2010/06/22

12வது நாள்...22.6.2010

முதல் சுற்றின் கடைசிப்பகுதிப் போட்டிகள் இன்று ஆரம்பமாகின்றன. இப்போட்டிகள் நான்கு தினங்களுக்கு நாளொன்றுக்கு 4 போட்டிகள் வீதம் நடைபெறும். இறுதிச்சுற்றுக்குச் செல்லும் அணிகள் 4 நாளிலும் முடிவாகிவிடும்.




36/64 ஆர்ஜன்ரினா எதிர் கிரேக்கம்.2

முற்போட்டிகள் ஒன்றிலும் தோல்வியுறாத ஆர்ஜன்ரீனா கிரேக்கத்துடன் மோதிய விளையாட்டு இது. கிரேக்கம் ஒரு வெற்றியுடன் இருந்தது. முற்பாதியில் எவரும் கோல் எதனையும் அடிக்கவில்லை. பிற்பாதியில் ஆர்ஜன்ரீனாவினர் 2 கோல்களை அடித்தனர். 77ம் நிமிடத்தில் Martin DEMICHELIS ம் 89ம் நிமிடத்தில் Martin PALARMO ம் கோல்களை அடித்தனர். இதன் மூலம் எல்லாப்போட்டிகளிலும் வென்று 9 புள்ளிகளுடன் இறுதிச்சுற்றுக்கு செல்லும் முதல் அணி என்னும் சிறப்பு ஆர்ஜன்ரீனாவைச் சேர்கிறது.


நடுவர்:Ravshan IRMATOV / Uzbeskistan
விளையாட்டரங்கு:POLOKWANE



35/64 நைஜீரியா எதிர் தென்கொரியா.
2:2 (1:1)

3புள்ளிகளுடன் உள்ள தென்கொரிய அணி புள்ளிகள் எதுவுமற்று இருக்கின்ற
நைஜீரியாவுடன் ஆடும் ஆட்டம் இது.நைஜீரியாவின்
Kalu Ucheமுதல் கோலை 12வது நிமிடத்தில் இறக்கினார். 38ம் நிமிடத்தில் அடுத்த கோலை கொரியாவின்Lee Sung Soo இறக்கினார். முதல்பாதி சமநிலையில் முடிந்தது. பிற்பாதியில் கொரியவீர்ர் Park chu Jungஅடுத்த கோலை இறக்கினார். 69ம் நிமிடத்தில்
நைஜீரியாவின் AYEGBENI கடைசிக்கோலை இறக்க ஆட்டம் சமமாக நிறைவு பெற்றது. மொத்தமாக 4புள்ளிகளைப் பெற்ற கொரியா குழுவில் 2ம் இடத்தைப் பெற்று இறுதிச்சுற்றுக்குத் தெரிவான முதல் ஆசியப் பிராந்தியநாடானது. நைஜீரியா போட்டியிலிருந்து வெளியேறியது.


நடுவர்: Olegario BENQUERENCA (PORTUGAL)
விளையாட்டரங்கு: DURBAN

34/64 பிரான்சு எதிர் தென் ஆபிரிக்கா
1:2 (0:2)

இப்போட்டியிலும் இரண்டு அணிகளும் முன்னர் தலா ஒரு புள்ளியுடன் இருந்தன. கடந்த உலககிண்ணப்போட்டியில் இறுதிப்போட்டியில் விளையாடிய முன்னாள் சம்பியன் பிரான்சும் உலககிண்ணப்போட்டி 2010ஐ நடாத்தும் தென் ஆபிரிக்காவும்
இங்கு மோதுவது குறிப்பிடத்தகுந்தது. பிரான்சின் விளையாட்டு குறித்த சர்ச்சைகள் வேறு. முதல் பாதியில் தென் ஆபிரிக்காவின் வீரர்கள் Bongani KHUMALO 20 நிமிடத்திலும் Katlego MPHELA 37 நிமிடத்திலும் 2கோல்களை இறக்கினார்கள். பிரான்சு வீரர் Florent MALOUDA ஒருகோலை இறக்கினார். பிரான்சு இவ்வுலககிண்ணப்போட்டியில் அடித்த ஒரேயொரு கோல் இதுவாக அமைந்தது. பிரான்சு வீரர் GOURCUFF க்கு சிவப்பு அட்டை வழங்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதுவே பிரான்சினது தென் ஆபிரிக்காவினதும் இறுதி
ஆட்டமாக அமைந்தது. இரண்டும் குழுவில் 4ம் 3ம் இடங்களுக்கு வந்துள்ளன.
Katlego MPHELA ஆட்ட நாயகனானார்.

நடுவர்: Oscar Ruiz/ Columbia
விளையாட்டரங்கு:MANGUANG BLOEMFONTAEIN Free Stadium


33/64 மெக்சிக்கோ எதிர் உருகுவே 0:1 (0:1)

தலா 4 புள்ளிகளுடன் இருந்த இரண்டு அணிகளும் மோதின. Luis SUAREZ 43ம் நிமிடத்தில் அடித்த ஒருகோல் மட்டுமே இப்போட்டியில் அடிக்கப்பட்டது. அதன்மூலம் உருகுவே வெற்றியையும் குழுவில் முதல் இடத்தினையும் பெற்றுக் கொண்டது. ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார். 3 மஞ்சள் அட்டைகள் மட்டுமே வழங்கப்பட்டன. இரண்டு அணிகளும் இறுதிச் சுற்றுக்கு தெரிவாகிவிட்டன.

நடுவர்:Vikter Kassai/ Hungary
விளையாட்டரங்கு:Rustenburg
பார்வையாளர்:





2010/06/21

11வது நாள்...21.6.2010


32/64 ஸ்பானியா
எதிர் ஹொண்டூராஸ்
2
:0(1:0)

சுற்றுப்போட்டியில் பாதி -32/64- இத்துடன் முடிவடைகின்றது.
முதல் சுற்றில் 2வது பகுதியின் இறுதிப்போட்டி இது. இத்துடன் அனைத்து அணிகளும் 2வது விளையாட்டை முடித்துள்ளன. உலகதரத்தில் 2வதான ஸ்பானியா 38வதான ஹொண்டூராஸை சந்திக்கிறது. இதற்கு முன்னர் ஒருதடவை போட்டியிட்ட இவை சமநிலையில் போட்டியை முடித்தன.
முதல் போட்டியில் தோற்று புள்ளிகள் எதுவுமற்று இன்று 2வது மோதலை தொடக்கின. 17வது நிமிடத்தில் David VILLA ஒருகோலை அடித்து கோல் கணக்கைத் தொடக்கினார். போட்டியில் ஸ்பானியா ஆதிக்கம் கொண்டிருந்து பலதடவை கோலடிக்க முயன்றாலும் பயனிருக்கவில்லை.
பின் பாதி ஆட்டம் தொடங்கி 6ம் நிமிடத்தில்
David VILLA
மேலும் ஒருகோலை அடித்தார். 63ம் நிமிடத்தில் ஸ்பானியாவுக்கு ஒரு தண்டனை உதைக்கு வாய்ப்புகிட்டியது.
David VILLA
வே அதனை அடித்தார். அடிக்கப்பட்ட் பந்து வெளியே சென்றமையால் ஒரு இலகுவான வாய்ப்பை அவர்கள் தவற விட்டார்கள். அதன் பின் இருதரப்பும் கோல் எதையும் அடிக்கவில்ல. ஸ்பானியா 3 புள்ளிகளை பெற்று குழுவில் 2ம் இடத்துக்கு வந்துள்ளது.

நடுவர்:Yuichi NISHIMURA/Japan
விளையாட்டரங்கு:Johanesburg
பார்வையாளர்:45,000


31/64
சிலி
எதிர்
சுவிஸ் 1
:0(0:0)
இன்றைய இரண்டாவ்து போட்டியில் சுவிஸ் சிலிக்கு எதிராக விளையாடியது.
இரண்டு அணிகளும் தங்கள் முன்னைய போட்டிகளில் வெற்றிபெற்று தலைக்கு 3 புள்ளிகளுடன் இருந்தன.போட்டி தொடங்கி 2வது நிமிடத்தில் சிலியின் வீரர் ZUAZO க்கு எச்சரிக்கை அட்டைகொடுபட்டது. 25ம் நிமிடங்களுக்குள்ளாக 3 சிலிவீரர் ஒருசுவிஸ் வீரர் என எச்சரிக்கை 4அட்டைகள் பெற்றார்கள். தொடர்ந்து 31ம் நிமிடத்தில் சுவிஸ்வீரர் BEHRAMI சிவப்பு அட்டை கொடுத்து வெளியேற்றப்பட்டார்.

இருஅணிகளும் சமநிலையில் விளையாடிக்கொண்டு இருந்தன. கோலடிக்கும் சந்தர்ப்பங்கள் குறைவாகவே கிடைத்தன. எதிரணிவீர
ரை வீழ்த்துவதிலேயே இருதரப்பினரும் ஈடுபட்டனர். விதியை மீறிய (FOUL)விளையாட்டை விளையாடியே 5 அட்டைகளை பெற்று முதல் பாதிநேரத்தை நிறைவு செய்தனர்.
பின் பாதியிலும் ஆட்டத்தின் போக்கு மாற்வில்லை. 48,60,60,61 என 4 மஞ்சள் அட்டைகள். இருதரப்புக்கும் சமமாக. 75ம் நிமிடத்தில் நிலைமை மாறியது. சிலியின் வீரர் GONZALEZ ஒருகோலை அடித்து சிலியை முன்னிலைக்கு இட்டுச் சென்றார். மேலும் கோலடிக்கும் சில ச்ந்தர்பங்களை சிலி தவற்விட்டது. 90ம் நிமிடத்தில் சுவிஸ் சில் செ,மீற்றர் அளவில் ஒரு கோலை தவறவிட்டு தோல்வியடைய சிலி இறுதிச்சுற்றுக்கான தனது இருப்பை உறுதி செய்தது.ஆட்டத்தில் மொத்தம் 10 அட்டைகள். 6 சிலி 4(1சிவப்பு) சுவிஸ்

நடுவர்: Al Ghamdi/SaudiArabia
விளையாட்டரங்கு:Nelson Mandela bay, Port Elizabeth
பார்வையாளர்: 35,000


30/64 போர்த்துக்கல் எதிர் வடகொரியா0:0(0:0)

முதல் போட்டியில் சமநிலைகண்டு 1 புள்ளியுடன் உள்ள போர்த்துக்கல் வடகொரியாவுடன் மோதும் ஆட்டம் இன்றைய முதல் ஆட்டம். 3வது தரப்பாக மழையும் பெய்து கொண்டிருக்கிறது. போர்த்துக்கலின் அணித்தலைவர் ரொனால்டோ கடந்த போட்டியில் ஒரு மஞ்சள் அட்டையைப் பெற்றிருந்தார்
போட்டியின் ஆரம்பத்தில் கொரியவீரர்கள் துடிப்பாக ஆடினர். கோலடிப்பதற்கு சில முயற்சிகளை மேற்கொண்டனர். அனால் 27ம் நிமிடத்தில் போர்த்துக்கல் வீரர் R. MEIRELES அதிரடியாக முதல் கோலை இறக்கினார். முதல் பாதி முவுவரை கோல் எதுவும் இல்லை பதிலாக இருதரப்பும் ஒவ்வொரு மஞ்சள் அட்டையைப் பெற்றிருந்தன.

பிற்பாதி தொடங்கியபோது மழை சற்று ஓய்ந்து இருந்த்து.53ம் நிமிடத்தில் 2வது கோலை போர்த்துக்கல் இறக்கியது. இறக்கியவீரர் SIM AO. தொடர்ந்து 3 நிமிடங்களில் 3வது கோலும் அடிக்கப்பட்டது. ALMEIDAதலையால் இடித்து அழகாக அக்கோலை இறக்கினார் தொடர்ந்து 4 நிமிடங்களில் 4வது கோல் அடிக்கப்பட்டது. அடித்தவர் TIAGO. 81ம் நிமிடத்தில் LIEDSON போர்த்துக்கலின் 5வது கோலைப்போட்டார். 87ம் நிமிடம் RONALDO 6வது கோலையும் 89வது நிமிடத்தில் TIAGO 7வது கோலையும் அடித்தனர்.

மிக வலுவான நிலையில் போர்த்துக்கல் சுற்றுப்போட்டியிலிருந்து வடகொரியாவின் வெளியேற்றத்தை உறுதிப்படுத்தியது. 30வது போட்டியான இதுவே ஓர் ஆட்டத்தில் 7:0 என்கிற உச்சமான வெற்றி நிலையாகும். மழை, கோல்மழை இரண்டையும் ரசிகர்கள் அனுபவித்தனர். அணித்தலைவர் ரொனால்டோவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.



நடுவர்: Pablo POZO/Chile
விளையாட்டரங்கு: CAPE TOWN Green Point Stadium
பார்வையாளர்:60,000