது போட்டியில் அமெரிக்கா கானாவை எதிர்த்து விளையாடியது.
குழுவில் ஒருவெற்றி 2 சமன் என முதலாம் இடம்பெற்று அரைக்காலிறுதிக்கு தெரிவானது அமெரிக்கா. வெற்றி, தோல்வி, சமன் என சகலதிலும் ஒன்றைப்பெற்று 2வது நிலையில் வந்தநாடு கானா. கானா மட்டுமே ஆபிரிக்கக் கண்டத்திலேயிருந்து 2ம் சுற்றுக்குத் தெரிவாகிய நாடு. அவர்கள் தோல்வியடைந்தால் ஆபிரிக்காவின் பிரதி நிதித்துவம் முற்றாக முடிந்து போய்விடும். அமெரிக்கா

போட்டி தொடங்கி 5வது நிமிடத்தில் பிறின்ஸ் ஒரு கோலை அதிரடியாக இறக்கிக் கானாவிற்கு நல்வாய்ப்பை வழங்கினார். 20 நிமிடத்துக்குள் அமெரிக்க வீரர்கள் இருவர் மஞ்சள் அட்டை பெற்றார்கள். 35 நிமிடம் வரையில் கானா 7தடவையும் அமெரிக்கா 4 தடவையும் கோல் அடிக்க முயன்றிருந்தார்கள். முற்பாதி 0:1 என முடிவடைந்தது.
பிற்பாதி தொடங்கி 2வது நிமிடத்தில் அமெரிக்காவுக்கு கோலடிக்க நல்ல வாய்ப்பு ஒன்று கிடைத்தது. ஆனால் கானாவின் காப்பாளர் தட்டிவிட்டார். திருப்பி அடிக்க அமெரிக்கர் யாரும் அருகில் இருக்கவில்லை. 62ம் நிமிடத்தில் விதிகளுக்கு மாறாக அமெரிக்க வீரரை வீழ்த்தியமையால் தண்டனை உதை வழங்கப்பட்டது. அதனை கச்சிதமாக அடித்து 1:1 என சமநிலைக்கு கொண்டுவந்தார் லண்டன் டனோவன். பிற்பகுதி தொடங்கியதிலிருந்து அமெரிக்க வீரர்களது கையே ஒங்கி இருந்தது. ஆட்டமுடிவுவரை சமநிலையே நிலவியதால் மேலதிக நேரத்துக்கு விளையாட்டு விளயாடப்பட்ட முதல் ஆட்டம் இதுவாகும்.
மேலதிக நேரம் தொடங்கிய 3வது நிமிடத்தில் 2வது கோலை அசமாஓ கியன் அடித்தார். கானா மீண்டும் முன்னிலைக்கு வந்தது. மேலதிக நேரத்தின் வேறுகோல்கள் இல்லை. அதனால்
கானா 2வது போட்டியில் வென்று கால் இறுதி ஆட்டத்துக்குச் செல்கின்றது.


நடுவர்:Victor KASSAI/கங்கேரி
மஞ்சள் அட்டை:அமெரிக்கா 3, கானா 2
விளையாட்டரங்கு:Rosternburg



49/64 உருகுவே எதிர் தென் கொரியா 2:1(1:0)
Zuarez (8,80) Chungyong(68)


வெற்றி தோல்வி நிச்சயிக்கப்பட வேண்டிய, தோற்றவர் வெளியேற வேண்டிய முதல்கோல்சுற்று இன்று தொடங்கியது. போட்டி 90 நிமிடத்தில் சமநிலை கண்டால் மேலதிகமாக 30 நிமிட விளையாட்டு. அதிலும் சமநிலை எனில் தண்டனை உதைமூலமாக வெற்றி நிச்சயிக்கப்பட வேண்டும்.

இறுதிச்சுற்றின் முதல் போட்டி இது. தென் அமெரிக்க உருகுவேக்கு எதிராக ஆசியாவின் தென் கொரியா மோதும் முதல் போட்டி. Aகுழுவில் முதலாவது நிலைபெற்ற அணி உருகுவே. தென்கொரியா Bகுழுவில் 2வது நிலைபெற்றது.
விறுவிறுப்பாகப் போட்டி தொடங்கி 8ம் நிமிடத்தில் உருகுவேயின் ZUAREZஒருகோலை அற்புதமாக அடித்தார். தொடர்ந்து போட்டி வலுவடைந்தாலும் எவரும் கோல் அடிக்கவில்லை.
ஆனால் கொரிய வீரர்கள் ஆட்டத்தில் வேகம் காட்டிச் சுறுசுறுப்பாக ஆடினர். 38ம் நிமிடத்தில் கொரியவீரர் JUNGWOOக்கு மஞ்சள் அட்டை காட்டப்பட்டது. முற்பாதியாட்டம் 1:0 என்கிற நிலையில் முடிவுக்கு வந்தது.
பிற்பாதியாட்டத்தில் கொரியா மேலும் வேகம் காட்டி விளையாடியது. கோலடிக்க பல தடவைகள் எத்தனித்தது. ஆனால் சாத்தியமாகவில்லை. உருகுவேயின் கோல் காப்பாளர் சிறப்பாக தடுத்து விளையாடினார்.
68ம் நிமிடத்தில் கொரியா முதல்கோலை அடித்தது. CHUNGYONG அக்கோலை அடித்தார். ஆட்டம் சமநிலைக்கு வந்தது. அடுத்த நிமிடத்தில் கொரிய DURI க்கு மஞ்சள் அட்டை கொடுபட்டது. 80ம் நிமிடத்தில் ZUAREZ 2வது கோலையும் அடித்தார். உருகுவே பலமான 2:1என நிலைக்கு வந்தது. இன்னும் 10 நிமிடமே ஆட்டம் உள்ளது. 87ம் நிமிடத்தில் கொரியாவுக்கு ஒரு ச்ந்தர்ப்பம் கிடைத்தது. காப்பாளர் பிடித்தது நழுவிக்கோல் செல்ல இருந்த நிலை இன்னொரு வீரரால் காப்பாற்றப்பட்டது. இறுதிச்சுற்றில் கொரியா முதல் வெளியேறும் நாடனது.முதலாவது வெற்றியை உருகுவே உறுதிப்படுத்தியதுடன் ஆட்டம் முடிவடைந்தது.





நடுவர்:Wolfgang STARK/ஜேர்மனி
மஞ்சள் அட்டை= உருகுவே 0:3கொரியா
விளையாட்டரங்கு:Nelson Mandla Bay/Port Elizebeth
.

முதல் சுற்றின் முக்கிய அம்சங்கள்

உலககிண்ணம் 2010இல் இதுவரை 48 போட்டிகள் நடந்து இறுதிச்சுற்றுக்கான 16 அணிகள் தேர்வாகிவிட்டன. குழுநிலையில் 8 குழுக்களிலும் உள்ளடங்கியிருந்த ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் மோதி பாதி அணிகள் வெளியேறின. முதல் சுற்றின் முக்கிய அம்சங்கள் இவை:

  1. 48 போட்டிகளிலும் அடிக்கப்பட்ட கோல்கள் 101.
  2. தென்னமெரிக்காவிலிருந்து போட்டியிட்ட 5 அணிகளுமே இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றன.(100%)
  3. ஐரோப்பாவிலிருந்து போட்டியிட்ட 13 அணிகளில் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றவை 6 அணிகள் மட்டுமே.(46%)
  4. ஆசியாவிலிருந்து 2 அணிகள் .(50%)
  5. வட அமெரிக்காவிலிருந்து 2 அணிகள்(50%)
  6. ஆபிரிக்காவிலிருந்து ஒரேயொரு அணி மட்டும்.(17%)
  7. நடப்புச் சம்பியனான இத்தாலி முதல் சுற்றிலேயே வெளியேறியது.
  8. நடப்பு துணைச் சம்பியனான பிரான்சும் முதல் சுற்றிலேயே வெளியேறியது.
  9. மூவர் தலா 3 கோல்களை அடித்துள்ளனர். அவர்கள்Higuain/Argntina, VILLA /Spain, VITTEK/Slavakia
  10. 3 போட்டிகளிலும் வென்றவர்கள்: ஆர்ஜன்ரீனா, நெதர்லாந்து ஆகியவை.

2010/06/25

15வது நாள்...25.6.2010


48/64 சுவிஸ் எதிர் ஹொண்டூராஸ் 0:0 (0:0)
நடுவர்:Hector BALDASSI/Argentina
விளையாட்டரங்கு: Mangaung/Bloemfontein







47/64 சிலி எதிர் ஸ்பெயின் 1:2(0:2)
நடுவர்:Marco RODRIGUEZ/Mexico
விளையாட்டரங்கு:Pretoria
முதல் சுற்றின் இறுதியாட்டத்தில் சுவிச்சர்லாந்தை(3புள்ளி) எதிர்த்து ஹொண்டுராஸ்(0புள்ளி) மோதுகிறது. மறு ஆட்டத்தில் 6 புள்ளியுடன் சிலி 3 புள்ளியுடன் ஸ்பானியா.


முதல் கோல் ஸ்பெயினால் அடிக்கப்பட்டது. முன்னுக்கு வந்தவிட்ட காப்பாளருக்கு மேலால் வில்லா தூக்கியடித்தால் கோல் இல்குவாக கிடைத்தது,
24ம் நிமிடத்தில்.

மறுபோட்டியில் கோலெதுவுமில்லை.
அடுத்தகோலும் ஸ்பெயினுக்கு 37 நிமிடத்தில். அடித்தவர் INIESTA.

37 நிமி.சிலிவீரருக்கு மஞ்சள் சிவப்பு அட்டை. வெளியேறியவர் ESTRADA

பெரும் சிக்கலுக்குள் சிலி வந்தது. சுவிஸ் மறுபோட்டியில் வென்றால் சுவிசும் ஸ்பானியாவுமே இறுதிச்சுற்றுக்குச் செல்ல நேரும். போட்டியைச் சமன் செய்வது சிலிக்கு அவசியம். அதுவும் 10 பேருடன்.

பிற்பாதியில் தொடங்கி 2நிமிடத்தில் சிலி கோலடித்தது.அடித்தவர் MILLAR.
எனவே சிலியின் பிரச்சனை தீரும் நிலை தென்பட்டது. அதன் பின் எவரும் கோலடிக்கவில்லை.

முதல் சுற்றின் கடைசிப்போட்டியாக அட்டவணைப் படுத்தப்பட்ட சுவிஸ் எதிர் ஹொண்டூராஸ் போட்டி கோல்களற்ற சமநிலையில் முடிவடைந்தது. முதல்போட்டியான தென் ஆபிரிக்கா எதிர் மெக்சிக்கோ போட்டி 1:1 சமநிலையிலேயே முடிவடைந்தது போலவே இறுதியான 48வது போட்டியும் சமநிலையில் முடிவடைந்தது.





46/64 வடகொரியா.ஐவரிகோஸ்ற் 0:3 (0:2)
நடுவர்:Alberto UNDIANO/Spain
விளையாட்டரங்கு:Nelspruit










45/64 போர்த்துகல் எ.பிரேசில் 0:0 (0:0)
நடுவர்: Benito Archundia/Mexico
விளையாட்டரங்கு: DURBAN STADIUM

முதல் இறுதியின் கடைசி 4 போட்டிகள் இன்று இடம்பெறுகின்றன. இன்றுடன் அரைக்காலிறுதி ஆட்டங்களை யார் யாருடன் விளையாடுவது என்பது முடிவாகிவிடும்.

14ம் நிமிடத்தில் முதலாவது கோலை ஐவரிகோஸ்ற் அடித்தது. அடித்தவர் TOURE YAYA.

20ம் நிமிடத்தில்
2வது கோலை ஐவரிகோஸ்ற் அடித்தது. அடித்தவர் ROMARIC

முற்பாதி முடிவதற்கிடையில் பிரேசிலுக்கு 3 போர்த்துக்கலுக்கு 4 மஞ்சள் அட்டைகள் கொடுபட்டன. கோல்கள் எதுவுமில்லை. அதேவேளை அடுத்த போட்டியில் ஒரு மஞ்சள் அட்டையும் இல்லை. பந்தினை விளையாடிய பங்கு பிரேசிலுக்கு 61% ஆக இருப்பினும் கோலடிப்பது சாத்தியமாகவில்லை.

மீண்டும் ஒருகோல். 82ம் நிமிடத்தில்3
வது கோலை ஐவரிகோஸ்ற் அடித்தது. அடித்தவர் KALO


ஐவரிகொஸ்ற் வெற்றியடைய பிரேசில்-போர்த்துகல் சமநிலை காணவும் 2 போட்டிகளும் முடிந்தன.