2010/06/26

16வது நாள்...அரைக்காலிறுதி ஆரம்பம்

50/64 அமெரிக்கா எதிர் கானா 1:2(0:1)
Prince (5)Danovan(62தண்டனைஉதை )Asamao Gyan (93)

இன்றைய 2வது போட்டியில் அமெரிக்கா கானாவை எதிர்த்து விளையாடியது.
குழுவில் ஒருவெற்றி 2 சமன் என முதலாம் இடம்பெற்று அரைக்காலிறுதிக்கு தெரிவானது அமெரிக்கா. வெற்றி, தோல்வி, சமன் என சகலதிலும் ஒன்றைப்பெற்று 2வது நிலையில் வந்தநாடு கானா. கானா மட்டுமே ஆபிரிக்கக் கண்டத்திலேயிருந்து 2ம் சுற்றுக்குத் தெரிவாகிய நாடு. அவர்கள் தோல்வியடைந்தால் ஆபிரிக்காவின் பிரதி நிதித்துவம் முற்றாக முடிந்து போய்விடும். அமெரிக்கா

போட்டி தொடங்கி 5வது நிமிடத்தில் பிறின்ஸ் ஒரு கோலை அதிரடியாக இறக்கிக் கானாவிற்கு நல்வாய்ப்பை வழங்கினார். 20 நிமிடத்துக்குள் அமெரிக்க வீரர்கள் இருவர் மஞ்சள் அட்டை பெற்றார்கள். 35 நிமிடம் வரையில் கானா 7தடவையும் அமெரிக்கா 4 தடவையும் கோல் அடிக்க முயன்றிருந்தார்கள். முற்பாதி 0:1 என முடிவடைந்தது.
பிற்பாதி தொடங்கி 2வது நிமிடத்தில் அமெரிக்காவுக்கு கோலடிக்க நல்ல வாய்ப்பு ஒன்று கிடைத்தது. ஆனால் கானாவின் காப்பாளர் தட்டிவிட்டார். திருப்பி அடிக்க அமெரிக்கர் யாரும் அருகில் இருக்கவில்லை. 62ம் நிமிடத்தில் விதிகளுக்கு மாறாக அமெரிக்க வீரரை வீழ்த்தியமையால் தண்டனை உதை வழங்கப்பட்டது. அதனை கச்சிதமாக அடித்து 1:1 என சமநிலைக்கு கொண்டுவந்தார் லண்டன் டனோவன். பிற்பகுதி தொடங்கியதிலிருந்து அமெரிக்க வீரர்களது கையே ஒங்கி இருந்தது. ஆட்டமுடிவுவரை சமநிலையே நிலவியதால் மேலதிக நேரத்துக்கு விளையாட்டு விளயாடப்பட்ட முதல் ஆட்டம் இதுவாகும்.
மேலதிக நேரம் தொடங்கிய 3வது நிமிடத்தில் 2வது கோலை அசமாஓ கியன் அடித்தார். கானா மீண்டும் முன்னிலைக்கு வந்தது. மேலதிக நேரத்தின் வேறுகோல்கள் இல்லை. அதனால்
கானா 2வது போட்டியில் வென்று கால் இறுதி ஆட்டத்துக்குச் செல்கின்றது.


நடுவர்:Victor KASSAI/கங்கேரி
மஞ்சள் அட்டை:அமெரிக்கா 3, கானா 2
விளையாட்டரங்கு:Rosternburg



49/64 உருகுவே எதிர் தென் கொரியா 2:1(1:0)
Zuarez (8,80) Chungyong(68)


வெற்றி தோல்வி நிச்சயிக்கப்பட வேண்டிய, தோற்றவர் வெளியேற வேண்டிய முதல்கோல்சுற்று இன்று தொடங்கியது. போட்டி 90 நிமிடத்தில் சமநிலை கண்டால் மேலதிகமாக 30 நிமிட விளையாட்டு. அதிலும் சமநிலை எனில் தண்டனை உதைமூலமாக வெற்றி நிச்சயிக்கப்பட வேண்டும்.

இறுதிச்சுற்றின் முதல் போட்டி இது. தென் அமெரிக்க உருகுவேக்கு எதிராக ஆசியாவின் தென் கொரியா மோதும் முதல் போட்டி. Aகுழுவில் முதலாவது நிலைபெற்ற அணி உருகுவே. தென்கொரியா Bகுழுவில் 2வது நிலைபெற்றது.
விறுவிறுப்பாகப் போட்டி தொடங்கி 8ம் நிமிடத்தில் உருகுவேயின் ZUAREZஒருகோலை அற்புதமாக அடித்தார். தொடர்ந்து போட்டி வலுவடைந்தாலும் எவரும் கோல் அடிக்கவில்லை.
ஆனால் கொரிய வீரர்கள் ஆட்டத்தில் வேகம் காட்டிச் சுறுசுறுப்பாக ஆடினர். 38ம் நிமிடத்தில் கொரியவீரர் JUNGWOOக்கு மஞ்சள் அட்டை காட்டப்பட்டது. முற்பாதியாட்டம் 1:0 என்கிற நிலையில் முடிவுக்கு வந்தது.
பிற்பாதியாட்டத்தில் கொரியா மேலும் வேகம் காட்டி விளையாடியது. கோலடிக்க பல தடவைகள் எத்தனித்தது. ஆனால் சாத்தியமாகவில்லை. உருகுவேயின் கோல் காப்பாளர் சிறப்பாக தடுத்து விளையாடினார்.
68ம் நிமிடத்தில் கொரியா முதல்கோலை அடித்தது. CHUNGYONG அக்கோலை அடித்தார். ஆட்டம் சமநிலைக்கு வந்தது. அடுத்த நிமிடத்தில் கொரிய DURI க்கு மஞ்சள் அட்டை கொடுபட்டது. 80ம் நிமிடத்தில் ZUAREZ 2வது கோலையும் அடித்தார். உருகுவே பலமான 2:1என நிலைக்கு வந்தது. இன்னும் 10 நிமிடமே ஆட்டம் உள்ளது. 87ம் நிமிடத்தில் கொரியாவுக்கு ஒரு ச்ந்தர்ப்பம் கிடைத்தது. காப்பாளர் பிடித்தது நழுவிக்கோல் செல்ல இருந்த நிலை இன்னொரு வீரரால் காப்பாற்றப்பட்டது. இறுதிச்சுற்றில் கொரியா முதல் வெளியேறும் நாடனது.முதலாவது வெற்றியை உருகுவே உறுதிப்படுத்தியதுடன் ஆட்டம் முடிவடைந்தது.





நடுவர்:Wolfgang STARK/ஜேர்மனி
மஞ்சள் அட்டை= உருகுவே 0:3கொரியா
விளையாட்டரங்கு:Nelson Mandla Bay/Port Elizebeth
.

No comments: