2010/06/12

2வது நாள்...12.6.2010

(05/64)இங்கிலாந்து எதிர் அமெரிக்கா 1:1(1:1)

சமநிலையில் முடிவடந்தது இன்றைய 3வது போட்டி. இங்கிலாந்து அமெரிக்காவுக்கு எதிராக விளையாடிய இப்போட்டியில் போட்டி தொடங்கிய 4வது நிமிடத்தில் இங்கிலாந்து அணியின் தலைவர் STEVEN GERRAD முதல் கோலை அடித்தார். இதுவரை நடைபெற்ற போட்டிகளில் அதிகுறைந்த நேரத்தில் இறங்கிய முதற்கோலாக இது அமைந்துள்ளது.
40ம் நிமிடத்தில் அமெரிக்காவின் DEMPSEY வேகமாக அடித்த பந்தொன்றைத் தடுத்த இங்கிலாந்தின் கோல்காப்பாளர் GREEN அதனை கைநழுவ விட்டதனால் அமெரிக்காவுக்கு வாய்ப்பு அமைய இரண்டு அணியும் சமநிலை கண்டன.
இங்கிலாந்து வீரர்கள் போட்டியில் ஆதிக்கம் செலுத்தினாலும் அமெரிக்காவின் பாதுகாப்பு வீரர்கள் கோல் அடிப்பதனைத் தடுப்பதில் வெற்றி கண்டார்கள். பின்னர் இறுதிவரை கோல் எதுவும் அடிக்கப்படவில்லை.
மஞ்சள் அட்டை -இங்கிலாந்து 3, அமெரிக்கா 3
நடுவர்: SIMON/Brazil
பார்வையாளர்:38.646
விளையாட்டரங்கு:Rustenburg




(04/64)ஆர்ஜன்ரினா எதிர் நைஜீரியா 1:0(1:0)

இன்றைய 2வது போட்டியில் ஆர்ஜன்ரினாவை எதிர்த்து நைஜீரியா விளையாடியது. உ.கி.போட்டிகளின் வரலாற்றில் மிக முக்கியமான்வராகக் குறிக்கப்படுபவராகிய மரடோனாவின் பயிற்றுவிப்பில் ஆர்ஜன்ரீனா களமிறங்கியது.
ஆட்டம் தொடங்கிய 6வது நிமிடத்தில் ஆர்ஜன்ரீனாவின் HEIZE, VERON கொடுத்த பந்தினை லாவகமாக தலையால் இடித்து முதலாவது கோலைப் பெற்றார். அதன்பின் இருதரப்பும் எந்தொகோலையும் அடிக்க முடியவில்லை. ஆர்ஜன்ரினாவின் நட்சத்திரவீரர் MESSI பல தடவைகள் கோல் அடிக்க முயன்றார். ஆயினும் சகலதும் தடுக்கப்பட்டுவிட்டன.

இருதரப்பினருக்கும் தலா ஒவ்வொரு மஞ்சள் அட்டை கொடுக்கப்பட்டது.

நடுவர்: STARKE/Germany
பார்வையாளர்:55,686
விளையாட்டரங்கு:Johannesburg - JEP




(03/64)தென்கொரியா எதிர் கிரேக்கம் 2:0(1:0)

இன்றைய முதலாவது விளையாட்டில் ஆசிய நாடான தென் கொரியா முன்னாள் ஐரோப்பிய நாயகனை 2:0 என்கிறகணக்கில் தோற்கடித்துள்ளது. ஆரம்பம்முதலே கொரியாவின் ஆதிக்கமே விளையாட்டில் மேலோங்கியிருந்தது.

ஆட்டம் ஆரம்பித்து 7வது நிமிடத்தில் தென் கொரியாவின் முதலாவது கோலை LEE JUNG SOO கச்சிதமாக அடித்தார். பின்னர் பிற்பாதி நேரம் தொடங்கி 8வது நிமிடத்தில்PARK JEE-SUNG 2வது கோலை அடித்தார். 30மீற்றர் தூரத்திலிருந்து பந்தினை கிரேக்கவீரர்களிடம் அகப்படாமல் கொண்டுவந்து இந்தக்கோலை (இப்போது கழகம் Manchester United) அவர் அடித்தார். ஆட்டத்தின் கடைசி நிமிடங்களில் கிரேக்கம் மிக கடுமையாக போராடினாலும் கோல் எதனையும் போட இயலவில்லை.

ஆட்டத்தின் இன்னொரு முக்கிய அம்சம் ஒரேயொரு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது மட்டுமே. அது கிரேக்கவீரருக்குக் கானது.

போட்டிக்கு நியூஸிலாந்து நாட்டின் HERTER நடுவராக பணியாற்றினார்.

பார்வையாளர்: 45,000
விளையாட்டரங்கு: Port Elizabeth Stadium. Nelson Mandela bay


2010/06/11

1வது நாள் 11-6-2010

(02/64)பிரான்சு எதிர் உருகுவே 0:0(0:0)
இன்றைய இரண்டாவது ஆட்டத்தில் உ.கி.போட்டிகளில் நாயகர்களா விளங்கியிருந்த இரு அணிகள் மோதின. எவரும் கோலடிக்காமல் ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது.
இரு தரப்பினரும் கோல் எதனையும் போடவில்லை.

ஆனால் உருகுவேயின் வீரரான
LODRIGO 81வது நிமிடத்தில் மஞ்சள், சிவப்பு அட்டைகள் காண்பிக்கப்பட்டு வெளி யேற்றப்பட்டார்.

அவர் தவிர பிரான்சின் 3 வீரர்களுக்கும் உருகுவேயின் 2 வீரர்களுக்கும் மஞ்சல் அட்டைகள் காண்பிக்கப்பட்டன.

போட்டிக்கு ஜப்பான் நாட்டின் NISHIMURA நடுவராக பணியாற்றினார்.

பார்வையாளர்: 64,100
விளையாட்டரங்கு:Green Point Stadium




(01/64)தென் ஆபிரிக்கா எதிர் மெக்சிக்கோ 1:1(0:0)

First goal தென் ஆபிரிக்க அதிபர் ஜேக்கப் சூமோ 19வது உலகக் கிண்ணப் போட்டிகளை ஆரம்பித்து வைத்தார்.
முதலாவது போட்டியில் போட்டியை நடாத்தும் நாடான
தென் ஆபிரிக்கா மெக்சிக்கோவுக்கு எதிராக விளையாடியது. இப் போட்டி வெற்றிதோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்தது.

தென் ஆபிரிக்காவின் TSHABALALA முதலாவது கோலை 55வது நிமிடத்தில் அடித்தார். 2வது கோல் மெக்சிக்கோவின் RAFEAL MARQUEZ ஆல் அடிக்கப்பட்டது.

முதல் போட்டிக்கு உஸ்பெஸ்கிஸ்தான் நாட்டின் IMATOV நடுவராக பணியாற்றினார்.
போட்டியின் போது 4 மஞ்சள் எச்சரிக்கை அட்டைகள் வழங்கப்பட்டன.
ஆட்டநாயகனாக முதலாவது கோலை அடித்தஆபிரிக்காவின் TSHABALALA தெரிவானார்.Tshabalala
பார்வையாளர்: 83,548
விளையாட்டரங்கு:Soccer City Stadium


தொடக்கவிழா நிகழ்வுகள் முடிவடைந்தன

ஆபிரிக்கப் பாரம்பரியம் சார்ந்த கலைவடிவங்கள், நடனங்கள், பாடல்களுடன் உலககிண்ண தொடக்கவிழா நிகழ்வுகள் மிகப்பெரும் கோலாகலத்துடன் நடந்து முடிந்துள்ளது. 94 ஆயிரம் பேரை உள்ளடக்கக்கூடிய ஜொகனஸ்பேர்க்கின் SOCCER CITY விளையாட்டரங்கில் தொடக்கவிழா நடைபெற்றது.

பல்லாயிரம் மக்கள் இத்தொடக்க விழாவில் பங்கு கொண்டனர். தென் ஆபிரிக்க அதிபர் ஜேக்கப் சூமோ, அருட்தந்தை டெஸ்மொண்ட் டூடூ, தலைவர் பிளட்டர் ஆகியோரும் இவ்விழாவில் பங்கேற்றனர்.



2010/06/10

தொடக்கவிழாவில் பங்குகொள்வார் நெல்சன் மண்டேலா

நேற்று இரவில் நடைபெற்ற விபத்து ஒன்றில்
நெல்சன் மண்டேலா அவர்களின் கொள்ளுப்பேர்த்தி
செல்வி செனானி
மண்டேலா
இறந்து போனமை காரணமாக
தொடக்க விழா நிகழ்வுகளில் மண்டேலா பங்கு கொள்ளமாட்டார்
என அறிவிக்கப்பட்டுள்ளது.
11.06.2010
உலககிண்ணப்போட்டி 2010 நாளை ஆரம்பமாக உள்ளது. 204 நாடுகள் பங்கு கொண்ட தகுதி காண் போட்டிகளிலிருந்து தெரிவான31 நாடுகள். போட்டியை நடாத்தும் நாடு என்கிறவகையில் தகுதி காண்போட்டியின்றி தெரிவாகி விட்ட தென் ஆபிரிக்கா. இந்த மாபெரும் கால்பந்தாட்டச் சமரில் மொத்தம் 32 அணிகள்.

இப்போட்டியின் தொடக்கவிழாவில் தென் ஆபிரிக்காவின் மாபெருந்தலைவரும் விடுதலைவீரருமான நெல்சன் மண்டேலா அவர்கள் பங்கு கொள்கின்றார் என்பது சிறப்பம்சம். 91 வயது மண்டேலா அவர்கள் இந்த உலகக்கிண்ணப்போட்டி தென் ஆபிரிக்காவில் நடைபெற வைப்பதற்காக கடும் முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி கண்டவர். "நெல்சன் மண்டேலாவுக்கே இந்தப்போட்டியினை அர்ப்பணிக்கிறேன்"எனக்கூறித் தென் ஆபிரிக்காவின் இன்றைய அதிபர் ஜாகோப் சூமா அவரைப் பெருமைப்படுத்தியுள்ளார். தமது முதுமை நிலை காரணமாக பொது வைபவங்களில் பங்கு கொள்வதனைத் தவிர்த்துவரும் முன்னாள் அதிபர் மண்டேலா தொடக்க விழாவிற்கு வருகை தருவதனைக் காண உலகம் காத்திருக்கின்றது. சில தினங்களின் முன் தென் ஆபிரிக்க அணிவீரர்களைச் சந்தித்து அவர்களுடன் அளவளாவி உற்சாக மூட்டினார் என்பதும் குறிப்பிடத் தகுந்தது.
முதற்போட்டி நடைபெறவுள்ள ஜோகன்ஸ்பேர்க்கின் SOCCER CITY விளையாட்டரங்கினுள் நெல்சன் மண்டேலா அவர்கள் சுற்றிவலம் வந்து மக்களையும் வீரர்களையும் உற்சாகப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.