2010/07/12

இறுதிப்போட்டி பற்றி தமிழ் இதழ்களில்..................!..2


வலம்புரி-யாழ்ப்பாணம்

ஸ்பெயின் அணி "உலக சம்பியன்'
[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-07-12 08:04:24| யாழ்ப்பாணம்]
உலகக்கிண்ண கால் பந்தாட்டத் தொட ரில் ஸ்பெயின் அணி சம்பியனாகி வரலாறு படைத்தது 19ஆவது உலகக்கிண்ண கால் பந்தாட்ட தொடரில் நேற்று நடைபெற்ற இறு திப் போட்டியில் ஸ்பெயின் அணி 1:0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து அணியை வீழ்த்தியது.

தென்னாபிரிக்காவில் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த 19ஆவது உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டி நேற்று ஜோனஸ் பேர்க் சாக் கர் சிட்டி மைதானத்தில் நடைபெற்றது. இப் போட்டியில் முழு நேரம் வரை எந்த அணியும் கோல் போடவில்லை இதையடுத்து கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதில் ஆட் டத்தின் 116ஆவது நிமிடத்தில் ஆன்ட்ரஸ் இனியஸ்டா அட்டகாச மாக ஒரு கோல் அடித்து ஸ்பெயின் அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார்.

இதன் மூலம் ஸ்பெயின் அணி 1:0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி உலக சம்பியன் ஆகியது. உலகக் கிண்ண கால்பந்தாட்ட வரலாற் றில் முதல் முறையாக ஸ்பெயின் அணி சம்பியனாகி வரலாறு படைத்தது. கடைசிவரை போராடிய நெதர்லாந்து தோல்வியடைந்து இரண்டாம் இடத்தை பெற் றது.

ஒக்டோபஸ் வெற்றி

இந்த உலகக் கிண்ண கால் பந்தாட்டத் தொடரில் ஸ்பெயின் அணி சம்பியனாகும் என ஜேர்மன் வாழ் கடல் உயிரினம் ஒக்டோபஸ் அறிவித்தது. இது நடைபெற்றதால் ஒக்டோபஸின் கணிப்பு இத் தொடரில் 100 வீதம் வெற்றி பெற்றுள்ளது.

வண்ணமயமான நிறைவு விழாஉலகக்கிண்ண கால்பந்தாட்டத்தொடர் பிரமாண்டமான கலை நிகழ்சிகளுடன் நேற்று நிறைவடைந்தது. நிறைவு விழாவில் தென்னா பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா கலந்து கொண்டார்.

உலகக்கிண்ண கால் பந்து தொடர் நிறைவு விழா நிகழ்ச்சி நேற்று சாக்கர் சிட்டி மைதா னத்தில் நடந்தது. நிறைவு விழா மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த இறுதிப் போட் டியை பார்க்க 88ஆயிரம் ரசிகர்கள் திரண் டிருந்தனர்.பல நாட்டுத் தலைவர்களும் சாக்கர் சிட்டி யில் முகாமிட்டிருந்தனர். இதனால் அங்கு வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டி ருந்தது.

போட்டிக்கு முன்னதாக பிரமாண்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன இதில் பிரபல கொலம் பிய பாடகி கிரா, வாகா வாகா ஆபிரிக்கா என்ற உலகக்கிண்ண தீம் பாடலை பாடி அசத்தினார். பின்னர் லேசர் விளக்குகளால் உலகக் கிண்ண தொடர்களில் விளையாடிய 32 நாட்டு அணிகளின் கொடிகளும் மைதானத் தில் உருவாக்கப்பட்டது ரசிகர்களை கவர்ந் தது. அவ்வப்போது நடந்த வாணவேடிக்கை களும் கண்களைப்பறித்தன.

தொடர்ந்து மைதானத்தில் அழகிய குளம் ஒன்று உரு வாக்கப்பட்டது. அதைச்சுற்றி ஏராளமான ஆபிரிக்க யானைகள் கூட்டம் கூட்டமாக நிற் பது போலவும் தண்ணீர் குடிப்பது போலவும் தத்தருவமான உருவாக்கி காட்டப்பட்டது.இவர்கள் தவிர ஆபிரிக்க கண்டத்தின் பாரம்பரியத்தை விளக்கும் விதமாக ஏராள மான இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

இறுதியில் தென்னாபிரிக்கா முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா பலத்த கரகோ சத்துக்கிடையே மைதானத்துக்கு அழைத்து வரப்பட்டது சிறப்பாக அமைந்தது. கறுப்பு நிற கோட் அணிந்து முன்னாள் மனைவி வின்னி மண்டேலாவுடன் அவர் மைதானத்துக்குள் வந்தார். அவரை பார்த் ததும் சாக்கர்சிட்டியில் பலத்த ஆரவாரம் ஏற்பட்டது. இத்துடன் நிறைவு விழா நிகழ்ச்சிகள் முடிபடைந்தன.


தமிழ் மிரர்-கொழும்பு

முதன்முறையாக கிண்ணம் வென்றது ஸ்பெயின்

விறுவிறுப்பாக நடைபெற்ற உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் இறுதிப் போட்டியின் இறுதி நேரத்தில் ஒரு கோலினைப் போட்டு உலகக்கிண்ணத்தினைச் சுவீகரித்திருக்கிறது ஸ்பெயின்.

19ஆவது உலகக்கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் நிறைவடைந்திருக்கின்றன. கடந்தமாதம் 11ஆம் திகதி தென்னாபிரிக்காவில் ஆரம்பமாகிய கால்பந்தாட்ட போட்டிகள் இம்மாதம் 11ஆம் திகதியுடன் நிறைவடைந்திருக்கிறது.

எதிர்பார்க்கப்பட்ட பல அணிகள் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து அணிகள் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருந்தன. இரு அணிகளுமே சமபலம் கொண்ட அணிகள். இதற்கு முன்னர் இரு அணிகளும் 9 தடவைகள் சந்தித்திருக்கின்றன. இதில் இரு அணிகளும் தலா 4 போட்டிகளில் வெற்றிபெற்றிருக்கின்றன. ஒரு போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்திருக்கிறது. ஆகையினால் இறுதிப்போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமானதாக அமைந்திருந்தது.

நெதர்லாந்து அணி மூன்றாவது தடவையாக உலகக்கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருக்கிறது. 1974ஆம் ஆண்டு ஜேர்மனியுடனும் 1978ஆம் ஆண்டு ஆர்ஜென்டீனா அணியுடனும் இறுதிப் போட்டியில் சந்தித்து தோல்வியை தழுவியிருந்தது. 32 வருடங்களின் பின்னர் நெதர்லாந்து அணி மீண்டும் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருந்தது. இதிலும் தோல்வியைத் தழுவியிருக்கிறது நெதர்லாந்து. இதேவேளை ஸ்பெயின் அணி முதன்முறையாக கால்பந்தாட்ட உலகக்கிண்ண இறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருந்தது.

இம்முறை இறுதிப் போட்டியில் 8ஆவது முறையாக ஐரோப்பிய அணிகள் மோதியிருந்தன. இதற்கு முன்னர் பிரேஸில் 5 தடவைகள், இத்தாலி 4 தடவைகள், ஜேர்மனி 3 தடவைகள், உருகுவே, ஆர்ஜென்டினா ஆகிய அணிகள் தலா இரு முறையும் இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய அணிகள் தலா ஒருமுறையும் உலகக்கிண்ணத்தினை வென்றிருந்தன.

விறுவிறுப்பாக சென்ற இறுதிப்போட்டியின் முதல் பாதியிலும் இரண்டாவது பாதியிலும் கோல்கள் எதுவும் போடப்படவில்லை. மேலதிகமாக வழங்கிய 30 நிமிடங்களின் 27ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் முன்கள வீரர் அன்ட்ரெஸ் இனிஸ்ட்ரா அபாரமாக கோல் ஒன்றினை அடித்ததன் மூலம் தனது அணியின் வெற்றியினை உறுதி செய்திருந்தார்.

இறுதிப் போட்டியில் 12 மஞ்சள் அட்டைகள் காட்டப்பட்டமை முக்கிய அம்சமாகும். அதேவேளை நெதர்லாந்தின் ஹெய்டிங்கா சிவப்பு அட்டை காட்டப்பட்டு போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டமையும் முக்கிய திருப்பமாக அமைந்திருந்தது.




தினக்குரல் - (வடக்கு)