2010/06/19

9வது நாள்...19.6.2010

26/64 கமரூன் எதிர் டென்மார்க் 1:2(1:1)
முதல் போட்டியில் தோற்றுப் புள்ளிகள அற்றிருக்கும் கம்ரூன், டென்மார்க் என்பன இன்றைய 3வது போட்டியில் மோதுகின்றன. உலகத்தரம் 19:36 என்கிற நிலை. இருஅணிகளும் முதலில் இப்போட்டியிலேயே சந்திக்கின்றன.
ஆரம்பம் முதலே வலுவாக மோதல் இருந்தது. போட்டி தொடங்கி 10வது நிமிடத்தில் ETO Oமூலம் தன் முதல் கோலை கமரூன் பதிவு செய்தது. தொடர்ந்தும் கமரூனே ஆதிக்கம் செலுத்தினாலும் 33ம் நிமிடத்தில் டென்மார்க்கின் POULSON அடுத்த கோலை இறக்கினார். 41ம் நிமிடத்தில் டென்மார்க்கும் 42 ,43ம் நிமிடங்களில் கமரூனும் கோலடிக்கும்ம் சிறந்த 3வாய்ப்புக்களைத் தவறவிட்டன. எதுவித அட்டைகளும் பெறாமல் சிறப்பான ஆட்டமாக முற்பாதி சமநிலையில் முடிவடைந்தது.


பிற்பாதியாட்டம் தொடங்கி 4நிமிடத்தில் முதலாவது மஞ்சள் அட்டை கமரூனின் BASSONGக்குக் கொடுக்கப்பட்டது. 61ம் நிமிடத்தில் டென்மார்க் அடுத்த கோலை (ROMMEDHAL)அடித்தது. கோலடிப்பதற்கான ஏராளமான வாய்ப்புக்களை தவறவிட்ட கமரூன் வெற்றியை டென்மார்க்குக்கு வழங்கி வெளியேறியது.
டென்மார்க்கின் கோல்காப்பாளர் உட்பட 4 மஞ்சள் அட்டைகள் வழங்கப்பட்டன.






நடுவர்: Larrionda/Uruguay
விளையாட்டரங்கு:Pretoria
பார்வையாளர்:45,000


25/64 அவுஸ்திரேலியா எதிர் கானா 1:1(1:1)

இரண்டாவது போட்டியில் அவுஸ்திரேலியா கானாவுக்கு எதிராக. போட்டி தொடக்கம் முதலே பரபரப்பானபோட்டி.
தொடங்கி 11வது நிமிடத்தில்
அவுஸ்திரேலிய வீரர் HOLMAN முதலாவது கோலை அடித்தார். காப்பாளர் பிடித்துத் தவற்விட்ட பந்தே அடிக்கப்பட்டுக்கோலானது. 23ம் நிமிடத்தில் கோல் வாயிலில் KEWELLகையால் பந்தை மறித்ததால் சிவப்பு அட்டை கொடுத்து வெளியேற்றப்பட்டார். தொடர்ந்த தண்டனை உதையில் கானா ஒருகோலை (ASAMAO GYAN)அடித்து சமப்படுத்தியது. முற்பாதி 1:1 என முடிந்தது.
பிற்பாதியில் 10பேர்கொண்ட அவுஸ்திரேலியாவுடன் கானா கடுமையாகப் போராட வேண்டியிருந்தது. இருதரப்பும் கோலாடிக்க மிகுந்த பிரயத்தனங்களை மேற்கொண்டனர். 71ம் நிமிடத்தில் கோலடிக்க கிடைத்த அற்புதமான வாய்ப்பு ஒன்றை அவுஸ்திரேலியா தவறவிட்டது. இறுதி நேரத்தில் அவுஸ்திரேலியர்கள் கடுமையாகப் போராடினர். இறுதியில் ஆட்டம் சமமாக முடிந்தது.






நடுவர்: Rosetti/Italy

விளையாட்டரங்கு:Rustenburg
பார்வையாளர்:20,000


24/64 நெதர்லாந்து எதிர் ஜப்பான் 1:0(0:0)

இன்ற முத்லாட்டத்தில் நெதர்லாந்துக்கு எதிராக ஜப்பான் விளையாடுகிறது. முதல் போட்டியில் வென்று த்லா 3 புள்ளிகளுடன் இரு அணிகளும் உள்ளன. இதில் வெல்பவர் அடுத்த சுற்றுக்குச் செல்வது உறுதியாகிவிடும். உலக தரத்தில் 4:45 என நிலைகொண்டுள்ள இவை முதன்முதலாக இப்போட்டியில் சந்திக்கின்றன.
ஆட்டம் தொடங்கி 30 நிமிடம் வரை இருதரப்பும் சமநிலையில் விளையாடிக்கொண்டிருந்தனர்.பந்தை விளயாடியதில் நெதர்லாந்தே அதிக சதவீதம் கொண்டிருந்தது. 35ம் நிமிடத்தில் நெதர்லாந்துவீரர் VAN DER WIELக்கு எதிரணிவீரரை வீழ்த்தியமைக்காக முதல் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. ஜப்பானியர்களுக்கு கோலடிப்பதற்கான வாய்ப்புகள் சில கிடைத்தன. ஆயினும் கோல் எதுவுமில்லை. முற்பாதி ஆட்டம் கோலெதுவுமின்றி முடிவடைந்தது.
பிற்பாதி தொடக்கத்திலிருந்தே நெதர்லாந்தின் விளையாட்டில் வேகம் காணப்பட்டது. கோலடிக்க பல எத்தனங்களை மேற்கொண்டனர்.53ம் நிமிடத்தில் முதலாவதுகோலை SNEIJDER இறக்கினார். ஜப்பான் கோல்காப்பாளரது தவறு
கோலுக்குக் காரணமாகியது. மேலும் 3 கோலடிக்கும் வாய்ப்புக்களை (2 நெதர்லாந்து 1 ஜப்பான்) தவறவிட்டனர். இறுதியில் நெதர்லாந்து 1:0 என வெற்றியை தன்வசமாக்கிக்கொண்டது.

நடுவர்: Baldassi/Argentina

விளையாட்டரங்கு:Durban
பார்வையாளர்:60,000