2010/07/03

21வது நாள்..காலிறுதி மூன்றாவது போட்டி

59/64 ஜேர்மனி எதிர் அர்ஜன்ரீனா 4:0(1:0)

Thomas Muller 3,Miroslav Klose (68,89)Arne Friedrich (74)

முன்நாளில் உலகநாயகனாக இருந்த இரண்டு நாடுகள் இந்தக் காலிறுதியின் 3வது போட்டியில் மோதிக்கொள்கின்றன. ஜெர்மனி அதிபர், தென்னாபிரிக்க அதிபர் என பெரிய தலைவர்கள் ஆட்டத்தினைக்காண களத்துக்கு வந்திருந்தனர்.

மிகுந்த பரபரப்பான சூழலில் விறு விறுப்பாகப் போட்டி ஆரம்பமானது
3ம் நிமிடத்தில் எதிர்பாராத விதமாக ஜேர்மனி கோலடித்தது. தூரவைத்து
ஸ்வைன்ஸ்ர்ரைகர் அடித்த பந்தினை முல்லர் லாவகமாக தலையால் தட்டிவி
ட அது கச்சிதமான கோல் ஆனது. .11ம் நிமிடத்தில் அர்ஜன்ரீனா முதல் மஞ்சள்
அட்டையை வாங்கியது. முற்பாதி 1:0 என முடிவடைந்தது.

உலககோப்பையின் வரலாற்றில் முக்கிய ஓர் ஆட்டக்காரராகச் சரித்திரம் படைத்துள்ள மரடோனாவின் பயிற்சியின் கீழ் உருவாக்கப்பட்டஅணி இம்முறை உலகக்கோப்பையை வெற்றிகொள்ளும் என பலதரப்பு
களால் எதிர்வு கூறப்பட்டிருந்தன. முன்னைய போட்டிகளில் அவ்வாறே
சுலப வெற்றிகளை அது ஈட்டி வந்திருந்தது.ஆனால் இன்று சகலதும் தலைகீழாக
மாறிப்போனது.

ஜேர்மனி 3ம் நிமிடத்தில் ஒரு கோலெனெமுன்னிலை வகித்தது என்பதுடன், ஆட்டம்முழுவதிலும்சிறப்பாகவும் விளையாடியது. 68 Klose, 74 Friedrich, 89 Klose
என அடுத்தடுத்துக் கோல்களை அடித்து ஆர்ஜன்ரீனாவை அமுக்கிவிட்டது.
ஒரு கோலைக் கூட அடிப்பதற்குஅனுமதிக்கவில்லை. ஜேர்மனியின் கோல் காப்பாளர் NEURER மிகச் சிறப்பாக ஆர்ஜன்ரீனாவின் அடிகளை பிடித்து ஜேர்மனியின் வெற்றிக்கு மிக உதவினார்.

இன்று 2 கோல்களை அடித்ததுடன் உலககிண்ணத்தில் அதிக கோலடித் தவர்களில் 2வது இடத்துக்கு KLOSE உயர்ந்திருக்கிறார். முதலிடத்தை
சமன் செய்ய ஒரு கோல் வேண்டும். சாதனையாளனாகிட 2 கோல்வேண்டும். (அது கூடச் சத்தியமாயி ருந்திருக்கும், 2 வது போட்டியான சேர்பியாவுக்கு எதிரான போட்டியில் சிவப்பு அட்டை வங்காமலிருந்திருந்தால்)அவரின் கணக்கு இன்று 14. உலகசாதனை 15. ரொனால்டோ.

அரையிறுதி ஆட்டத்தில் ஸ்பானியாவை ஜேர்மனி சந்திக்கின்றது. இதுவர
விளையாடிய 5 ஆட்டங்களில் 4:0- 0:1- 1:0- 4:1- 4-0 என கோல் கணக்குக் கொடுத்து 13:2 என தேறிய கோல் கணக்கில் ஜேர்மனி உயர்வாக
நிற்கிறது.








நடுவர்: Irmatov.உஸ்பெஸ்கிஸ்தான்
அட்டைகள்
மஞ்சள்: ஜேர்மனி 1 ஆர்ஜன்ரீனா 1

விளையாட்டரங்கு:GreenPointStadium. Cape Town



No comments: