2010/06/16

6வது நாள்...16.6.2010



(17/64)தென் ஆபிரிக்கா எதிர் உருகுவே 0:3(0:1)

முதல் சுற்றில் 2வது போட்டியை தென் ஆபிரிக்காவும் உருகுவேயும் தொடங்கின. தனது சொந்த மண்ணில் மோசமான தோல்வியையும் சிவப்பு அட்டை வெளியேற்றத்தையும் தென் ஆபிரிக்க அணி சந்தித்த சோகமயமான போட்டியாக இப்போட்டி அமைந்து போனது.

24வது நிமிடத்தில் உருகுவே தன் முதற்கோலை அடித்தது. அடித்தவர் FORLAN. அதன் பின் இருதரப்பினரும் கடுமையாக போராடினர்.
முதன்முறையாக சிவப்பு அட்டை கொடுத்து கோல் காப்பாளரை வெளியேற்றிய சம்பவம் 77ம் நிமிடத்தில் இடம்பெற்றது. கோலடிப்பதற்கு பந்தைக் கொண்டு வந்த வீரரை காப்பாளர்(KHUNE) வீழ்த்தியமையால் நடுவர் அவரை வெளியேற்ற புதிய
காப்பாளர் (JOSEPHS) அழைக்கப்பட்டார். அதனால் விளையாடிய வீரரான ஒருவரும் கூட ஆட்டத்திலிருந்து வெளியேற நேர்ந்தது. இதன் பின் வழங்கப்பட்ட தண்டனை உதையை பயன்படுத்தி இலகுவாக மற்றொரு கோலை
FORLAN அடித்தார். மேலதிக நேரத்தில் இன்னொருகோலை PEREIRAஅடிக்க ஆட்டம் 0:3 என்கிற வகையில் முடிவடைந்தது.


நடுவர்: BUSACCA/Switzerland


விளையாட்டரங்கு:PRETORIA
பார்வையாளர்: 50,000


Virakesari



(16/64)சுவிஸ் எதிர் ஸ்பானியா 1:0(0:0)

மிகப்பரபரப்பான போட்டி
முதல் சுற்றில் முதல் பகுதியின் இறுதிப்போட்டி இது. இத்துடன் சகல அணிகளும் ஒரு ஆட்டத்தினை சந்தித்து முடித்துள்ளன. பலமான அணியாகவும் கிண்ணத்தைக் கைபற்றும் என எதிர்வுகூறப்பட்ட ஸ்பானியாவுக்கு எதிராக சுவிச்சர்லாந்து மோதிய ஆட்டம் இது. தொடக்கம் முதலே ஸ்பானியாவே விளையாட்டில் ஆதிக்கம் கொண்டிருந்தது. ஆயினும் கோலடிக்க அது மேற்கொண்ட பலமுயற்சிகள் முற்பாதிவரை கைகூடவில்லை.
சுவிஸின் கோல் காப்பாளர் மிக அற்புதமாக ஆட்டம் முழுவதும் தடுத்தாடிக்கொண்டிருந்தார்.
பிற்பாதி தொடங்கி 7 நிமிடத்தில் சுவிஸ்வீரர் FERNANDES நெருக்கடி மிகுந்த சூழலுக்குள் ஆட்டத்தின் முதலாவது கோலை இறக்கினார். அதன் பின் ஸ்பானியாவின் வீரர்கள் ஆவேசமாக ஆடினர். ஆயினும் பயன் இல்லை. ஆட்டத்தைச் சமன் செய்வதற்குக்கூட இயலவில்லை. மேலதிக நேரம் 5 நிமிடங்கள் வழங்கப்பட்டும் கூட.
சுவிஸ் அணிக்கு மட்டுமே 4 மஞ்சள் அட்டைகள். அற்புதமாக விளையாடிய சுவிசின் கோல் காப்பாளர் BENAGLIOக்கும் மஞ்சள் அட்டை கிடைத்தது.


சுவிஸ் பயிற்றுநர் Ottmar Hitzfeld

நடுவர்: WEBB/England
விளையாட்டரங்கு:DURBAN
பார்வையாளர்: 60,000
Virakesai



(15/64)சிலி எதிர் ஹொண்டூராஸ் 1:0(1:0)


இன்றைய முதலாட்டத்தில் மத்திய அமெரிக்க நாடான ஹொண்டூராசை எதிர்த்து தென்னமெரிக்கக் நாடான சிலி மோதியது. 34வது நிமிடத்தில் சிலியின் BEAUSEJOUR கோல் ஒன்றை அடித்தார். அதன்பின் பலதாடவைகள் சிலி கோலடிக்க முயன்றது. ஹொண்டூராஸ் கோல்காப்பாளரின் முயற்சியால் அவை தடுக்கப்பட்டன. ஆட்டத்தினை ஒரொ கோலடித்துச் சமன் செய்ய ஹொண்டூராசால் இயலவில்லை.
ஆட்டத்தின் சிறந்த வீரராக சிலியின் BEAUSEJOUR தெரிவானார்.


Virakesariநடுவர்: MAILLET/SEYCHELLES


விளையாட்டரங்கு:NELSPRUIT
பார்வையாளர்: 20,000

2010/06/15

5வது நாள்...15.6.2010


(14/64)பிரேசில் எதிர் வடகொரியா 2:1(0:0)
18 உலககிண்னப்போட்டிகளிலும் பங்குபற்றி இப்போது நடைபெறு 19வது உ.கி.போட்டியிலும்
பங்கு கொள்ளும் பிரேசிலின் ஆரம்ப விளையாட்டு இன்று. வடகொரியாவை அது சந்தித்தது. அதிக கோல்களை ரசிகர்கள் எதிர்பார்த்திருப்பர். ஆனால் வடகொரியா சிறப்பாக விளையாடி பிரேசில் கோல் எதனையும் அடிக்கவிடாது தடுத்து முற்பாதிவரை சமாளித்தது.

பிரேசில் அணியினர் பிற்பாதியில் சுறுசுறுப்பாக விளையாடத் தொடங்கினர். 55வது நிமிடத்தில் மைகொன் சிறப்பான ஒரு அடி மூலம் முதலாவது கோலைப்போட்டார். பின் 72வது நிமிடத்தில் எலானோ 2வது கோலை இறக்கினார். 89வது நிமிடத்தில் கொரியா சிறப்பான ஒரு கோலை அடித்தது. அடித்தவர் ஜி யும் நாம்.

ஆட்டத்தில் அதிக தவறுகள் நடைபெறவில்லை என்பதனைவிட மஞ்சள் அட்டையை காட்டுவதனை நடுவர் தவிர்த்து வந்தார் எனலாம். எனினும் பிரேசிலின் வீரரொரொவருக்கு ஒரு மஞ்சள் அட்டை கொடுக்கப்பட்டது.
நடுவர்: KASSAL /Hungary
விளையாட்டரங்கு:
பார்வையாளர்: 55.686

(13/64)போர்த்துக்கல் எதிர் ஐவரிகோஸ்ற் 0:0(0:0)


இரண்டு கால்பந்தாட்ட நட்சத்திர வீரர்கள் (ஒருவர் போர்த்துக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்ரவர் ஐவரிக்கோஸ்றின் ட்றோக்பா.) உள்ளடங்கிய அணிகள் பங்கு கொள்ளும் போட்டியாகவும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த போட்டியாகவும் 2வது போட்டி கருதப்பட்டது.
ட்றோக்பா தொடக்கத்தி விளையாட்டில் பங்கேற்கவில்லை. அவர் 66ம் நிமிடத்தில் தான் விளையாட வந்தார். ரொனால்டோ போட்டி தொடங்கிய சில நிமிடங்களில் மஞ்சள் அட்டையைத் தரிசிக்க நேர்ந்தது.
இருதரப்பும் மற்றவர்களை வீழ்த்துவதில் அக்கறை காட்டினார்கள். எவருக்கும் கோல் அடிக்க வாய்ப்புக் கிட்டவில்லை. இதற்கிடயே மழைவேறு பெய்துகொண்டிருந்தது.
LARRIONDE/Uruguay
விளையாட்டரங்கு:PORT EIZABETH
பார்வையாளர்:31.034



(12/64) நியூசிலாந்து
எதிர்
ஸ்லவாக்கியா 1:1 (0:0)

இன்றைய முதல் போட்டியில் நியூசிலாந்து ஸ்லவாக்கியாவுக்கு எதிராக விளையாடியது. 49வது நிமிடத்தில் ரொபேட் விற்றெக் அடித்த கோல் மூலம் ஸ்லவாக்கியா முன்னிலை வகித்து இருந் து. 90 நிமிடங்களில் ஆட்டம் முடிவடையும் தருணம் வரை இந்நிலை தொடர்ந்தது.
இறுதி நேரத்தில் வழங்கப்பட்ட 3 நிமிடத்திற்குள் நியுசிலாந்து வீரர் விசன் ரைற் 92வ்து நிமிடத்தில் தலையால் அடித்து ஒரு கோலை இறக்கி போட்டியைச் சமநிலைப்படுத்தினார்.

நடுவர்:DAMON/SaudiArabia
விளையாட்டரங்கு:RUSTENBURG
பார்வையாளர்:23,871

2010/06/14

4வது நாள்...14.6.2010


(11/64)இத்தாலி எதிர் பரகுவே 1:1(0:1)
இன்றைய,நடப்புச் சம்பியனான இத்தாலி பரகுவேயுடன் மோதிய 3வது ஆட்டம்
மிக விறுவிறுப்பாக இருக்குமென்கிற எதிர்பார்ப்பு பிழைத்துப்போனது. முற்பாதியில் பரகுவே ஒரு கோல் பிற்பாதியில் இத்தாலி ஒரு கோல் என ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது. மழையில் நனைந்தபடி வீரர்கள் விளையாடினார்கள். இன்றைய ஆட்டத்தின் நாயகன் பரகுவேயின் பாதுகாப்பு வீரர் ALCARAZ ஆவார்.


நடுவர்: ARCHUNNDIA/Mexico


(10/64)ஜப்பான் எதிர் கமரூன் 1:0(1:0)

இன்றைய 2வது போட்டியில் ஜப்பானுக்கு எதிராக கமரூன் விளையாடியது. ஜப்பானின் ஹொண்டா போட்ட கோலைத்தவிர வேறு எவரும் கோல் போடவில்லை. பிற்பாதியில் கமரூன் அணியினர் கோலொன்றைப்போட கடும் முயற்சி செய்தனர். ஆனாலும் ஜப்பானிய வீரர்கள் அந்த முயற்சிகளை முறியடித்துவிட்டனர்.


நடுவர்: BENQUERENCA/Portugal


(09/64)நெதர்லாந்து எதிர் டென்மார்க் 2:0 (1:0)

இன்றைய முதல் போட்டியில்
நெதர்லாந்து டென்மார்க்கைத் தோற்கடித்தது. இந்தத் தடவை முதன் முதலாக தனது அணியின் பக்கத்துக்கே ஒருவர் கோல அடித்த சம்பவம் இன்றய போட்டியின் முக்கிய அம்சமாகு. டென்மார்க் வீரர் Simon Poulsan நெதர்லாந்து வீரர் கோலுக்காக அடித்த பந்தை திசைதிருப்பிவிட தலையால் தடியபோது அது திசமாறி அவரது பக்கத்துக்கே சென்றிவிட்டதனால் நெதர்லாந்து 1:0 என முன்னிலை வகிக்க ஏதுவானது.

நடுவர்:LANNOY Stephane/France

2010/06/13

3வது நாள்...13.6.2010


(08/64)ஜேர்மனி எதிர் அவுஸ்திரேலியா 4:0(2:0)

ஜேர்மனிய கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும்கொண்டாட்டமாக அமைந்துவிட்டது ஜேர்மனியின் இன்றைய ஆரம்ப அசத்தலான ஆட்டம்.
4:0 என்கிற கணக்கில் அவுஸ்திரேலியாவைத் தோற்கடித்து நம்பிக்கையுடன் 19வது உ.கி.இல் கால்பதித்துள்ளது. 3நாட்களாக நடைபெற்ற போட்டிகளில் கோல்கள் பெருமளவு அடிக்கப்படவில்லை. எனவே இன்றைய ஜேர்மனியின் ஆட்டம் கால்பந்து ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. இன்று மொத்தம் 6 கோல்கள் அடிக்கப்பட்டன.
கோல்களை அடித்தவர்களும் நேரமும் வருமாறு PODOLSKI 8 KLOSE 27 MUELLER 68 CACAU 70
மஞ்சள் அட்டை ஜேர்மனி 2 அவுஸ்திரேலியா 3

அவுஸ்திரேலியா சிவப்பு அட்டை 1

இன்றைய தினம் கோல்கள் கூடுதலாக அடிக்கப்பட்டது போல சிகப்பு அட்டைகளும் ஒவ்வொரு போட்டிக்கும் ஒவ்வொன்றாக 3 வழங்கப்பட்டு வீரர்கள் வெளியேற்றப்பட்டனர் என்பதும் முக்கியமான அம்சமாகும்.

இன்று அடித்த கோல், உ.கி.இல் குளோசவின் 11வது கோலாகும். அதிககோல் வரிசையில் அவர் 5வது இடத்துக்கு முன்னேறியள்ளார். முதலிடத்தில் ரொனால்டோ! 15 கோல்கள்!!


நடுவர்:MARCO RODRIGUEZ----Mexico

விளையாட்டரங்கு:DURBAN STADIUM

பார்வையாளர்:

(07/64)சேர்பியா எதிர் கானா. 0:1(0:0)

மிகப்பரபரப்பாக நடைபெற்ற இன்றைய 2வது போட்டியில் கானா வெற்றி பெற்றது. அவ்வெற்றி முதலாவது தண்டனை உதை மூலம் அதற்குக் கிடைத்தது. இருதரப்பும் கோல் எதுவுமின்றி போராடிக்கொண்டிருந்த வேளையில் சேர்பியவீரற் KUZMANOVIC தண்டனை பகுதிக்குள் கையால் பந்தினை மறித்ததால் தண்டனை உதை வழங்க நடுவர் முடிவெடுத்தார். அதனை நன்கு பயன்படுத்திய ASAMAOH GYAN ஒருகோலை பிரச்சனையின்றி அடித்தார்.

நடுவர்:BALDASSI/Argentina

விளையாட்டரங்கு:PRETORIA

பார்வையாளர்:



(06/64)அல்ஜீரியா எதிர் ஸ்லவேனியா 1:0(0:0)
இன்றைய முதலாவது ஆட்டம் அல்ஜீரியாவுக்கு எதிராக ஸ்லவேனியாவின் போட்டியாக அமைந்தது. இப்போட்டியில் முதல் பாதியில் எவருக்கும் கோலடிக்கும் சந்தர்ப்பம் கிட்டவில்லை. பிற்பாதியில் ஸ்லவேனியா மட்டும் ஒருகோலை அடித்தது. உ.கி. வரலாற்றில் ஸ்லவேனியாவின் முதல் வெற்றியாக இது பதிவு செய்யப்பட்டுள்ளது.

அல்ஜீரியாவின் ABDELKADER GHEZZAL நடுவர் சிவப்பு அட்டை கொடுத்து வெளியேற்றினார். இன்றைய உலக கிண்ணப்போட்டியில் முதலாவது சிவப்பு அட்டை வழங்கல் இதுவாகும்.
நடுவர்:BATRES/Guatemala

விளையாட்டரங்கு:PETER MOKABA STADIUM: Polokwane

பார்வையாளர் 35,000