2010/05/27

தென் ஆபிரிக்கா உலக கிண்ணப்போட்டி

அனைத்துலக கால்பந்து ஆர்வலர்கள் காண்பதற்கு ஆவலுடன் காத்திருக்கும் தென்னாபிரிக்க உலககிண்ணப் போட்டிகள் ஆரம்பமாவதற்கு இன்னும் சிறிது காலமே உள்ளது. உலநாடுகளில் பெரும்பாலானவை பங்கு கொண்ட தெரிவுப்போட்டிகளில் வென்ற 32 நாடுகள் இறுதிப்போட்டியில் பங்கேற்க உள்ளன. இவ்வுலககிண்ணப் போட்டிகள் தொடர்பான செய்திகள் இவ்வலைப்பதிவில் தமிழில் வெளியிடப்படவுள்ளன.உலககிண்ணம் 2006 ஜேர்மனி- யின் தொடர் வலைப்பதிவாக இந்தஉலககிண்ணம்-தென் ஆபிரிக்காஅமைகிறது.

ஜேர்மனி உலக கிண்ண இறுதிப் போட்டியில் மோதியஇத்தாலிய பிரான்சிய அணிகள் மீண்டும் வருகின்றன. இதுவரை நடைபெற்ற அனைத்து உலக கிண்ணப் போட்டிகளிலும் பங்கு கொண்ட ஒரேயணியான பிரேசிலும் போட்டிக்கு வருகின்றது. ஐரோப்பாவிலிருந்து 13 நாடுகள் இம்முறையும் பங்கு கொள்ளுகின்றன. ஆபிரிக்காவிலிருந்து 6 நாடுகளும் வட அமெரிக்காவிலிருந்து 3 நாடுகளும் தென் அமெரிக்காவிலிருந்து 5 நாடுகளும் வடகொரியா தென்கொரியா ஜப்பான் ஆகிய 3 ஆசிய நாடுகளும் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளும் பரபரப்பான இப்போட்டியில் விளையாடவுள்ளன.

ஜூன் 11ம் திகதி தென் ஆபிரிக்காவுக்கும் மெக்சிக்கோவுக்குமான முதலாவது போட்டியுடன் சுற்றுப்போட்டி ஆரம்பமாகவுள்ளது

No comments: