2010/07/11

25ம் நா ள் - - - - இ று தி மோ த ல்



64/64 நெதர்லாந்து எதிர் ஸ்பானியா 0:1 (0:0)
(நேரநீடிப்பு)

கோல் விபரம்:INIESTA (117)

மஞ்சள் அட்டை: நெதர்லாந்து 8: ஸ்பானியா 3
சிவப்பு அட்டை நெதர்லாந்து :1


ஒருமாத காலமாக இடம்பெற்ற கால்பந்தாட்ட கோலாகலத்தின் உச்சக்கட்டம் இன்று. உலகின் அனைத்துக் கண்டங்களிலுமிருந்து 32 நாடுகள் போட்டிக்கு வந்தன. ஒவ்வொன்றாக தோற்று வெளியேற இறுதியில் இறுதி மோதலில் மோத இரு ஐரோப்பிய அணிகள் . இதுவரை தோற்காமல் இறுதிப்போட்டிக்கு வ்ந்திருக்கும் நெதர்லாந்து , முதல் போட்டியில் தோற்று பின் வெற்றிகளைக் குவித்த ஸ்பானியாவுடன் மோத உள்ளது. இரண்டுமே இதுவரை உலககிண்ணத்தினை வெற்றி கொள்ளாதவை. எனவே உலககிண்ண வெற்றி அணியில் இன்று ஒரு நாடு இணையப்போகின்றது.

தென் ஆப்ரிக்காவின் முன்னாள் அதிபர் இவ்விறுதிப்போட்டியில் பங்கு கொண்டமை முக்கியமான அம்சமாக இருந்தது. பல வெளிநாட்டுத் தலைவர்கள், பிரமுகர்கள், நெதர்லாந்து, ஸ்பானிய அரச குடும்பத்தவர்கள் என

ஏராளமானோர் இறுதியாட்டம் காண சமூகமளித்திருந்தனர்.
FIFAதலைவருடன் விளையாட்டரங்குக்கு வந்த தென்னாபிரிக்க அதிபர் வீரர்களுக்கு கைலாகுகொடுத்து போட்டியை ஆரம்பித்து வைத்தார். போட்டிக்கு நடுவராக இங்கிலாந்து நாட்டின் HOWARD WEBB. விளையாட்டரங்கு தென் ஆபிரிக்காவின் மிகப்பெரிய 90 ஆயிரம்பேரை உள்ளடக்கக்கூடிய SOCCER CITY STADIUM-JOHANNESBERG ஆகும்.

நெதர்லாந்து சம்பியன் ஆனால் அனைத்துப்போட்டிகளிலும் வென்ற 2வது அணியெனும் பெருமை பெறும். பிரேசில் 1970ல் அவ்வாறு அனைத்திலும் வென்று சாதனை படைத்துள்ளது. ஸ்பானியா சம்பியனானால் ஐரோப்பிய சம்பியன், உலககிண்ணச் சம்பியன் என இரு தகமைகளைச் சமகாலத்திக் கோட 3வது அணியாக மாறும். ஏற்கனவே இப்பெருமையை ஜேர்மனியும் பிரான்சும் கொண்டிருக்கின்றன. இத்தகைய நிலவரத்தில் போட்டி ஆரம்பமானது.

போட்டி தொடங்கியதிலிருந்து ஸ்பானியாவீரர்கள் ஆட்டத்தில் ஆதிக்கம் கொண்டிருந்தார்கள். 10 நிமிடத்தில் 40% : 60% என களநிலை நிலவியது. கோல்கள் இன்றி விதிமீறிய விளையாட்டும் 5 மஞ்சள் அட்டைகளுமாக முன்பாதி ஆட்டம் முடிவடைந்தது. முன்பாதியில் 56% பந்து இருப்பு ஸ்பானியா வசமே இருந்தது. பின் பாதி தொடங்கி யபின்னும் மஞ்சள் அட்டை கொடுத்தல் தொடர்ந்தது. அடுத்தடுத்து நெதர்லாந்தின் 2 வீரர்கள் அட்டை வாங்கினர். 61ம் நிமிடத்தில் நெதர்லாந்தின் ரொபன் கோலடிக்கும் ஓர் அரிய வாய்ப்பை தவறவிட்டார்.

90நிமிடங்கள் முடிந்தும் கோல் எதுவும் இல்லாமையால் மேலதிகமாக 30 நிமிடநேர விளையாட்டுக்கு போட்டி நீடிக்கப்பட்டது. தொடர்ந்தும் ஸ்பானியாவே போட்டியில் பந்தினை விளையாடியதாகக் கணிக்கப்பட்டது. நெதர்லாந்து 6 அட்டைகளை வாங்கிய நிலையில் மேலதிக நேரத்தை எதிர்கொண்டது. நெதர்லாந்து 109 ம் நிமிடத்தில் ஒரு சிவப்பு அட்டையை வாங்கியது. 2 நிமிடம் கழித்து 1 மஞ்சள் அட்டை என மிக நெருக்கடிக்குள் நெதர்லாந்து வீரர்கள் அழுத்தங்களுக்கு ஆளாயினர். 1974,1978 போலவே 2010ம் அமையும் நிலைஉருவானது. ,ஸ்பானியாவிடம் இறுதிப் போட்டியில் தோற்று வெளியேறியது.

117ம் நிமிடத்தில் ஸ்பானியா கோலடித்தது.அடித்தவர் இனிஎஸ்ரா.
அவரே ஆட்டத்தின் நாயகனாக தெரிவாகினார். ஸ்பானியா தோல்வியில் தொடங்கி இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளது. அவர்களது விளையாட்டுத் தந்திரோபாயம் மிக வித்தியாசமானது. அதிக கோல்களை அவர்கள் அடிப்பதில்லை. தங்களுக்குள் அதிகநேரம் பந்தை விளையாடி காலத்தை இழுத்தடித்து, எதிரணியினர் கோலடிப்பதனை தடுத்துக்கொண்டிருந்து விட்டு , இறுதி நேரத்தில் ஒருகோலை அடித்து வெற்றியை வசப்படுத்திவிடுவார்கள். இவ் உலககிண்ண சுற்றுப்போட்டியில் அவர்கள் ஆடிய 7 ஆட்டங்களில் 8 கோல்களை மட்டுமே (ஜேர்மனி 16 கோல்கள் அடித்தது)அடித்துள்ளனர். எதிராக 2 கோல்களை பெற்றுள்ளனர். (சுவிஸ்1+சிலி1)

இந்த தடவையே அவர்கள் அரையிறுதி, இறுதி என முன்னேறிச் சாதனை புரிந்துள்ளனர்.

No comments: