2010/07/10

24ம் நாள்- மூன்றாம் இடத்துக்கு மோதல்



63/64
ஜேர்மனி
எதிர்
உருகுவே
3:2(1:1)


Thomas MUELLER (19')
Edinson CAVANI (28')
Diego FORLAN (51')
Marcell JANSEN (56')
Sami KHEDIRA (82')

இன்றைய மூன்றாம் இடத்துக்கான போட்டியில் 3:2 என்கிற கணக்கில் ஜெர்மனி வெற்றிபெற்றது. ஜேர்மனியின் முல்லர் முதல் கோலை 19ம் நிமிடத்தில் அடித்தார். தொடர்ந்த 9நிமிட நேரத்தில்( 28ம் நிமிடத்தில்) உருகுவேயின் கவானி ஒருகோலை அடித்து சமநிலைப்படுத்தினார். உருகுவேயின் நட்சத்திரவீரர் போர்லான் 51ம் நிமிடத்தில் அடுத்த கோலை அடித்து உருகுவேயை முன்நிலைக்கு இட்டார். ஆட்டம் மேலும் பரபரப்படைந்தது. அடுத்த 5 நிமிடத்தில் ஜேர்மனியின் ஜான்சன் ஒருகோலை அடிக்க மீண்டும் சமநிலை உருவானது. மேலதிக நேர விளையாட்டு, தண்டனை உதை என ஆட்டம் மேலும் நீளுமா என ரசிகர்களின் எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் தொடர்ந்து 25 நிமிடங்கள் இருதரப்பும் வெற்றியைப் பெறக் கடுமையாக மோதின. 82ம் நிமிடத்தில் ஜேர்மனியின் கெடீரா ஒருகோலை அடித்து ஜேர்மனியை வெற்றிநிலைக்கு கொண்டு சென்றார். மேற்கொண்டு கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. இறுதி வினாடியில் கூட உருகுவேக்கு அரிய சந்தர்ப்பம் ஒன்று வாய்த்தது. ஆனால் ஜேர்மனிய வீரர்கள் அதனைத் தடுத்து வெற்றியைத் தமதாக்கினர். 18வது உலககிண்ணப்போட்டியைப் போலவே ஆறுதல் பரிசாக ஜேர்மனி 3ம் இடத்தினைப் பெற்றுக் கொண்டது. ஐந்து நாடாக போட்டியில் நுழைந்த கால்பந்தாட்டப் போட்டியின் ஆதிக்க தென்னமெரிக்க நாட்டினர் நாலாவ்து இடத்தினை மட்டுமே பெற்று வெளியேறினர்.

ஜேர்மனியின் முல்லர், உருகுவேயின் போர்லான் ஆகியோர் இன்றடித்த கோலுடன் 5 கோல் என தங்கள் நிலையைப் பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே
நெதர்லந்தின் சினைடர், ஸ்பானியாவின் விலா அகியோரும் 5கோல் என்கிற கணக்கில் உள்ளனர். இவர்களில் ஒருவர் 6 வது கோலை அடிக்கும் பட்சத்தில் அவர் தங்கக்காலணியை வெற்றிகொள்ள முடியும்.

ஜேர்மனியின் அணியில் முக்கியமான வீரர்கள் பங்குகொள்ளவில்லை. அணித்தலைவர் லாம், பொடொல்ஸ்கி, குளோச, காப்பாளர் நொயர் என்பவர்கள் ஆடாமல் ஏனைய வீரர்கள் விளையாடச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. ஜேர்மனியின் பயிற்றுவிப்பாளர் ஜோகிம் லோ இளவயது வீரர்களை களமிறக்கி உலககிண்ணம்2010ஐ எதிர்கொண்டார். அவர்களும் சிறப்பாகவே விளையாடினர். சுற்றுபோட்டியில் மிக அதிகமாக 16 கோல்களை அடித்து அவர்கள் முன்னிலையில் நிற்கின்றனர். அவர்களின் கோல்களை விஞ்சுவது சாத்தியமில்லை. ஏனெனில் அடுத்து நிற்பவர் நெதர்லாந்து அணியினர். அவர்களில் கோல் கணக்கு 12. ஒருபோட்டி மட்டும் அதுவும் இறுதிப்போட்டி மட்டுமே கைவசம் உள்ளது. அவர்கள் 5கோலடிக்க ஸ்பானியர்கள் நிச்சயம் அனுமதிக்கப்போவது இல்லை.

ஜேர்மனிய இளம் வீரகளுக்கு நன்றி கூறி ஒரு நாளிதழ் வெளியிட்ட படம்

நடுவர்: Benito ARCHUNDIA (மெக்சிக்கோ)
அட்டைகள்: மஞ்சள்
ஜேர்மனி 3/உருகுவே 1
விளையாட்டரங்கு: Nelson Mandela Bay/Port Elizabeth - Port Elizabeth Stadium


மூன்றாம் இடத்துக்கு மோதல்- உருகுவேக்கு எதிராக ஜேர்மனி

KLOSE-உலக சாதனையை நோக்கி
இறுதி ஆட்டம் நாளை நடைபெறுவதற்கு முன்பாக மூன்றாம் இடத்தினை பெறு அணியை அதாவது அரையிறுதியில் தோற்றுப்போன அணிகள் மோதுகின்ற போட்டி இது. 2006 உலககிண்ணம் ஜெர்மனியில் 3ம் இடம்பெற ஜெர்மனி அணி
25வது பிறந்தநாளில் GOMEZஇன்று

தென்னமெரிக்காவில் எஞ்சியுள்ள அணியான உருகுவேயுடன் விளையாடுகின்றது. இரண்டு நாடுகளுமே முன்னர் உலக நாயகன்களாக விளங்கியவை.
MUELLER -சிவப்பு அட்டை தடை விலகல்
ஜேர்மனியின் அணிக்கு 4 கோலடித்தவரும் கடந்த அரையிறுதிப்போட்டியில் சிவப்பு அட்டை பெற்தனால் ஆடாதவருமான முல்லர் விளயாடுகிறார் என்பது வாய்ப்பாக இருந்தலும் நட்சத்திரவீரர் குளோச முதுகுவலியால் அவதிப்படுவதனால் விளையாடுவது கடினம் என்கிற விடயம் பாதகமாக உள்ளது உலக சாதனையை கோல்கணக்கில் சமன் செய்ய அவருக்கு ஒரு கோல் மட்டுமே தேவை என்பதனால் அவர் இப்போட்டியில் பங்குகொள்வார் எனவே
SUAREZ-சிவப்பு அட்டை தடை விலகல்

எதிர்பார்க்கப்படுகின்றது.
உருகுவேக்கும் முன்னைய போட்டியில் சிவப்பு அட்டையால் ஆடாமலிருந்த முன்னணி வீரர் சுரேஜ் இந்த ஆட்டத்தில் விளையாடுகின்றார் என்பது
சாதகமான அம்சமாக உள்ளது.


2010/07/09

இறுதிப்போட்டியில் இரு ஐரோப்பிய அணிகள்!

இன்னும் இரு தினங்களில் உலக கிண்ணப்போட்டிகள் நிறைவுற்றுவிடும்.
ஒரு புதிய நாடு உலககிண்ணத்தினை வென்று செல்ல இருக்கின்றது.
அது நெதர்லாந்தாகவோ அன்றேல் ஸ்பானியாவாகவோ இருக்கப்போகின்றது.
இதுவரை 7நாடுகள் உலககிண்ணத்தைச் வென்றிருக்கின்றன. எட்டாவதாக
மேற்குறித்த நாடுகளில் ஒன்று அணிசேர இருக்கின்றது.

உலககிண்ணம் 2010க்கு தென் அமெரிக்காவிலிருந்து பங்கு கொண்ட 5 அணிகளும் அரைக்காலிறுதிக்குத் தேர்வாகிச் சாதனை படைத்தன.அவற்றில் சிலி தவிர்ந்த நான்கு அணிகள் கால் இறுதிக்குள் நுழைந்தன.மிகவும் பிரபல்மான சாதனை நாடாக இருக்கின்ற பிரேசில் இம்முறை கால் இறுதியுடன் வெளியேறியது. அது போலவே ஆர்ஜன்ரீனாவும் கால் இறுதியுடன் வெளியேறியது. 13 நாடுகளாக போட்டிக்கு வந்த 13 ஐரோப்பிய நாடுகளில் மூன்று மட்டுமே காலிறுதிக்குள் வர முடிந்தது. ஆபிரிக்காவிலிருந்து கானா எனக் காலிறுதிக்கு எட்டு நாடுகள் தெரிவாகின.

அரையிறுதிப் போட்டிகளில் ஐரோப்பிய நாடுகளில் மூன்றும் தெரிவாகி அவற்றில் இரண்டு அணிகளான நெதர்லாந்தும் ஸ்பானியாவும் இறுதிப்போட்டியில் மோத உள்ளன. 5-4-1 என ஒவ்வொரு சுற்றிலும் தென்னமெரிக்க நாடுகள் சுருங்கி 3வது அல்லது 4வது இடத்துக்கு மட்டுமே அவற்றில் ஒன்றான உருகுவேக்கு வர வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. நாளை அது எந்நிலை பெறும் என்பது தெரிந்துவிடும்.

இப்போட்டியின் சில முக்கிய அம்சங்கள்:

  1. ஜேர்மனி உலககிண்ணப்போட்டிகளில் ஆகக்கூடிய ஆட்டங்களில் பங்கேற்ற அணியாக சாதனை புரிகிறது. அது நாளை ஆடும் ஆட்டம் 99வது ஆட்டமாகும்.(பிரேசில் 97 தடவைகள்)
  2. 48 ஆண்டுகளில் அரையிறுதியில் பங்கேற்ற அணிகளில் இளவயது அணி ஜேர்மனிய அணியாகும். அதன் வயதுச் சராசரி 25வருடம் 299 நாட்கள். இதற்குமுன் செக். அணி 25 வரு.145 நாட்களாக் 1962ல் விளையாடியது.
  3. உலககிண்ணப்போட்டிகளில் இறுதிச் சுற்று வரை ஆடிய நாடுகள் இதுவரை 11 மட்டுமே. 12வது நாடாக ஸ்பானியா இணைகின்றது.
  4. உலககிண்ணப்போட்டிகளில் நெதர்லாந்தின் சினைடர் 4 போட்டிகளில் (9+24+57+61ம் ஆட்டங்கள்) ஆட்டத்தின் நாயகனாகத் தெரிவாகியுள்ளார். இதுவரை தனது 6 ஆட்டங்களிலும் தோல்வியடையாத அவ்வணி ஒவ்வொரு போட்டிக்கும் ஆட்டநாயகன் விருதைப் பெற்றுள்ளது.(பெர்சி 44, றொப்பன் 54)
  5. இதுவரை நடந்த 6 போட்டிகளிலும் வென்ற ஒரேயொருநாடு நெதர்லாந்து. இதுவரை நடந்த போட்டிகளில் அதிக மஞ்சள் அட்டை(15) வாங்கிய நாடும் நெதர்லாந்து. அதிக தடவை விதிகளை (FOULS 98) மீறி விளையாடி யவர்களும் அவர்களே. கையால் பந்தை அடித்த வகையிலும் நெதர்லாந்து முன்னணியில் உள்ளது. 10 தடவை அது தொட்டுள்ளது.
  6. சரியான முறையில் சகவீரருக்கு பந்தை கொடுத்தவகையில் (PASSES COMPLETED) ஸ்பானியா 3387 தடவை என முன்னணியில் உள்ளது. 2வது ஜேர்மனி...2472 3வது நெதர்லாந்து..2434.
  7. அதிக கோல்கள் அடித்தவர் வரிசை =ஜேர்மனி 13, நெதர்லாந்து 12, ஆர்ஜன்ரீனா 10
  8. அதிக கோல்கள் பெற்றவர்கள் வரிசை= வடகொரியா 12, தென்கொரியா 8, ஸ்லவாக்கியா 7

2010/07/07

23ம் நாள்- கடைசி அரை இறுதி மோதல்

62/64 ஜேர்மனி எதிர் ஸ்பானியா 0:1(0:0)
Puyol 73







இரண்டாவது அரையிறுதி. மோதுபவர்கள் மும்முறை கிண்ணம் கண்ட ஜேர்மனி. எதிராக இதுவரை கிண்ணத்தை தரிசித்திராத ஸ்பானியா. இந்த உலககிண்ணத்தில் 13கோல் அடித்து முன்னணியில் உள்ள ஜேர்மனி 6கோல்களை மட்டுமே அடித்திருக்கும் ஸ்பானியாவுடன் இந்த அரையிறுதியில் மோதியது. ஆயினும் உலகத்தர இறுதிக்கணிப்பில் ஸ்பானியா 2ம் இடத்திலும் ஜேர்மனி 6ம் இடத்திலும் இருந்தன.


போட்டி விறுவிறுப்பாக அரம்பித்தது என்றாலும் ஆதிக்கம் செலுத்தி ஆடியது ஸ்பானியாவே. 20அது நிமிடம் வரை அது 65% பந்தை விளையாடியது. முதல் பாதிவரை யாரும் கோலடிக்கவில்லை. அதுபோலவே எவரும் எச்சரிக்கை அட்டை வாங்கவில்லை. ஸ்பானியர்கள் அதிகம் கோலுக்கு முயற்சிக்க அதனை பாதுகாப்பவரளாகவே ஜேர்மனியர் காணப்பட்டனர். பந்து இருப்புநிலை 43%:57% ஆக முற்பாதி முடிவுற்றது.




2வது பாதி தொடங்கி 10 நிமிடத்தில் ஜேர்மனி தனது வீரர் பேரங்கை மாற்றி ஜன்சனை களமிறக்கியது. 58வது நிமிடத்தில் ஸ்பானியா அருமயான ஒரு கோல்வாய்ப்பை தவறவிட்டது. ஆயினும் 11 தடவைகள் கோலுக்கு அது முயற்சிக்க ஜேர்மனி முயற்சித்தது 2 தடவைகள் மட்டுமே.
73ம் நிமிடத்தில் கோணர் அடியொன்றைப் பயன்படுத்தி கோல் ஒன்றை ஸ்பானியா அதிரடியாக இறக்கியது. தலையால் அடித்தவர் புயோல். இப்போட்டியின் இன்னொரு முக்கிய அம்சம் எவிவிதமான அட்டைகளும் வழங்கப்படாமையாகும்.

அரையிறுதியில் ஜெர்மனியை வீழ்த்தி ஸ்பானியா இறுதிப்போட்டியில் நெதர்லாந்தை 11ம் திகதி சந்திக்கிறது. அனைத்து முன்னாள் சம்பியன்களும் வெளியேற்றப்பட்ட நிலையில் இதுவரை உலககிண்ணத்தினைத் தரிசிக்காத நெதர்லாந்தும் ஸ்பானியாவும் இறுதிப்போட்டியில் மோதுகின்றன. நெதர்லாந்து 2 தடவைகள் இறுதிப்போட்டியில் விளையாடித் தோற்றுள்ளது. ஸ்பானியா இம்முறைதான் அரையிறுதிக்கே தேர்வானது. அதன் முதல் இறுதிப்போட்டியில் அது நெதர்லாந்தை வென்று சரித்திரம் படைக்குமா என்பது இன்னும் நான்கு
நா ட்களில் முடிவாகிவிடும்.

நடுவர்:Viktor KASSAI/கங்கேரி
அட்டைகள்:
மஞ்சள்:
ஜேர்மனி:0 ஸ்பானியா :0
விளயாட்டரங்கு:Durban Stadium. DURBAN