
(நன்றி:வீரகேசரி.18.7.2010)
| |||||||
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியின் சிறந்த நட்சத்திரமாகக் கருதப்பட்டவர்.... ஒரு நிமிடம் கூட விளையாட்டுத் திடலில் கால்பதிக்காதவர்... ஆனால் எந்த அணி தகுதி பெறும் என்பதை அச்சொட்டாகக் கணித்துக் கூறுபவர்...
யார் இவர்....?
எல்லோரும் இவரைப் பற்றியே பேசுகின்றனர். அவர் தான் 'போல்' எனும் ஒக்டோபஸ்.
கிளி ஜோசியமல்ல
நாம் அறிந்தது கிளி ஜோசியம். ஆனால் ஐரோப்பிய நாடுகளில் 'ஒக்டோபஸ்' ஜோசியம் கொடிகட்டிப் பறக்கின்றது.
ஒக்டோபஸ் சொல்லும் விடயங்களை நம்புவதற்குக் காரணம், அதற்கு ஒன்பது மூளைகளும் மூன்று இதயங்களும் இருப்பதனால் தானோ?
ஜேர்மனியில் உள்ள ஒபர்ஹோசன் நீரியல் பூங்காவில் உள்ள இந்தப் ' போல்' , உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளில் எந்த அணி வெற்றி பெறும் என்பதைத் துல்லியமாக கணித்துக் கூறியது. அதன் கணிப்பும் உண்மையானது.
அதன் வரலாற்றைச் சுருக்கமாகப் பார்ப்போமா?
' போல்' 2008 ஆம் ஆண்டு டொரஸ்ட்டில் உள்ள வெய்மத் எனும் இடத்தில் பிறந்துள்ளது.
உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் தனது கணிப்பைக் கூறி அதில் பிரபலமடைந்துள்ள ' போல்' தற்போது ஓய்வு பெறப்போவதாக அறிவிக்கப்படுகிறது.
தான் எதை சரி என நினைக்கிறதோ அதைச் செய்யும் இந்த ஒக்டோபஸ் ஓய்வின் பின்னர் தன்னைப் பார்வையிட வரும் சிறுவர்களுடன் விளையாட ஆசைப்படுவதாக நீரியல் பூங்காவின் பேச்சாளர் தன் ஜா முன் ஜிக் தெரிவித்துள்ளார்.
நீரியல் பூங்காவின் தலைமை அதிகாரி டேனியல் பெய் கூறுகையில்,
"போல் தன்னைப் பார்க்க வரும் விருந்தினர்களைக் கண்டவுடன் வழமைக்கு மாறாகச் செயல்படும். ஆதலால் அதனுடைய தனித்திறமை என்னவென்பதை கண்டறிய முயற்சி செய்கின்றோம்" என்கின்றார்.
போலுக்கு இரண்டு டுவிட்டர் எக்கவுண்டும் ஒரு வலைப்பதிவும் உள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
உலகக் கிண்ணத் தொடரில் ஜேர்மனி அணி பங்கு பற்றிய 6 போட்டிகளின் முடிவுகளையும் சரியாக இது எதிர்வு கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அரையிறுதியில் ஜேர்மனி தோல்வியுறும் என ஒக்டோபஸ் எதிர்வு கூறிய பின், ஸ்பெய்னிடம் ஜேர்மனி தோல்வியுற்றது. இதனால் ஜேர்மனி அணி ரசிகர்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.
கொலை அச்சுறுத்தல்
இந்த ஒக்டோபஸை பழிவாங்கத் துடிக்கும் ஜேர்மன் கால்பந்தாட்ட அணி ரசிகர்களிடமிருந்து கொலை அச்சுறுத்தல்களும் விடுக்கப்பட்டு வருகின்றனவாம்.
அது மட்டுமல்ல.
ஸ்பெயின் அணி உலகக் கிண்ணத்தை வெல்லும் என சரியாகக் கணித்துக் கூறியமையினால் ஸ்பெயின் அணி வீரர்கள், உலகக் கிண்ணம் போன்ற வடிவத்தில் ஒரு நினைவுச் சின்னத்தை ஒக்டோபஸுக்கு வழங்கி அதனை கௌரவப்படுத்தியுள்ளனர் என்றால் அதன் மகிமையை என்னென்பது?
-எம்.எப்.சில்மியா
|
உலககிண்ணத்தை வெல்வது யார்? ஸ்பெயின், நெதர்லாந்து மோதல் | |
உலக்ககிண்ண உதைப்பந்தாட்ட போட்டி முடிவுகளை சரியாக எதிர்வு கூறிய போல் கடல் வாழ் உயிரினம் உலகம் முழுவதும் பிரசித்திபெற்றுள்ளது. இதே போன்று சிங்கப்பூரிலுள்ள கிளியொன்றும் உலகக்கிண்ணத் தொடரின் பல பெறுபேறுகளை சரியாக எதிர்வுகூறி வந்துள்ளது.மணி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கிளி பிரபல்யம் ஆகவில்லை.. இருப்பினும் அக்டோபஸின் கணிப்பு சரியாகும் என்ற என்ற எதிர்பார்ப்புடன் ஸ்பெயின் உதைப்பநாதாட்ட ரசிகர்களும் ,அக்டோபஸ்ஸின் கணிப்பிற்கு ஜேர்மன் அணி சவாலாக விளையாடும் என்ற எண்ணத்துடன் நெதர்லாந்து ரசிகர்களும் இன்றை போட்டிகளை காண ஆவலாக உள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 11, 2010, 13:37
![]() ![]() ஜோஹன்னஸ்பர்க்: ஜோஹன்னஸ்பர்க்கில் இன்று நடைபெறவுள்ள உலகக் கோப்பைக் கால்பந்து இறுதிப் போட்டியைக் காண உலகத் தலைவர்கள், பல்துறை பிரபலங்கள் அங்கு குவிந்து வருகின்றனர். இன்று நள்ளிரவு நெதர்லாந்துக்கும், ஸ்பெயினுக்கும் இடையே இறுதிப் போட்டி நடைபெறுகிறது. ஜோஹன்னஸ்பர்க்கின் புறநகரான சோவிடோவில் உள்ள சாக்கர் சிட்டி ஸ்டேடியத்தில் இந்த விறுவிறுப்பான போட்டி நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியைக் காண பல்வேறு உலகத் தலைவர்கள், பல்துறைப் பிரபலங்கள் ஜோஹன்னஸ்பர்க் வந்து குவிந்துள்ளனர். நேரடியாகவும், டிவிகள் மூலமும் இறுதிப் போட்டியை 500 மில்லியன் பேர் கண்டு ரசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து தென்ஆப்பிரிக்க அதிபர் ![]() தொடர்ந்து அவர் கூறுகையில், நெதர்லாந்துக்கும், ஸ்பெயினுக்கும் இடையிலான போட்டியைக் காண அனைவரும் ஆர்வத்துடன் உள்ளோம். மிகவும் வெற்றிகரமான முறையில் இந்த போட்டித் தொடர் முடிய வேண்டும் என்ற எதிர்பார்ப்புடனும் உள்ளோம் என்றார். ஆப்பிரிக்கக் கண்டத்தின் முதல் உலகக்கோப்பைப் போட்டித் தொடர் முடியும் வரை ஆப்பிரிக்க மக்கள் ![]()
சாம்பியன் பட்டம் வெல்லப்போவது யார்? நீயா, நானா? மோதலில் நெதர்லாந்து-ஸ்பெயின்
First Published : 11 Jul 2010 12:00:00 AM IST
![]()
ஜோகன்னஸ்பர்க், ஜூலை 10: உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெறும் இறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து-ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன.உலகின் 6 கண்டங்களில் இருந்து 32 அணிகள் பங்கேற்ற இந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.கால்பந்து விளையாட ஆரம்பித்து 76 ஆண்டுகளுக்குப்பின் முதன்முறையாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளது ஸ்பெயின்.1974-ம் ஆண்டு மேற்கு ஜெர்மனியிடமும், 1978-ம் ஆண்டு ஆர்ஜென்டீனாவிடமும் இறுதி ஆட்டத்தில் தோல்வியடைந்து கோப்பையை தவறவிட்ட நெதர்லாந்து அணி தற்போது மூன்றாவது முறையாக இறுதி ஆட்டத்துக்கு தகுதிபெற்றுள்ளது.இதனால் இரு அணிகளும் உலகக் கோப்பையை வெல்லும் துடிப்போடு இறுதி ஆட்டத்தில் களமிறங்குகின்றன.எச் பிரிவில் இடம்பெற்றிருந்த ஸ்பெயின் முதல் சுற்றான லீக் ஆட்டங்களில் தட்டுத்தடுமாறி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது. ஆனால் இரண்டாவது சுற்றில், வடகொரியாவுக்கு எதிராக கோல் மழை (7 கோல்கள்) பொழிந்த பலம் வாய்ந்த போர்ச்சுகல்லை 1-0 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு தகுதிபெற்றது. காலிறுதியில் பராகுவேயை எதிர்கொண்ட ஸ்பெயின் 1-0 என்ற கணக்கில் வென்று அரை இறுதிக்கு முன்னேறியது. ஒன்றிரண்டு கோல்கள் அடித்தே காலிறுதி வரை முன்னேறிய ஸ்பெயின், அரை இறுதியில் பலம் வாய்ந்த ஜெர்மனியுடன் மோதியது.இந்த ஆட்டத்தில் ஜெர்மனி வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தபோது வழக்கம்போல் ஒரு கோல் அடித்து ஜெர்மனிக்கு அதிர்ச்சித் தோல்வியை அளித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது ஸ்பெயின்.இறுதிஆட்டம் வரை முன்னேறியுள்ள ஸ்பெயின் லீக் சுற்று நீங்கலாக மற்ற சுற்றுகளில் தலா ஒரு கோல் மட்டுமே அடித்துள்ளது. ஜெர்மனிக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர்கள் வியூகம் வகுத்து ஆடிய விதம் கால்பந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.அதேபோன்று இறுதி ஆட்டத்திலும் அவர்கள் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆட்டங்களில் இக்கட்டான நேரங்களில் கோல் அடித்து அணியை வெற்றிப்பாதையில் அழைத்து வந்த டேவிட் வில்லா, இந்த ஆட்டத்திலும் சிறப்பாக விளையாடி வெற்றித்தேடித்தருவார் என்று எதிர்பார்ப்பு ஸ்பெயின் கால்பந்து ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.டேவிட் வில்லாவுடன் ஷேவி அலோன்ஸô, ஆண்ட்ரே இனியெஸ்டா, கார்லஸ் புயோல், ஜெல்சன் பெர்னாண்டஸ் போன்ற முன்னணி வீரர்களும் கை கோர்த்துள்ளதால் நெதர்லாந்து கடும் சவாலை சந்திக்க வேண்டியிருக்கும். லீக் சுற்றில் ஆரம்பித்து ஓர் ஆட்டத்தில் கூட தோற்காமல் பலம் வாய்ந்த அணிகளை வெற்றி கண்டு இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளது நெதர்லாந்து.லீக் சுற்றில் இ பிரிவில் இடம்பெற்றிருந்த நெதர்லாந்து 3 ஆட்டங்களிலும் வெற்றிபெற்று எளிதாக இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது. இரண்டாவது சுற்றில் 2-1 என்ற கணக்கில் ஸ்லோவேகியாவை வென்ற நெதர்லாந்து, காலிறுதியில் உலகக் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாகக் கருதப்பட்ட பிரேசிலை எதிர்கொண்டது.இந்த ஆட்டத்தில் 2-1 என்ற கணக்கில் பிரேசிலுக்கு அதிர்ச்சித் தோல்வியை அளித்தது நெதர்லாந்து. இதைத்தொடர்ந்து அரை இறுதியில் 3-2 என்ற கணக்கில் உருகுவே அணியை வீழ்த்தி இறுதிச்சுற்றில் நுழைந்துள்ளது நெதர்லாந்து. தான் ஆடிய எல்லா ஆட்டங்களிலும் இரண்டு, மூன்று கோல்களை அடித்து அற்புதமாக ஆடி வந்துள்ள இந்த அணி. முன்னணி வீரர்கள் வெஸ்லி ஸ்நீஜ்டெர், ராபன் அர்ஜென், ராபினவான் பெர்ஸி ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.கடந்த ஆட்டங்களில் எதிரணிகளுக்கு கடும் சவாலை அளித்து வந்த இந்த முன்னணி வீரர்கள், ஸ்பெயின் அணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்குவார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.இரு அணிகளும் இதுவரை உலகக் கோப்பையை வெல்லாத நிலையில் இந்த முறை எப்படியாவது சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற கனவில் உள்ளன. இரு நாட்டு ரசிகர்களும் மிகவும் ஆர்வத்தோடு இறுதி ஆட்டத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.டென்னிஸ் ஜாம்பவான் ஸ்பெயினின் ரஃபேல் நடால், தமது நாட்டு அணி வெல்லும் என்ற நம்பிக்கையில் இறுதி ஆட்டத்தைக் காண்பதற்காக ஜோகன்னஸ்பர்க் வந்துள்ளார்.மேற்கு ஜெர்மனியில் உள்ள ஆக்டோபஸ் பால், உலகக் கோப்பையை ஸ்பெயின் வெல்லும் என்றும், சிங்கப்பூர் கிளி மணி நெதர்லாந்து வெல்லும் என்றும் ஆருடம் கூறியுள்ளன. இதுவும் கால்பந்து ரசிகர்களிடையே பரபரப்பையும், விறுவிறுப்பையும் ஏற்படுத்தியுள்ளன.ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து நாடுகளில் தங்கள் நாட்டு வீரர்களுடைய ஜெர்சியின் வண்ணங்களில் ஆங்காங்கே கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. இதனால் இருநாடுகளும் விழாக்கோலம் பூண்டுள்ளது.நீயா, நானா? மோதலில் சாம்பியன் பட்டம் வெல்லப்போவது இறுதிஆட்டத்தில் பங்கேற்கும் நெதர்லாந்து-ஸ்பெயின் அணிகள் மட்டுமல்ல; ஆருடம் கூறியுள்ள ஜெர்மனியின் ஆக்டோபஸ் பாலும், சிங்கப்பூர் கிளி மணியும் தான்.இறுதி ஆட்டத்திற்கு பிறகு புகழின் உச்சத்தை அடையப்போவது சாம்பியன் பட்டம் வெல்லும் அணி மட்டுமல்ல; ஆருடம் கணித்துள்ள இருவரில் ஒருவரும்தான்.
|