2010/06/18

8வது நாள்...18.6.2010



(23/64) இங்கிலாந்து எதிர் அல்ஜீரியா 0:0(0:0)
..
இந்த உ.கி.போட்டியிலேயே முதன்முதலாகச் சந்திக்கின்றன இங்கிலாந்தும்
அல்ஜீரியாவும்
. உலக தரத்தில் முறையே 8, 30 நிலைகளில் உள்ளன .போட்டியைகாண பிரித்தானிய இளவரசர்கள் வில்லியம், ஹரி வந்திருந்தார்கள். பரபரப்பாக போட்டி நடைபெற்றாலும் இருத்ரப்புக்கும் கோல் எதுவும் இல்லாமலேயே முற்பாதி முற்றுப்பெற்றது.

விளையாட்டில் இங்கிலாந்து அணியே மேலோங்கி இருந்தாலும் கோலடிக்கப் பல எத்தனங்கள் செய்தாலும் எதுவும் பயனளிக்கவில்லை. 90 நிமிடம் வரை சம்நிலையில் மாற்றம் நிகழவில்லை. இரண்டு ஆட்டங்களில் 2 புள்ளிகள் மட்டுமே இங்கிலாந்துக்கு. அல்ஜீரியா 1புள்ளியுடன் உள்ளது. இங்கிலாந்துக்கு ஸ்லவேனியாவுடன் அடுத்த போட்டி. அதில் வென்றால் மட்டுமே அடுத்த சுற்றுப் பற்றி சிந்திக்கமுடியும்.






நடுவர்: Ravshan Irmatov/ Uzbeskistan
விளையாட்டரங்கு:Green Point Stadium. Capetown
பார்வையாளர்: 61,000



(22/64) ஸ்லவேனியா எ. அமெரிக்கா 2
:2(2:0)

இன்றைய 2வது போட்டியில் அமெரிக்காவை எதிர்த்து ஸ்லவேனியா விளையாடியது. தொடக்கம் முதலே அமெரிக்க வீர்ர்கள் உற்சாகம் காட்டினர்.. கோலடிக்க முயன்றார்கள். ஆனால் 14ம் நிமிடத்தில் ஸ்லவேனிய வீரர் மிகத்தூர
இருந்து அடித்த பந்து கோலாகி
ஸ்லவேனியாவை முன்னிலைக்குக் கொண்டுவந்தது. தொடர்ந்து 41 ம் நிமிடத்தில் 2வது கோலை ஸ்லவேனிய Ljubijankikஇறக்கினார். முற்பாதி 2:0 என் முடிவடைந்தது.

2வது பாதி தொடங்கி 3வது நிமிடத்தில் அமெரிக்கா தனது முதல் கோலை ( London Donovan)இறக்கியது. மேலும் 81ம் நிமிடத்தில் Bradley மற்றொரு கோலை அடித்தார். ஆட்டம் சமநிலைக்கு வந்தது.
.

நடுவர்:Coullbaly (MLI)

விளையாட்டரங்கு:Johannesburg
பார்வையாளர்: 40,000


(21/64)ஜேர்மனி எதிர் சேர்பியா 0:1(0:1)
அட்டைகள் கோலாகலம்
மஞ்சள் 8 சிவப்பு 1 ==நடுவர்:Undiano. Alberto

இன்றைய முதல் போட்டியில் ஜேர்மனி சேர்பியாவுக்கு எதிராக விளையாடியது. சேர்பியாவுடனான முன்னைய போட்டிகளில் 4வெற்றி,1சமன்,1தோல்வி என ஜேர்மனி இருக்கிறது.
பரபப்பாக தொடங்கிய போட்டியில் இருதரப்பும் சமநிலையில் மோதினர். 11வது நிமிடத்தில் Klose மஞ்சள் அட்டை பெற்றார். அடுத்த 10 நிமிடத்துள் மேலும் 3 மஞ்சள் அட்டைகள். (2 சேர்பியா 1 ஜேர்மனி) தொடர்ந்து Lahmக்கு மஞ்சள் அட்டை. 37ம் நிமிடத்தில் Klose சிவப்புஅட்டையால் வெளியேற அடுத்த நிமிடத்தில் சேர்பியா த்னது முதல் கோலை இறக்கியது. சேர்பியா 0:1 என் முன்னிலை வகிக்க முற்பாதி நிறைவுற்றது. உ.கி.போட்டிகளில் 11 கோலுடன் (சாதனை=Ronaldo 15)உள்ள Kloseவின் சாதனைப் பாதை தடைபட்டுப்போனது.

பிற்பாதியில் 57ம் நிமிடத்தில் மஞ்சள் அட்டை சேர்பியாவுக்கு கொடுபட்டது. தொடர்ந்து இன்னொரு மஞ்சல் அட்டையின் பயனாக 2 நிமிடத்தில் கிடைத்த தண்டனை உதையை ஜேர்மனியின் Podolskiதவற விட்டார். சமன் செய்வதற்கான வாய்ப்பை ஜேர்ம்னிஅணி இழந்தது. 72ம் நிமிடத்தில் மீண்டும் ஒரு மஞ்சள் அட்டை. Schweinsteigerஜேர்மனிக்கு. எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு மஞ்சள் அட்டைகள் தாராளமாக நடுவரால் வழங்கப்பட்டது. மஞ்சள் அட்டை திருவிழாவின் பின் ஜேர்மனி தனது 2வது ஆட்டத்தில் தோல்வியடைந்த்து.

நடுவர்: Undiano/Spain

விளையாட்டரங்கு:Port Elisabeth
பார்வையாளர்: 42,000

2010/06/17

7வது நாள்...17.6.2010


(20/64)பிரான்சு எதிர் மெக்சிக்கோ o:1(0:0)
தலா ஒரு புள்ளியை கொண்டுள்ள பிரான்சு, மெக்சிக்கோ என்பன இந்த
ஆட்டத்தில் மோதுகின்றன. 4ம் நிமிடத்திலேயே மெக்சிக்கோவின்Guillermo Francoக்குமஞ்சள் அட்டை, இருதரப்பும் கடுமையாக விளையாடின. பந்தை அதிகமாக விளயாடியவர்கள் பிரான்சாக இருந்தாலும் கோலடிப்பதற்கான எத்தனங்கள் மெக்சிக்கோவாலேயே அதிகம் மேற்கொள்ளப்பட்டன. இருதரப்பும் கோல் போடாமலே முற்பாதி முடிவடைந்தது.

பிற்பாதியில் மோதல் தீவிரமாகக் காணப்பட்டது. அடுத்தடுத்து 48, 49ம் நிமிடங்களில் இரு மஞ்சள் அட்டைகள் மெக்சிக்கோ வீரர் இருவருக்கு வழங்கப்பட்டது. 64ம் நிமிடத்தில் முதல் கோல் இறங்கியது. அடித்தவர் மெக்சிக்கோவின் Javier Hernandez.
77ம் நிமிடத்தில் ஒரு தண்டனை உதை கிடைத்தது. அதனைப் பயன்படுத்தி
2வது கோலை மெக்சிக்கோவின் CUAUHTEMOC BALNCO இறக்கினார். பிரான்சு பெரும் நெருக்கடிக்குள் வந்தது. வெல்வதற்கு 3 கோல்கள் ? சாத்தியமில்லை. மெக்சிக்கோவின் பாதுகாப்பு அணி சிறப்பாகச் செயல்பட்டது.


நடுவர்: Al Ghami/Saudi Arabia

விளையாட்டரங்கு:Polokwane
பார்வையாளர்: 30,000



(19/64)நைஜீரியா எதிர் கிரேக்கம் 1:2(1:1)

முதலாவது ஆட்டத்தில் தோல்வி அடைந்திருந்த அணிகள் இரண்டு மோதும் ஆட்டம் இது. இதிலும் தோற்றால் சுற்றுப்போட்டியிலிருந்து வெளியேற வேண்டிய அபாயம் உள்ளது. ஆட்டம் தொடங்கி 16ம் நிமிடத்தில் முதலாவது கோல். அடித்த்வர் நைஜீரியாவின் Kalu UCHE. 33ம் நிமிடத்தில் SANI KEITA சிவப்பு அட்டை கொடுக்கப்பட்டதனால் வெளியேற 10வீரர்களுடன் விளையாட
வேண்டிய நிலை நைஜீரியாவுக்கு.
தொடர்ந்த விளையாட்டில் 44ம் நிமிடத்தில் அடித்த (கிரேக்கவீரர் SALPINGIDIS) கோலுடன் 1:1 என போட்டி சமநிலை கண்டது.
பிற்பாதியாட்டம் பரபப்பு மிக்கதாக அமைந்திருந்தது. இருதரப்பும் கோலடிக்க முயன்றன. 72வது நிமிடத்தில் கிரேக்கவீரர் TOROSEDIS ஒரு கோலை இறக்கினார். நைஜீரிய காப்பாளர் பிடித்து தவறவிட்ட பந்தை அடித்தே கோல் பெறப்பட்டது. அதன் பின்னர் மாற்றமெதுவுமின்றி 1:2 என்னும் நிலையில் ஆட்டம் முடிவடைந்தது.

நடுவர்: RUIZ/COLUMBIA


விளையாட்டரங்கு:Bloemfontein
பார்வையாளர்: 30,000



(18/64)ஆர்ஜன்ரீனா எதிர் தென் கொரியா 4:1(2:1)

Higuains hat-trick Gala

ஜேர்மனியின் ஆட்டத்தினை அடுத்து ரசிகர்களுக்கு விருந்து படைத்த இன்னொரு ஆட்டம்


இன்றைய முதற்போட்டி தென் கொரியாவுக்கு ஆர்ஜன்ரீனாவுக்கும் இடையிலானது. போட்டி தொடங்கி 15வது நிமிடத்தி ஆர்ஜென்ரீனிய வீரர் தூரத்திலிருந்து அடித்த பந்தொன்று கொரிய வீரரின் காலில் பட்டு எதிர்பாராதவிதமாக கோலாகியது. எதேச்சையாகக் கிடைத்த கோலால் ஆர்ஜன்ரினா முன்னணி பெற்றது. தொடர்ந்து 32ம் நிமிடத்தில் மற்றொரு கோல் அதற்கு. GONZALO HIGUAIN தலையால் தட்டி அக்கோலைப் பெற்றார். போட்டியில் ஆர்ஜன்ரினா ஆதிக்கம் கொண்டிருந்தாலும் முற்பாதியின் கடைசி நொடியில் தன் பங்குக்கு ஒருகோலை அடித்து கொரியாவும் தன் கோல் கணக்கைத் தொடங்கியது. கோலை அடித்தவர் Lee Chung-yong.

பிற்பாதியில் ஆட்டத்தில் தீவிரம் காட்டிய ஆர்ஜன்ரீனியர்கள் பல கோல்களைஅடித்தனராயினும் கொரியக்(LEE WOON JAE) கோல்காப்பாளரால் அவற்றில் பலதடுக்கப்ப்ட்டன. முக்கியமாக MESSI கோலடிப்பதற்கு பலதட்வைகள் முயன்றும் பலன்கிட்டவில்லை. ஆனால் மேலும் 2கோல்களை Gonzalo Higuain அடித்தார். அதுவும் தொடர்ந்து 77, 80ம் நிமிடங்களில் இந்த ஆட்டத்தில் 3கோல்கள் அவரது கணக்கில் சேர்ந்தன. மெஸ்ஸியை கொரியர்கள் சுற்றிவளைக்க பிரச்சனையின்றி HIGUAIN கோல்களை அடித்தார். இறுதியில் 4:1 கணக்கில் ஆட்டம் முடிவடைந்தது.

நடுவர்:De Bleeckere/Belgium
விளையாட்டரங்கு:Johannesburg - Soccer City Stadium
பார்வையாளர்:80,000Virakesari

2010/06/16

6வது நாள்...16.6.2010



(17/64)தென் ஆபிரிக்கா எதிர் உருகுவே 0:3(0:1)

முதல் சுற்றில் 2வது போட்டியை தென் ஆபிரிக்காவும் உருகுவேயும் தொடங்கின. தனது சொந்த மண்ணில் மோசமான தோல்வியையும் சிவப்பு அட்டை வெளியேற்றத்தையும் தென் ஆபிரிக்க அணி சந்தித்த சோகமயமான போட்டியாக இப்போட்டி அமைந்து போனது.

24வது நிமிடத்தில் உருகுவே தன் முதற்கோலை அடித்தது. அடித்தவர் FORLAN. அதன் பின் இருதரப்பினரும் கடுமையாக போராடினர்.
முதன்முறையாக சிவப்பு அட்டை கொடுத்து கோல் காப்பாளரை வெளியேற்றிய சம்பவம் 77ம் நிமிடத்தில் இடம்பெற்றது. கோலடிப்பதற்கு பந்தைக் கொண்டு வந்த வீரரை காப்பாளர்(KHUNE) வீழ்த்தியமையால் நடுவர் அவரை வெளியேற்ற புதிய
காப்பாளர் (JOSEPHS) அழைக்கப்பட்டார். அதனால் விளையாடிய வீரரான ஒருவரும் கூட ஆட்டத்திலிருந்து வெளியேற நேர்ந்தது. இதன் பின் வழங்கப்பட்ட தண்டனை உதையை பயன்படுத்தி இலகுவாக மற்றொரு கோலை
FORLAN அடித்தார். மேலதிக நேரத்தில் இன்னொருகோலை PEREIRAஅடிக்க ஆட்டம் 0:3 என்கிற வகையில் முடிவடைந்தது.


நடுவர்: BUSACCA/Switzerland


விளையாட்டரங்கு:PRETORIA
பார்வையாளர்: 50,000


Virakesari



(16/64)சுவிஸ் எதிர் ஸ்பானியா 1:0(0:0)

மிகப்பரபரப்பான போட்டி
முதல் சுற்றில் முதல் பகுதியின் இறுதிப்போட்டி இது. இத்துடன் சகல அணிகளும் ஒரு ஆட்டத்தினை சந்தித்து முடித்துள்ளன. பலமான அணியாகவும் கிண்ணத்தைக் கைபற்றும் என எதிர்வுகூறப்பட்ட ஸ்பானியாவுக்கு எதிராக சுவிச்சர்லாந்து மோதிய ஆட்டம் இது. தொடக்கம் முதலே ஸ்பானியாவே விளையாட்டில் ஆதிக்கம் கொண்டிருந்தது. ஆயினும் கோலடிக்க அது மேற்கொண்ட பலமுயற்சிகள் முற்பாதிவரை கைகூடவில்லை.
சுவிஸின் கோல் காப்பாளர் மிக அற்புதமாக ஆட்டம் முழுவதும் தடுத்தாடிக்கொண்டிருந்தார்.
பிற்பாதி தொடங்கி 7 நிமிடத்தில் சுவிஸ்வீரர் FERNANDES நெருக்கடி மிகுந்த சூழலுக்குள் ஆட்டத்தின் முதலாவது கோலை இறக்கினார். அதன் பின் ஸ்பானியாவின் வீரர்கள் ஆவேசமாக ஆடினர். ஆயினும் பயன் இல்லை. ஆட்டத்தைச் சமன் செய்வதற்குக்கூட இயலவில்லை. மேலதிக நேரம் 5 நிமிடங்கள் வழங்கப்பட்டும் கூட.
சுவிஸ் அணிக்கு மட்டுமே 4 மஞ்சள் அட்டைகள். அற்புதமாக விளையாடிய சுவிசின் கோல் காப்பாளர் BENAGLIOக்கும் மஞ்சள் அட்டை கிடைத்தது.


சுவிஸ் பயிற்றுநர் Ottmar Hitzfeld

நடுவர்: WEBB/England
விளையாட்டரங்கு:DURBAN
பார்வையாளர்: 60,000
Virakesai



(15/64)சிலி எதிர் ஹொண்டூராஸ் 1:0(1:0)


இன்றைய முதலாட்டத்தில் மத்திய அமெரிக்க நாடான ஹொண்டூராசை எதிர்த்து தென்னமெரிக்கக் நாடான சிலி மோதியது. 34வது நிமிடத்தில் சிலியின் BEAUSEJOUR கோல் ஒன்றை அடித்தார். அதன்பின் பலதாடவைகள் சிலி கோலடிக்க முயன்றது. ஹொண்டூராஸ் கோல்காப்பாளரின் முயற்சியால் அவை தடுக்கப்பட்டன. ஆட்டத்தினை ஒரொ கோலடித்துச் சமன் செய்ய ஹொண்டூராசால் இயலவில்லை.
ஆட்டத்தின் சிறந்த வீரராக சிலியின் BEAUSEJOUR தெரிவானார்.


Virakesariநடுவர்: MAILLET/SEYCHELLES


விளையாட்டரங்கு:NELSPRUIT
பார்வையாளர்: 20,000

2010/06/15

5வது நாள்...15.6.2010


(14/64)பிரேசில் எதிர் வடகொரியா 2:1(0:0)
18 உலககிண்னப்போட்டிகளிலும் பங்குபற்றி இப்போது நடைபெறு 19வது உ.கி.போட்டியிலும்
பங்கு கொள்ளும் பிரேசிலின் ஆரம்ப விளையாட்டு இன்று. வடகொரியாவை அது சந்தித்தது. அதிக கோல்களை ரசிகர்கள் எதிர்பார்த்திருப்பர். ஆனால் வடகொரியா சிறப்பாக விளையாடி பிரேசில் கோல் எதனையும் அடிக்கவிடாது தடுத்து முற்பாதிவரை சமாளித்தது.

பிரேசில் அணியினர் பிற்பாதியில் சுறுசுறுப்பாக விளையாடத் தொடங்கினர். 55வது நிமிடத்தில் மைகொன் சிறப்பான ஒரு அடி மூலம் முதலாவது கோலைப்போட்டார். பின் 72வது நிமிடத்தில் எலானோ 2வது கோலை இறக்கினார். 89வது நிமிடத்தில் கொரியா சிறப்பான ஒரு கோலை அடித்தது. அடித்தவர் ஜி யும் நாம்.

ஆட்டத்தில் அதிக தவறுகள் நடைபெறவில்லை என்பதனைவிட மஞ்சள் அட்டையை காட்டுவதனை நடுவர் தவிர்த்து வந்தார் எனலாம். எனினும் பிரேசிலின் வீரரொரொவருக்கு ஒரு மஞ்சள் அட்டை கொடுக்கப்பட்டது.
நடுவர்: KASSAL /Hungary
விளையாட்டரங்கு:
பார்வையாளர்: 55.686

(13/64)போர்த்துக்கல் எதிர் ஐவரிகோஸ்ற் 0:0(0:0)


இரண்டு கால்பந்தாட்ட நட்சத்திர வீரர்கள் (ஒருவர் போர்த்துக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்ரவர் ஐவரிக்கோஸ்றின் ட்றோக்பா.) உள்ளடங்கிய அணிகள் பங்கு கொள்ளும் போட்டியாகவும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த போட்டியாகவும் 2வது போட்டி கருதப்பட்டது.
ட்றோக்பா தொடக்கத்தி விளையாட்டில் பங்கேற்கவில்லை. அவர் 66ம் நிமிடத்தில் தான் விளையாட வந்தார். ரொனால்டோ போட்டி தொடங்கிய சில நிமிடங்களில் மஞ்சள் அட்டையைத் தரிசிக்க நேர்ந்தது.
இருதரப்பும் மற்றவர்களை வீழ்த்துவதில் அக்கறை காட்டினார்கள். எவருக்கும் கோல் அடிக்க வாய்ப்புக் கிட்டவில்லை. இதற்கிடயே மழைவேறு பெய்துகொண்டிருந்தது.
LARRIONDE/Uruguay
விளையாட்டரங்கு:PORT EIZABETH
பார்வையாளர்:31.034



(12/64) நியூசிலாந்து
எதிர்
ஸ்லவாக்கியா 1:1 (0:0)

இன்றைய முதல் போட்டியில் நியூசிலாந்து ஸ்லவாக்கியாவுக்கு எதிராக விளையாடியது. 49வது நிமிடத்தில் ரொபேட் விற்றெக் அடித்த கோல் மூலம் ஸ்லவாக்கியா முன்னிலை வகித்து இருந் து. 90 நிமிடங்களில் ஆட்டம் முடிவடையும் தருணம் வரை இந்நிலை தொடர்ந்தது.
இறுதி நேரத்தில் வழங்கப்பட்ட 3 நிமிடத்திற்குள் நியுசிலாந்து வீரர் விசன் ரைற் 92வ்து நிமிடத்தில் தலையால் அடித்து ஒரு கோலை இறக்கி போட்டியைச் சமநிலைப்படுத்தினார்.

நடுவர்:DAMON/SaudiArabia
விளையாட்டரங்கு:RUSTENBURG
பார்வையாளர்:23,871