2010/07/06

22ம் நாள்- முதல் அரை இறுதி மோதல்



61/64 நெதர்லாந்து எதிர் உருகுவே 3:1(1:1)
Bronkckhorst 18, Forlan 41, Sneijder 70, Robben 73,Pereira 92

அரையிறுதியில் முதல் போட்டி இன்று நடைபெற்றது. இதுவரை விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றியீட்டிய அணி நெதர்லாந்து. ஒருபோதிலும் அது உலககிண்ணைத்தை வென்றிருக்கவில்லை.ஆனால் கடைசியாக விளையாடிய 24 போட்டிகளில் அது தொடர்ந்து வெற்றியை ஈட்டிவந்துள்ளது.
எதிரணி தென் அமெரிக்காவின் உருகுவே. 2 தடவை உலககிண்ணத்தினை வென்ற அணி உருகுவே. அது தன் குழுவில் முதல் நிலைபெற்று, முன்னாள் சம்பியன் பிரான்சுடன் சமநிலை கண்டது. காலிறுதியில் கானாவுடன் விளையாடி தண்டனை உதை மூலமாக அரையிறுதியை அடைந்தது.

ஆட்டம் தொடங்கியதிலிருந்து நெதர்லாந்து அணியே விளையாட்டில் ஆதிக்கம் கொண்டிருந்தது. 18ம் நிமிடத்தில் அணித்தலைவர் சிறப்பாக ஒருகோலை அடித்தார்.41ம் நிமிடத்தில் உருகுவேயின் அணித்தலைவர் ஒரு கோலை தூரத்திலிருந்து அடித்தார். நெதர்லாந்து காப்பாளர்ர் அதனைத் தட்டிவிட முயன்றாலும் வாய்க்கவில்லை. முற்பாதியில் உருகுவே 5தடவையும் நெதர்லாந்து 4 தடவையும் கோலுக்கு எத்தனித்திருந்தன. 55% பந்தை விளையாடியவர்கள் ஆக நெதர்லாந்து இருந்தது.





நெதர்லாந்து அடுத்தடுத்து 2கோல்களை அடித்தது. 70 ம் நிமிடத்தில் சினைடரும் 73ம் நிமிடத்தில் ரொப்பனும் கோலடித்து நெதர்லாந்தினை வலுவான நிலைக்குக் கொண்டு சென்றனர். 92ம் நிமிடத்தில் உருகுவே அதிரடியாக ஒரு கோலை இறக்கியது. இறக்கியவர் பெரைரா. கடைசிநிமிட விளையாட்டு மிக விறுவிறுப்பாக அமைந்தது. உருகுவே வீரர்கள் ஆட்டத்தைச் சமப்படுத்த மிகப்போராடினர். ஆனால் பயன் கிடைக்கவில்லை. உருகுவே வெளியேற இறுதிப்போட்டியில் 11ம் திகதி விளையாட உறுதிப்படுத்திக்கொண்டது நெதர்லாந்து.
இதுவரை தோற்காமல் விளையாடிவரும் இவ்வணிக்கு இன்னும் ஒரு வெற்றி மட்டுமே தேவை.
அது நிறைவேறினால் அதுவே புதிய உலக சம்பியன்.



நடுவர்::Ravshan IRMATOV/உஸ்பெஸ்கிஸ்தான்.
அட்டைகள்:
மஞ்சள்: நெதர்லாந்து 2/ உருகுவே 2
விளையாட்டரங்கு:Green Point Stadium,Cape Town

No comments: